காக்க காக்க படத்திற்கு முன், சூர்யாவின் படங்கள் சிலது விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும், எந்த படமும் வசூலில் ஜெயிக்கவில்லை.
சூர்யாவின் முதல் வசூல் ரீதியான வெற்றி படம் என்றால் அது காக்க காக்க படம்தான். அந்த படம் அஜித் மற்றும் விக்ரம் போன்றவர்கள் நடிக்க வேண்டிய படம்.
இந்த படத்துக்கு பிறகுதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்று இண்டஸ்ட்ரியில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து அதன் இயக்குனர் கௌதம் மேனன் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட கௌதம், படத்தில் சூர்யாவை உயரமானவராக காண்பிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம்பிடித்ததாக சொல்லியுள்ளார்.
பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டு இருக்கிறார்.
அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நடிகை நீலிமா ராணி தனது 12-வது திருமண நாளை கொண்டாடி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் வில்லியாகவும் கதாநாயகியாகவும் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நீலிமாராணி.
நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம். அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.
ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.
தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் தான்.
நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.
இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகை சமந்தாவின் சிறு வயது அறிய புகைப்படங்கள் மற்றும் இதுவரை நீங்கள் பார்த்திராத நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
நடிகர்களின் ரசிகர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான அன்பை அவ்வபோது போஸ்டர்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் விவேகானந்தர் போலவும் சித்தரித்து அவ்வபோது அவரது ரசிகர்கள் சர்ச்சையான போஸ்டர்களை ஒட்டுவார்கள்.
சமீபத்தில் கூட அதுபோல போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யபட்டது. இதெல்லாம் எப்படியாவது அந்த நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டால் நாமும் உள்ளே சென்று வட்டச்செயலாளர் அளவுக்காவது பதவியை வாங்கிவிடலாம் என்ற நப்பாசையில்தான்.
அந்த வகையில் இப்போது சூர்யா ரசிகர்களும் இதுபோன்ற முட்டாள்தனமாக போஸ்டர் அடித்து ஒட்டும் செயலில் இறங்கியுள்ளனர்.
அதில் ‘திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!’ எனக் கூறியுள்ளனர். இதுவரை சூர்யா அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக எங்கேயும் சொல்லாத நிலையில் ரசிகர்களின் இந்த போஸ்டர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனை யாராலும் மறக்க முடியாது. ஆரம்பம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தாலும் மக்களிடம் பின் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இந்நிகழ்ச்சியின் மூலம் காதல் ஜோடிகளாக பேசப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா. தீவிர இவர்களது காதல் பேசப்பட்டது, ஆனால் ஆரவ் முதலில் இருந்தே இதில் ஈடுபாடு காட்டவில்லை.
நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்ட சேர்வார்கள் என பல ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஆரவிற்கும்-ராஹே என்பவருக்கும் திருமணம் நடந்தது.
ஆரவ் திருமணத்தில் சுஜா வருணி கலந்துகொண்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
ஒரு ரசிகர் ஓவியா எங்கே அக்கா என்று கேட்க சுஜா அவர் வீட்டில் இருப்பார் என அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் இந்த லாக் டவுனில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். படங்களுக்காக பிஸியாக இருந்த பிரபலங்களுக்கு இது பொன்னான காலம் என்றே கூறலாம்.
பலருக்கு இந்த லாக் டவுனில் திருமணம் நடந்துள்ளது, சிலருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரபலங்களின் அந்த சந்தோஷ செய்தியையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.
இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் மறுமண தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட நாளாக காதலித்து வந்த விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலா என்பவரை
அவரது பிறந்தநாளான இன்று சிம்பிளாக மோதிரம் மாற்றிக் கொண்டு மறுமணம் செய்து கொண்டார்.
அந்த புகைப்படங்களை ஷேர் செய்து விஷ்ணு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Happy birthday @Guttajwala
New start to LIFE..
Lets be positive and work towards a better future for us,Aryan,our families,friends and people around..