இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக விளங்குபவர்.
இவர் தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2014 ஆண்டு நடந்த ஒரு விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு நிகழ்ச்சியின் மேடையில் நடிகர் சல்மான் கான் “ரகுமான் ஒரு ஆவெரேஜ் ஆன இசையமைப்பாளர்” என கிண்டல் அடித்தார், அதற்கு ரகுமான் கைகொடுக்க மறுத்து பாக்கெட்டில் இருந்த கையை எடுக்காமலே நின்று கொண்டு இருந்தார்.
மேலும் அதன் பின்னர் ஒரு பத்திரிகையாளர் ‘நீங்கள் இன்னும் சல்மான் உடன் எப்போது பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை’ என்றதற்கு “அவர் முதலில் எனக்கு பிடித்த மாதிரி படம் நடிக்கட்டும்” என கூறியுள்ளார்.