கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் குணால்.
இவர் மும்பையைச் சேர்ந்த இவர், அணுராதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், இவருக்கும், அணுராதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஒருநாள் திடீரென்று அணுராதா கோபமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, குணால் இளம்நடிகையான லவீனா என்பவரை காதலித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான், அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதையடுத்து போலிசார், காதல் பிரச்சனையால் தான் த ற்கொ லை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் லவீனாவை கைது செய்து விசாரித்த நிலையில் பின்னர் அவரை விடுவித்தனர்.
பின்னர், சினிமா வாய்ப்பு இல்லாததும் அவர் இம்முடிவை எடுக்க காரணம் என கூறப்பட்டது. ஆனால் இன்றளவும் குணால் மரணத்தில் மர்மம் நீடித்து தான் வருகிறது.
இந்நிலையில், குணால் நடிகராக மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக மரணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நடிகை கங்கனா ரனாவத் தனது முதல் காதல் முதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகள் உடலுறவு கொள்வதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் உடலுறவு கொள்வதை பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியடைய வேண்டும், நான் பாலியல் உறவில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் என்று கூறினார்.
15 வயதில் காதல் கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார் கங்கனா ரனாவத். அதாவது நான் 15 வயதிலேயே ஆசிரியர் ஒருவரின் மீது காதல் கொண்டேன். துப்பட்டாவை வைத்து.. அப்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது சந்த் சுப்பா பாதல் பாடல் வெளியானது. அதனால் அந்த ஆசிரியரை மயக்க என்னுடைய துப்பட்டாவை பயன்படுத்தினேன்.
என்னுடைய முதல் ரிலேஷன்ஷிப் 17-18 வயதில் வந்தது. நான் அப்போது சண்டிகரில் இருந்தேன். என்னுடைய ஃபிரன்ட் அவளுடைய பாய் ஃபிரன்டுடன், டேட்டிங் சென்றிருந்தாள். அப்போது அவரின் நண்பரும் நானும் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.
அவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். ரொம்ப க்யூட்டாக இருப்பார். அவருக்கு 28 வயசு. எனக்கு 16- 17 வயசு இருக்கும். அவர் மீது நான் காதல் கொண்டேன். அவர் என்னை ஒரு குழந்தையை போன்று பார்த்தார். காதல் விளையாட்டுக்கு நான் புதியவள் என்பதை கண்டுபிடித்துவிட்டார். என் இதயமே நொறுங்கிவிட்டது.
நான் அவரை வெறித்தனமாக காதலித்தேன். நான் அவருக்கு மெஸேஜ் அனுப்பினேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் வளருவேன் என்று. இவ்வாறு தனது காதல் குறித்து கூறிய கங்கனா ரனாவத், தனது முதல் முத்தம் குறித்தும் பேசினார்.
முத்தம் குறித்து அவர் பேசியதாவது “என்னால் அவரை முத்தமிட முடியவில்லை, அதனால் நான் என் உள்ளங்கையில் முத்தமிடுவதைப் பயிற்சி செய்தேன். எனது முதல் முத்தம் மேஜிக் போன்று அல்ல, அது குழப்பமாக இருந்தது. என் வாய் உறைந்துவிட்டது. அப்போது அவர் உன் வாயை கொஞ்சமாவது அசை என்றார். இவ்வாறு தனது முதல் காதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசினார்.
கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சத்தமில்லாமல் திரும்பவும் பற்ற வைத்த ‘வத்திக்குச்சி’
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் வனிதா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கோபத்தில் திட்ட ஆரம்பித்து விட்டனர். பிக் பாஸ் சீசன் 3யில் ஆரம்பத்தில் நேரடி போட்டியாளராகவும், பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் சென்று வரலாற்றை மாற்றியவர் வனிதா.
