மேகா ஆகாஷ்..
அழகிய நடிகையான மேகா ஆகாஷ் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்த படம் வெளியாகவே இல்லை.
அதன் பிறகு கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதில் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். பின்னர் ரஜினியின் பேட்ட, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’,ஆகிய படங்கள் கைவசம் கொண்டுள்ளார். மேலும், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் மேகா ஆகாஷ் தற்போது சிம்பிள் லுக்கில் செம அழகாய் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.