நடிகை சாய் பல்லவிக்கு அடித்த லக்!!

1144

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போல் தெலுங்கு சினிமாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளார். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிகண்ட படங்கள்.

இப்போது அவர் அங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் இயக்கி வருகிறார், தற்போது அப்படத்தை RRR என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இதில் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை எட்கர் ஜோன்ஸ் நடிப்பதாக இருந்து பின் அவர் திடீரென விலகினார்.
அந்த வேடத்தில் பாலிவுட் நடிகைகளான ஷ்ரத்தா கபூர் அல்லது பரிணீதி சோப்ராவை நடிக்க வைக்க படக்குழு பார்த்தனர்.

இந்த நேரத்தில் படக்குழு நடிகை சாய் பல்லவியை அந்த வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.