தர்ஷா குப்தா..
கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.
ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.