நடிகை கனிகா வெளியிட்ட புகைப்படம் – திட்டும் ரசிகர்கள்..!

நடிகை கனிகா..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தற்போது, ஓனம் வாழ்த்து கூறி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை புத்தர் பக்கத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் புத்தர் சிலை மீது அமர்ந்திருப்பதால் கடுமையாக திட்டி வருகிறார்கள். கன்னா பின்னான்னு பல இடங்களை பார்த்துட்டு புத்தருக்கு வக்காலத்து வாங்க வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!! அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை ஓவர்டேக் செய்வாரா?

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்..

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன்.

இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும் அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யூ எனும் வில்லன் கதாபாத்திரமும் தான்.

மேலும் தனி ஒருவன் 2 குறித்து மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை 2 வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டனர்.

ஆனால் தற்போது வரை அப்படதிற்கான எந்த ஒரு பணிகளும் இதுவரை துவங்கவில்லை. மேலும் கூடிய விரைவில் தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறாராம். ஆனால் கால்சீட் பி ரச்சனை ஏற்பட்டால் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஆனால் சித்தார்த் அபிமன்யூ எனும் வில்லன் கதாபாத்திரத்தை இவர்களால் ஓவர்டேக் செய்ய முடியுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து அ திகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எ திர்பார்க்கப்படுகிறது.

நடிகை பூர்ணிமா பாக்கியராஜிற்கு வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சோகம்- வருத்தத்தில் குடும்பம்!

பூர்ணிமா பாக்கியராஜிற்கு ஏற்பட்ட சோகம்..

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.

இவர் நடித்த பல படங்கள் செம ஹிட். இவரது மகன் ஷாந்தனு பாக்யராஜ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார், அடுத்து அவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது.

இன்று காலை வயது முதிர்வு காரணமாக பூர்ணிமா பாக்யராஜின் அம்மா 85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பால் பூர்ணிமா பாக்யராஜின் குடும்பம் பெரிய சோகத்தில் உள்ளனர்.

நடிகரின் பிறந்தநாள் கொண்டாட கட்-அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் மரணம்- அதிர்ச்சி சம்பவம்..!

கட்-அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் மரணம்…

இன்று தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பிறந்தநாள்.

இதனை கொண்டாட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் பவன் கல்யாணின் வீட்டின் முன் ப்ளக்ஸ் வைக்க சோக சேகர், அருணாச்சலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 ரசிகர்கள் ஏறியுள்ளனர்.

25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியுள்ளது.

மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு பவன் கல்யாணும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழக்குவதாக கூறியுள்ளார்.

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் மனைவி- புகைப்படத்துடன் வந்த செய்தி !!

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செல்வராகவன் மனைவி…

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட வெற்றி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

என்னை பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று தனுஷ் ஒரு படத்தில் வசனம் பேசுவார்.

அப்படி தான் இவர் இயக்கும் படங்களும் இருக்கும். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதாவது சுவாரஸ்ய விஷயம் கண்ணில் படும்.

இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அவ்வப்போது டுவிட்டரில் சில வாழ்க்கை தத்துவங்களை செல்வராகவன் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

தற்போது அவரது மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தல அஜித்தின் ஜிம் டிரைனர் ஒரு பெண்ணா? சிக்ஸ் பேக் சீக்ரெட்க்கு இவர் தான் காரணமாம்..!

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்…

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமாக பிரதிபலித்து வரும் நடிகர்களில் மிக முக்கியமான நடிகர் தல அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.

இவரின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படம் மிக சிறப்பான முறையில் உருவாகி வருகிறது.

கொரோனா காரணமாக தள்ளிப்போய் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித் தனது விவேகம் படத்திற்காக கடின உழைப்பால் சிக்ஸ் பேக் வைத்து ஃபைட் சீண்ஸ் நடித்து மாஸ் காட்டினார்.

மேலும் தற்போது வலிமை படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைக்க கடினமாக உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறாராம்.

இந்நிலையில் வலிமை படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க அஜித்திற்கு உடற்பயிற்சி அளித்து வருபவர் ஒரு பெண் ஜிம் டிரைனர் என தகவல்கள் வெளியாகி.

ஆம், ஹைதராபாத்தை சேர்ந்த கிரண் டேம்லா எனும் பெண்தான் தல அஜித்துக்கு உடற்பயிற்சி டிரைனராக தற்போது இருந்து வருகிறாராம்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு எடுத்த அதிரடி முடிவு!!

சிம்பு எடுத்த அ திரடி முடிவு…

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களுடன் எடுத்துக்கொ ண்ட புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வந்தார்.

கொரோனா காரணமாக தள்ளிப்போய் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அ ரசு விதித்துள்ள தளர்வுகளின் கீழ் மீண்டும் துவங்கவுள்ளது.

இந்நிலையில் அரசு இந்த சினிமா படப்பிடிப்புகள் துவங்கலாம் என அறிவித்தவுடன், தயாரிப்பாளருக்கு போன் செய்து படப்பிடிப்பை துவங்கலாம் என கூறியுள்ளாராம் நடிகர் சிம்பு.

இதனால் க ண்டிப்பாக கூடிய விரைவில் மாநாடு படத்தில் இருந்து ஏதாவது அப்டேட்டை எ திர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய கெட்டப்- வர்ணித்து தள்ளும் ரசிகர்கள் !!

நடிகர் சிவகார்த்திகேயன்…

தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர்.

இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த லாக்டவுனில் தாடியும் மீசையுமாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது கிளீன் ஷேவ் செய்து கொண்டு பார்ப்பதற்கே செம கியூட்டாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட பல ரசிகர்களும் அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சித்ராவிற்கு பதிலடி கொடுத்த சிவானி..!

சிவானி பதிலடி…

தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி- சூழ்ந்த ரசிகர்கள், புகைப்படங்கள் இதோ..!

நடிகை சாய் பல்லவி..

நடிகை சாய் பல்லவி என்றாலே போதும் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.

அந்த பெயருக்கே அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள். சின்ன வயதில் திரையுலகிற்கு வந்த சாய் பல்லவி தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

லாக் டவுன் முடிந்து இப்போது அனைத்து வேலைகளும் தொடங்கியுள்ளது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இவர் அண்மையில் திருச்சி எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்துள்ளார்.

அவரை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த மற்றவர்கள் அவருடன் செல்பி எடுத்தும், ஆட்டோ கிராப் வாங்கவும் சூழ்ந்துவிட்டனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.