பிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன்? பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்!!

1407

தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் 15 போட்டியாளர்களில் ஒருவராக சென்றுள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் இவரின் முன்னாள் காதலியும் நடிகையுமான காஜல் பசுபதி, சாண்டி பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வதை கண்டவுடன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ஸ்மைலி சிம்பிள் போட்டிருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் முதல் காதலோ என்று கேட்க, அதற்கு அவர் நான் அட்ட கத்தி தினேஷ் மாதிரி, எனக்கு முதல் காதல் இல்லை, கடைசி காதல் என்று குறிப்பிட்டார்.

அப்புறம் ஏன் பிரேக் அப் என்ற போது, லவ் டார்ச்சர் ஓவரா செய்துட்டேன், வல்லவன் ரீமா சென் மாதிர் டார்ச்சர் கொடுத்தா எந்த பையன் தான் தாங்குவான் என்று கூற, இதைக் கண்ட இணையவாசிகள் பரவாயில்லப்பா என் மேல் தான் தப்பு ஒத்துக்கிட்டதே பெரிய மனசு என்று பாராட்டி வருகின்றனர்.