கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் குடும்பப் படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருப்பதால், தயாரிப்பாளர்கள், நடிகர்களின் `மோஸ்ட் வான்டட்’ இயக்குநர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் சிவா.
விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் `கோப்ரா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனது 60-வது படத்தை கமிட் செய்திருக்கிறார் விக்ரம். `பீமா’ படத்திலிருந்து தற்போது உறுதியாகியிருக்கும் 60-வது படம் வரைக்கும் எல்லாமே சிட்டி கதைக்களத்தை மையமாகக் கொண்ட படங்கள் என்பதால், `தூள்’, `சாமி’ போன்ற ஒரு கிராமத்துப் பின்னணி கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விக்ரம், இயக்குநர் சிவாவிடம் கதை கேட்க இருப்பதாகத் தகவல் வர, அதுகுறித்து விசாரித்தோம்.
`விஸ்வாசம்’ படத்தை முடித்த பிறகு, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்கு ரெடியாக இருந்தார், இயக்குநர் `சிறுத்தை’ சிவா. ஆனால், திடீரென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், `அண்ணாத்த’ பட வேலைகளில் இறங்கினார். தற்போது `அண்ணாத்த’ படத்தின் பாதி காட்சிகளை படமாக்கியிருக்கும் நிலையில், கொ ரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்த பிறகோ அல்லது கொரோனாவுக்கான த டுப்பு மருந்து கண்டுபிடித்ததற்குப் பிறகோதான் `அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாராம். அதுவரைக்கும் படப்பிடிப்பு நடத்தப்படாது என்கிற உறுதியைத் தயாரிப்பு நிறுவனமும் ரஜினிக்கு கொடுத்திருக்கிறது.
`அண்ணாத்த’ படத்தை முடித்த பிறகு, இயக்குநர் சிவா ஏற்கெனவே கமிட் செய்து வைத்திருக்கும் சூர்யா படத்தின் வேலைகளைத்தான் ஆரம்பிப்பார் எனச் சொல்கிறார்கள். ஆனால், சூர்யா தற்போது தனது 39-வது படமாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் `அ ருவா’ படத்தையும், 40-வது படமாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் `வாடிவாசல்’ படத்தையும் கமிட் செய்திருக்கிறார். இதற்கிடையில், `கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் படம் ஒன்றிலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் எல்லாமே பக்காவாக ப்ளான் செய்யப்பட்டிருப்பதால், `அண்ணாத்த’ படத்தை சிவா முடித்துவிட்டு வந்ததும் சூர்யாவை வைத்து இயக்குவதில் கால்ஷீட் பி ரச்சினை வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையில், நடிகர் விஜய்யும் இயக்குநர் சிவாவுடன் இணைந்து வேலைபார்க்க விருப்பமாக இருப்பதாக நண்பர்கள் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்.
விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க் முடிந்திருக்கும் நிலையில், லாக்டெளனிற்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த படமான விஜய்யின் 66-வது படத்தை `மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்கிற பட்டியலில் இயக்குநர் சிவாவும் இருக்கிறார். `அண்ணாத்த’ படத்தை முடித்த பிறகு, சூர்யாவின் படத்தை சிவாவால் இயக்க முடியாமல்போனால், விஜய்யின் 66-வது படத்தை சிவா இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.
கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் குடும்பப் படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருப்பதால்தான், தயாரிப்பாளர்களும் நடிகர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு `மோஸ்ட் வான்டட்’ இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார், சிவா. `அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு, அவர் இயக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியல்… சூர்யா, விஜய், தற்போது விக்ரம் என நீண்டுகொண்டேபோகிறது.