அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
நடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகி போன தீபாவளிக்கு ரிலீசான படம் தான் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.
இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.
மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.
தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். தற்போது புடவையில் வைர நகைகளோடு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.