ஸ்ருதி ஹாசன்..
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் அப்பா கமல் அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்து ஜொலிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் ஆளுமை படைத்த நடிகர் கமலின் வாரிசு என்பதால் மிக சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.
ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் 2000ம் காலகட்டத்தில் இருந்தே ஹே ராம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது தன்னை பற்றி அப்டேட் கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது கிரேசி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.