சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதனால், திட்டமிட்டபடி 2021 பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் அளவிற்குத்தான் முடிந்திருக்கும் என்கிறார்கள். இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடித்தால்தான் அதன்பின் மூன்று மாத காலத்தில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியும்.
கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். ஆகவே, அவர் இல்லாத மற்ற காட்சிகளை படப்பிடிப்பு ஆரம்பமான பின் முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என படத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளதால் அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டி உள்ளது. அனைத்தையும் முடித்தாலும் படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.