“வனிதா விஜயகுமாரின் மகள்களின் படிப்பு மற்றும் திருமண செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்” பிரபல தயாரிப்பாளர் அதிரடி!

383

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான்.

அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என திட்டவட்டமாக இருந்தார்.

அதை தொடர்ந்து கோபம் கொண்ட வனிதா தனது தனிப்பட்ட முடிவுக்கு எதிராகப் பேசும் மூன்றாவது நபர் ரவீந்தர் அவளுக்காக ஏதாவது செய்வாரா என்று ஒரு உதரணத்துக்காக,

அவளுக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் தேவை என்றும், அதை அவர் அவளுக்குக் கொடுப்பாரா என்றும் கூறினார். ரவிந்தர் தயக்கமின்றி அந்த பணத்தை தனக்குக் கொடுப்பேன் என்று கூறியது மட்டுமல்லாமல்,

அவரது இரு மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயினிதாவின் படிப்பு செலவுகள் உட்பட அவர்களின் திருமணச் செலவுகளை கவனித்துக்கொள்வேன் என்றும் கூறினார். இது ஒரு Media ஸ்டண்ட் அல்ல என்று அவர் தனது தாயின் மீது சத்தியம் செய்துள்ளார்.