தல – தளபதி ரசிகர்கள் செய்த செயல்…!
அஜித்தும், விஜய்யும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள், அவர்களின் குடும்பத்தாரும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். சங்கீதா விஜய்யும், ஷாலினியும் தோழிகள். இது எல்லாமே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும்.
இருந்தாலும் Facebook, Twitter என அடிக்கடி இவர்கள் இரு தரப்பும் மோ திக் கொ ள்வது சகஜம். இவர்களின் வ ன்மத்தை ஹேஷ்டேகுகளாக உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்ட் செய்த கதை எல்லாம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், நேற்று விஜய் ரசிகர் ஒருவர் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் உறவினருக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டு ட்வீட் செய்தார்.
அதை பார்த்த அஜித் ரசிகர்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளனர்.
தல ரசிகர்களின் இந்த பாசத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அசந்துவிட்டனர். அதன் பிறகே #AjithVijayPRIDEOFINDIA என்கிற ஹேஷ்டேகை டிரெண்டாக்கவிட்டுள்ளனர்.
அஜித், விஜய் ரசிகர்களின் ட்வீட்டுகளை பார்த்த சமூக வலைதளவாசிகள் கண்ணை கசக்கி மீண்டும் ஒருமுறை பார்க்கின்றனர்.