ஒரு பக்கம் மோதல், மறுபக்கம் காதல் : தொடங்கியது பிக் பாஸ் பரபரப்பு!!

934

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியின் பேவரைட்டான காதலும், மோதலும் இன்றைய எப்பிசோட்டில் அமர்க்களமாக தொடங்குகிறது.

முதல் இரண்டு பாகங்களை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வனிதா விஜயகுமார் மீது அனைவரும் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம், எப்போதும் சர்ச்சையில் சிக்குவதும், சர்ச்சையாக பேசுவதும் வனிதாவுக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுவது போல என்பதால், மற்ற போட்டியாளர்கள் வனிதாவை கண்டாலே பீதியடைகிறார்களாம்.

இந்த நிலையில், போட்டியாளர்கள் பயந்தது போல வனிதா தனது ஆட்டத்தை நேற்று முதல் தொடங்கிவிட்டார். போட்டியாளர்கள் அனைவரும் உணவு உண்ணும்போது நடிகை சாக்‌ஷி அகர்வால், தனக்கு இந்த உணவு பிடிக்காது, என்று கூறுகிறார். அதற்கு மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருக்க, வனிதாவோ “பிடிக்காதா அல்லது உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதா?” என்று கேள்வி எழுப்பவதோடு, சாக்‌ஷி அகர்வாலை பேச விடாமல் அவரிடம் கோபமாக “பிடிக்காதா” என்று கேட்கிறர். “என்னை புல்லா பேச விடுங்க” என்று சாக்‌ஷி அகர்வால் கெஞ்சுகிறார்.

இப்படி வனிதாவின் மோதல் ஒரு பக்கம் ஆரம்பித்தாலும், சாக்‌ஷி அகர்வால் தனக்கு ஏற்பட்ட சோகத்தை நடிகர் கவனிடம் சொல்லி வருத்தப்படுவது மறுபக்கம் அரங்கேறுகிறது. மொத்தத்தில், பிக் பாஸின் இன்றை எப்பிசோட்டில் மோதலும், காதலும் அரங்கேறுகிறது.