தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை தொடர்ந்து மூன்றாவது அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.
மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் எல்லாம் சென்றால் நல்லாருக்கும் என்று சில பிரபலங்களின் பெயர்களை நடிகை தமன்னா கூறியுள்ளார்.
அதில் முதலாவதாக இருப்பது நடிகை ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்ததாக காஜல், தனுஷ், விஷால், கார்த்தி உள்ளனர். இவர்கள் எல்லாம் தான் எனது நண்பர்கள் என்றும் கூறியுள்ளார், தமன்னா.