பைனஸ்சின் போது சாண்டி கூறியது போல, பிக் பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விதை போட்டவர் வனிதா தான். அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு வத்திக்குச்சி என்ற பட்டப்பெயரே வைக்கப்பட்டது. பதனீ பதனீ என்ற ரேஞ்சில் சத்தமில்லாமல் பற்ற வைத்து விட்டு, போட்டியாளர்களை அடித்துக் கொள்ள வைத்து விடுவார்.
வத்திக்குச்சி வனிதா பிக் பாஸ் வீட்டில் தான் இப்படி என்றால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அதே வேலையைத் தான் அவர் செய்துள்ளார். ஆனால் இம்முறை அவர் மாட்டிவிட்டது போட்டியாளர்களை அல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில எடிட்டர்களை.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தது நமக்குத் தெரிந்த விசயம் தான். கமலும் கூட சில எபிசோட்களில் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஆனால் பிக் பாஸ் குரலைப் போலவே அந்த தொழிலாளர்களின் முகங்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லை.
பிக் பாஸ் எடிட்டர்ஸ் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகம் பாராட்டு மற்றும் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நிகழ்ச்சியின் படத்தொகுப்பாளர்கள் தான். அதிலும் குறிப்பாக புரொமோக்களில் கவிலியா காதலுக்கு செம பிஜிஎம் போட்டு தெறிக்க விட்டார்கள்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் கடைசி தினத்தில் பிக் பாஸ் படத்தொகுப்பாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நான்கு படத்தொகுப்பாளர்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த கோபத்தில் கொந்தளித்து விட்டனர் நெட்டிசன்கள்.
‘ஓ நீங்க தானா அது. யாரு தேவையில்லையோ அவங்க பத்தின நெகடிவ்வா காட்டறது. யாரு உங்களுக்கோ முக்கியமோ அவங்களைப் பத்தி பாசிடிவ்வா காட்டறது. உங்களைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம்’ என சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.
ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர்.
மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அவரது நான்காவது நினைவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்.
மன்னார்குடியில் இருந்து வந்து மாபெரும் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டு, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா. தமிழ் மட்டுமே பேச தெரிந்தாலும், தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை தான் அவர் சினிமா உலகத்திற்குள் வர காரணமாய் இருந்தது. 5 வயதிலேயே நாடக மேடை ஏறிய சிறுமி கோபி சாந்தா, தன்னால் முடிந்த அளவிற்கு குடும்பத்தின் வறுமையை போக்குவோமென்ற நல்லெண்ணத்தில் நடிக்க தொடங்கினார். கோபி சாந்தாவிற்கு மனோரமா என்று பெயர் சூட்டியவர் நாடக இயக்குனர் திருவேங்கடம்.
அப்படி தொடங்கிய மனோராவின் நாடக கலை பயணம், கவிஞர் கண்ணதாசன் மூலம் சினிமா துறையில் 1958ஆம் ஆண்டில் மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் தொடங்கப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே நகைச்சுவையில் கலக்கியவர் மனோரமா.
கோபி சாந்தா, மனோரமாவாக உருமாறி சுமார் 55 ஆண்டுகளாக யாராலும் நெருங்கக் கூட முடியாத அளவிற்கு சினிமாவையே உயிர் மூச்சாக சுவாசித்து இறக்கும் தருவாய் வரையிலும், நடிகையாகவே வாழ்ந்து புகழின் உச்சியில் இருந்தவர். அறிஞர் அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதியோடு நாடகங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் உடன் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்த பெருமை மனோரமாவை சேரும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் ஆச்சி மனோரமா.
இவர் நாடகக் கலைஞர்களையும், சினிமா கலைஞர்களையும் எந்த வேறுபாடுமின்றி ஒரே மாதிரி தான் பாவிப்பார். நகைச்சுவை நடிகர் நாகேஷ் உடன் இணைந்து இவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் உள்ளங்களில் பசுமையாய் பூத்து குலுங்குகிறது. நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக யதார்த்தமாக நடித்தவர்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் இன்றும் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. சின்னத்தம்பி, சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் அவரது நடிப்பு நம்மை நெகிழ வைத்துள்ளது. மனைவி, அம்மா, மாமியார், பாட்டி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது.
கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, விவேக் என அனைத்து நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடிக்கும் போதும் அவர்களது காம்பினேஷன் பிரமாதமாக இருக்கும். இவருடன் நடிக்காத கதாநாயகர்களே இல்லை. தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் என பல இன்னல்களை சந்தித்தாலும் அவருடன் நடித்த ஒவ்வொரு கலைஞர்களையும் அவரது சொந்த உறவுகளாகவே எண்ணியவர்.
நடிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியுள்ளார். டில்லிக்கு ராஜனாலும் பாட்டி சொல்ல தட்டாதே என இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலம். நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நாடங்களில் நடிப்பதை மிகவும் பெருமையாக கருதும் ஒரு மகா கலைஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆச்சி மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தார்கள்.
ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. அவர் நம் மத்தியில் இல்லையே தவிர, அவரின் ஆசிகளும், அன்பும், திறமையும், நடிப்பும் நம்மோடு என்றும் பின்னிப்பிணைந்து தான் இருக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும், வெப் சீரிஸாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கே தனி போட்டி சினிமாவில் நிலவி வருகிறது.
இதில் படத்தை இயக்குனர் விஜய் இயக்க அதில் பாலிவுட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைவி என பெயர் வைத்து அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. அரசியல் படத்தில் மட்டுமே அவ்வாறான கேரக்டர்களில் நடிப்பேன்.
இப்படத்தில் முதல் பாதி ஜெயலலிதாவின் 20 முதல் 30, 40 வயது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் இருக்கும். இரண்டாம் பாதியில் அரசியல் சம்மந்தப்பட்டதாக, எம்.ஜி.ஆர், கருணாநிதியுடான அரசியல் விஷயங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.
உலகத்தில் தமிழ் பேசும் மக்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பேசுகின்றனர்.
ஆனால் பிரபல பாலிவுட் நடிகை நீது கபூர் தற்போது தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளது பலரையும் கோபமடைய வைத்துள்ளது. நீது கபூர் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் அம்மா என்பது கூடுதல் தகவல்.
தற்போது குடும்பத்துடன் இத்தாலி சென்றுள்ள அவர், அங்கு இருப்பவர்கள் போல Italian accent ல் பேச முற்பட்டபோது தான் பேசியது தமிழர்கள் போலத்தான் இருந்தது என அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் தன்ஷிகா அவரை சந்தித்தாராம்.
அவர் ஹீரோயினாக நடித்த ‘யோகி டா’ படத்தின் சில காட்சிகளை ரஜினிக்கு போட்டு காட்டினாராம். படத்தில் வரும் சண்டை காட்சியை பார்த்து வியந்த ரஜினி “நல்லவேளை நீ ஆணாக பிறக்கவில்லை. என்னைப்போன்ற ஹீரோக்கள் காணாமல் போயிருப்பார்கள்” என கூறினாராம்.
அதை கேட்டு தன்ஷிகாவிற்கு புல்லரித்துவிட்டதாம். மேலும் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தது பற்றி பேசிய அவர், “அந்த படத்திற்கு பிறகு அனைவரும் என்னை யோகி என்றே அலைகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று 77வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவரது உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.
அமிதாப் பச்சன் 77 வயதிலும் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறார். இதற்காக அவர் உணவுக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்கிறார்.
அவர் மேற்கொள்ளும் உணவுப்பழக்க முறை குறித்து இங்கு காண்போம்.
அமிதாப் பச்சன் ஒரு சைவ பிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு மாமிசம் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், வயதாவதால் சைவத்திற்கு மாறினார்.
அதன் பின்னர் பழங்கள், காய்கறிகள் மூலம் அவர் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகளை பெறுகிறார்.
