அங்காடித்தெரு நடிகர் மகேஷின் தற்போதைய நிலைமை இதுதான் : வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!!

1098

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித்தெரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மகேஷ். திண்டுக்கல்லை சேர்ந்த இவருக்கு இந்த பட வாய்ப்பு திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்லில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.

இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றாலும் இதன் பின் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்களில் சுவடு தெரியாமல் அழிந்து போனது. தனது தற்போதைய நிலைமையை பற்றி மகேஷ் கூறுகையில் அங்காடித் தெரு படத்தில் நடித்த போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று கூட தெரியாது.

அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை. அதனால் தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கேட்டார்.

சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டுட்டேன். தவிர நான் நடித்த சில படங்களும் சரியா ஓடவில்லை என வருத்தத்துடன் கூறினார்.