KGF புகழ் பிரபல நடிகரின் வீட்டில் விஷேசம்…
கடந்த 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூலை அள்ளிய படம் KGF. கன்னட மொழியில் ஹீரோ யஷ் நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் முந்தைய படத்தை விட பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு வந்த வேளையில் கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வில்லன் சஞ்சய் தத்தின் தோற்றம் ஆகியன மிரட்டலாக வெளியாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
நேற்று நடிகர் யஷ்ஷின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் நடைபெற்றது.
ஆன்மிக பாரம்பரிய முறைப்படி இவ்விழா நடைபெற,
குழந்தைக்கு யதர்வ் என பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram