நடிகையும், தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் கவர்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் குஷ்பு.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு, இது என்ன உங்கள் தேனிலவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது சுற்றுலாவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படமா என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, அது எனது தேனிலவு புகைப்படம் கிடையாது. எனது திரைப்படங்களில் நான் இதுபோன்ற ஆடையை அணிந்தது கிடையாது. இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பதிவிட்டு பரபரப்பாக செயல்பட்டு வரும் குஷ்பு, இதற்கு இடையிலும் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.