மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வயதில் மூத்த பெண்ணுடன் 2வது திருமணம் : பிரபல நடிகரின் பக்கா பிளான்!!

1231

விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஆனா ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளத்தில் திருமண செய்தியை இருவரும் வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் திரையுலகிற்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், விஷ்ணுவிஷால் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இதற்கிடையில், ராட்சசன் படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபால்வுடன் திருமணம் என்ற வதந்திகளும் வந்தன. ஆனால் அதனை மறுத்துவிட்டனர் இருவரும்.

ஆனால் இதற்கிடையில், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்களும் வெளியானது.

தகவல்கள் ஒருபுறம் கசிந்த வண்ணம் இருக்க, இவர்கள் இருவரும் புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த செய்திகள் வைரலாகி வருகிறது. மேலும், பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.