90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய ஹீரோயின் நடிகை குஷ்பு. நம்ம தமிழ் ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டியது எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
வடநாட்டு வரவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்தவுடன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வர உள்ளார் குஷ்பூ. சமீபத்தில் குஷ்பு உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் செம வைரல் ஆனது.
தமிழ் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார் குஷ்பு. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க இருக்கிறார். மேலும் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கேட்டு வருகிறார்களாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.