பிரியங்கா மோகன்..
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் வளைத்துப்போட்டவர் நடிகை பிரியங்கா மோகன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் 2019ல் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
அதன் பிறகு நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த பிரியங்கா மோகன் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து பிரபலமாகினார்.
அதனை அடுத்து எதற்கும் துணிந்தவன் , டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு ட்ரிப் நடித்துள்ள ப்ரியங்கா அங்கு ஒரு ஹோட்டலில் பசியில் அமர்ந்து கூலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.