கண்ணீர் விட்டு அழுத நடுவர் : ஒரு தாயின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

933

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரின் திறமை நடுவர்கள் முதல் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

மனநலம் குன்றிய நபர் ஒருவர் பாடல் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருக்கு இசையை தவிர எதுவும் தெரியவில்லை. இது குறித்து அவரின் அம்மா கருத்து வெளியிடும் போது,

என்னுடைய மகன் வித்தியாசமானவன் தான். அது எனக்கு தெரியும், ஆனால் ஒரு போதும் எம்மைவிட குறைந்தவன் கிடையாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, என் மகன் பிறந்தது முதல் ஆசிரியர் கண்டுப்பிடிப்பது வரை அனைத்துக்கும் நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். நிச்சயம் அவரின் முயற்சி இல்லை என்றால் எதுவும் நடந்திருக்காது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.