கடைசி மூச்சு வரை தமிழர்களுக்கு விசுவாசமாக இருப்பேன்- சிம்ரன்..

755

நடிகை சிம்ரன்..

90 களின் மையத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி மற்றும் சிறந்த கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சிம்ரன் 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரே சமயத்தில் இரு வெளியீடுகளைக் கொண்ட அதிர்ஷ்டம் அவருக்கு இருந்தது. ஒரே நாளில் சிம்ரனின் ஒன்ஸ் மோர் மற்றும் விஐபி வெளியானது.

விஜய் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். வி.ஐ.பி படத்தை எஸ்.டி.சபா இயக்கி இருந்தார்.

இது ஒரு மல்டிஸ்டாரர் திரைப்படமாக இருந்தது. இதில் பிரபு தேவா, அப்பாஸ் மற்றும் ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இரண்டு திரைப்படங்களும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.

வி.ஐ.பி வெளியான 23 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிம்ரன் அவரது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “23 ஆண்டுகளுக்குப் பிறகு, லெஜெண்ட் நடிகர் சிவாஜி கணேசன் ஐயாவுடன் பணிபுரிந்த நினைவுகள் மிகவும் தெளிவானவை.

கனவு நினைவானது அவருடன் நடித்த போது. அவரின் ஆசீர்வாதமும் கற்றலும் தான் நான் இந்த அளவில் இருப்பதற்கு காரணம் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.