தமிழ் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் முழு பட்டியல் : முழுவிபரம் உள்ளே!!

830

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நேற்று ஆரம்பமாகியுள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் முதல் நாள் காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் உள்நுழைந்தனர். போட்டியாளர்கள் விவரம் பற்றி லைவ் அப்டேட்ஸ் இதோ..

1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்) : பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு களமிறங்கி உள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரைகளில் இவர் நடித்து பிரபலமானவர்.

2. லோஸ்லியா (செய்தி வாசிப்பாளர்) : 2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.

3. சாக்‌ஷி அகர்வால் : 3-வது போட்டியாளராக காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால் இடம் பெற்றுள்ளார். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.

4. ஜாங்கிரி மதுமிதா (காமெடி நடிகை) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

5. கவின் (நடிகர்) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் ஆண் போட்டியாளராக கவின் பங்கேற்றுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

6. அபிராமி (நேர்கொண்ட பார்வை பட நடிகை) : பிக் பாஸ் 3வது சீசனில் 6வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

7.சரவணன் (பருத்தி வீரன் சித்தப்பு) : 7வது போட்டியாளராக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

8. வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயகுமாரின் மகள்) : 8வது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

9.சேரன் (இயக்குனர்) : 9வது போட்டியாளராக இயக்கனரும், நடிகருமான சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

10.ஷெரின் (துள்ளுவதோ இளமை, விசில் பட ஹீரோயின்) : 10வது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.

11.மோகன் வைத்தியா (பாடகர், வீணையாளர், நடிகர்) : 11வது போட்டியாளராக மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதன் போல் இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.

12. சாண்டி (டான்ஸ் மாஸ்டர்) : பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகைதந்துள்ள போட்டியாளர் நடன இயக்குநர் சாண்டி.

13.தர்ஷன் (மாடலிங், மிஸ்டர் ஸ்ரீலங்கன் டைட்டில் வின்னர்) பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகை தந்துள்ள போட்டியாளர் தர்ஷன். இவர் இலங்கைத் தமிழர்; மாடலிங் துறையில் உள்ளார்.

14.முகேன் ராவ் (பாடகர்) : பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் மலேசிய தமிழரும், பாடகருமான முகென் ராவ் வருகை தந்துள்ளார்.

15.ரேஷ்மா (விமான பணிப்பெண், தொகுப்பாளனி, நடிகை) : பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.