நடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

851

நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.

இதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.

இது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.