மேனேஜருடன் படுத்ததால் தான் இப்படி இருக்கேன் என்றார்கள்.. இலங்கை மாடலை கஷ்டப்படுத்திய அந்த நிகழ்வு!!

1398

பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து லக்சரி பட்ஜெட்டுக்காக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், நான்காவது நாளான இன்று இலங்கையைச் சேர்ந்த மாடலான தர்ஷன் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கஷ்டங்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தார். அப்போது, மனதை புன்படுத்திய நபர் குறித்து கூறுங்கள் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார்.

அது குறித்து பேசிய தர்ஷன், நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பிரபல மாடலிங் மேனஜரான பிரைன் என்பவருடன் படுத்ததால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான் என்று மிகவும் மோசமாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.

மேலும், பலர் என்னை விமர்சித்தனர். நான் இன்டர்நேஷனல் போட்டிக்கு செல்ல ஸ்பான்சர் இல்லாமல் போனதால் என் அம்மா தன்னுடைய நகையை விற்று தருகிறேன் நீ விமானத்திலாவது சென்று வந்துவிடு என கூறினார் என தர்ஷன் உருக்கமாக பேசியுள்ளார்.