அஜித்தின் அடுத்த படம்…
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும்.அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற குழப்பம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது.
சிலர் கார்த்திக் நரேன் என்கிறார்கள், சிலர் வெங்கட் பிரபு என்கிறார்கள், சில புஷ்கர் காயத்ரி என்கிறார்கள், சிலர் விஷ்ணுவர்தன் என்கிறார்கள்.
ஆனால் தற்போதைய தகவல் என்ன என்றால், பிரபல இயக்குனர் சுதா கொங்கரா தான் அஜித்தின் அடுத்த இயக்குனர் என்று உறுதியாக சொல்கிறார்கள்.
இவர் ஏற்கனவே விஜய் படத்திற்கான கதையை சொல்லி ஓகே செய்துவிட்டார். ஆனால் நம்ம முருகதாஸ் நடுவில் புகுந்து Spoil பண்ணிட்டார். தற்போது அந்த கதையில் தல அஜித் நடிக்க உள்ளாராம்.
விஜய்யை மனதில் வைத்து எழுதிய இந்த கதையில் ஒரு சில காட்சிகளை தல அஜித் மாற்றம் செய்ய சொல்லி உள்ளாராம்.
வலிமை முடிந்தவுடன் படு ஜோராக ஷூட்டிங் நடக்கும் என கோலிவுட் காரர்கள் காதை கடிக்கிறார்கள்.