பைக் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை நடிகை!!

1054

தமிழில் கங்காரு, ஸ்கெட்ச், மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது கங்கனம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் இவர் வேகமாக பைக் ஓட்டிக் கொண்டு போக அவரது முன் கேமரா ஒரு காரில் பயணித்துள்ளது.

திடீரென கார் நிறுத்தப்பட பைக்கில் வந்த நடிகை அதிர்ஷ்டவசமாக அந்த வேகத்தை கட்டுப்படுத்தி காரில் மோதாமல் நிறுத்தியுள்ளார். அந்த சம்பவம் படக்குழுவினர் அனைவருக்கும் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது.

நடிகை நிறுத்தவில்லை என்றால் பெரிய விபத்து நேர்ந்திருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். அந்த சம்பவத்தால் ஸ்ரீ பிரியங்காவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர்.