கைதாகிறார் மீரா மிதுன்? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ்!!

1163

மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன்.

அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால்க்கு பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இணைந்து ஷெரின் மற்றும் வனிதாவும் அவரை டார்கெட் செய்ய ஆரம்பித்ததால், வேதனை தாங்க முடியாமல் மீரா நேற்று கதறி அழுதார்.

இந்த நிலையில் இவரிடம் இருந்து மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டம் சமீபத்தில் பறிக்கப்பட்டது. மேலும் இவர் மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் சிக்கினார். அப்போது அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகாரும் கூறியிருந்தனர். இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற சமயத்தில் அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘மீரா மீது 3 காவல் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரிக்க போலீஸ் தேடிக்கொண்டு இருக்கும் நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.

ஆனால் திடீரென அவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து விட்டார். ஒருவர் மீது வழக்கு இருக்கும் நிலையில் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அனுமதி கிடைத்தது என்பது தெரியவில்லை. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாமல் தேடி வந்தோம்.

ஆனால் இப்போதும் அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. இனி அடுத்தகட்டமாக நாங்கள் போலீசில் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லப்போகிறோம். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீசாரால் கைது செய்யப்படலாம்.

இவர் என்னை மட்டுமல்ல மொத்தம் 4 பேரை ஏமாற்றியுள்ளார். ஏற்கனவே அபிராமிக்கும், சாக்ஷிக்கும், மீராவை தெரியும். மேலும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகி பட்டம் வேறு பெண்ணிற்கு வழங்கப்பட்டது.

அந்த பெண்ணின் காதலர் தான் பீக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த மாடல் தர்ஷன்’ என்று பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார். இவரின் இந்த பேட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.