தினமும் காலையில் தவறாமல் அமிதாப் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், அவர் மாலையில் மேற்கொள்வாராம். அத்துடன் தினமும் யோகா செய்வாராம்.
அமிதாப் பச்சன் நீர் மற்றும் எலுமிச்சை சாற்றை மட்டுமே பருகுவாராம். தண்ணீர் நீர்ச்சத்தை கொடுப்பதுடன், எலுமிச்சை செரிமானத்தையும் உடலில் செய்கின்றது.
அமிதாப் மட்டும் இன்றி அவரது குடும்பமே தினமும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிடுவார்களாம். இதனை அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
தேநீர்-காபி குடிக்கும் பழக்கத்தை அமிதாப் தற்போது கடைபிடிப்பதில்லை. ஆனால் முன்பு காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அமிதாப், வயதாவதை கருத்தில் கொண்டு அதையும் கைவிட்டார். காபியில் உள்ள காப்ஃபைன் என்ற பொருள், குறிப்பிட்ட வயதிற்கு பின் கேடு விளைவிக்கக்கூடியது. நினைவாற்றலை பாதிக்கும் என்பதால், அமிதாப் பச்சன் அதனையும் கைவிட்டாராம்.
அரிசி சாதம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அமிதாப் சாப்பிடமாட்டாராம். ஆரம்ப காலத்தில் கீர் மற்றும் ஜிலேபியை விரும்பி சாப்பிட்டு வந்த இவர், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து சர்க்கரை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டாராம்.
குளிர் பானங்கள், சோடா அல்லது காற்றூட்டப்பட்ட பானங்களை இவர் எப்போதும் குடிக்கமாட்டாராம். கார்போனேட்டட் பானங்களில் அதிகளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.
முன்பு பீர் மட்டும் பருகி வந்த அமிதாப் பச்சன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதனையும் கைவிட்டுவிட்டாராம்.
திரைப்படங்களில் அமிதாப் புகைப்பிடிப்பது போல் நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் புகைப்பிடிக்க மாட்டாராம். ஆனால், ஆரம்ப காலத்தில் அந்த பழக்கத்தை வைத்திருந்த இவர், பின்னர் அதனை கைவிட்டுவிட்டார்.
தொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா (38)
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நகைச்சுவை மேடையை தன் அசாதாரண பேச்சாற்றலால் தெறிக்கவிட்டவர் இவர்.
தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் அறந்தாங்கி நிஷா, ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் துபாய்க்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அறந்தாங்கி நிஷா அளித்த பேட்டியில், நான் துபாயிலிருந்து இரு தினங்களுக்கு முன்னர் தான் வந்தேன்.
என்னை விமான நிலையத்தில் பார்த்த எல்லோரும் ஏன் இந்த சமயத்தில் பயணம் செய்கிறீர்கள் என கேட்டனர். என் மீதுள்ள அக்கறையில் தான் அப்படி கேட்டார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப தைரியமாக இருக்கேன். வயிற்றில் உள்ள என் குழந்தையும் தைரியமாக இருக்கு.இந்த இடத்துக்கு வர என் வாழ்க்கையில் நான் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன்.
என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் தான் இருக்கோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி மேலே வருவது அதிக கஷ்டம்.
என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்து தான் ஓடுறேன். சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வாக இருக்கும். அப்போது நான் நகைச்சுவை செய்த நிகழ்ச்சிகளை பார்ப்பேன் என கூறியுள்ளார்.
ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்று நடிகை அமலபால் கூறியுள்ளார்.
மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நெட்ஃபிளிக்ஸில் இணைந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.
நடிகை அமலா பால் ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கடந்த ஆண்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்கு குறும்படங்கள் அடங்கிய திரைப்படமாக வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ்.
அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜீ, கரன் ஜோஹர் என இந்தி சினிமாவின் முக்கியமான நான்கு இயக்குநர்கள் இதில் இடம்பெற்ற குறும்படங்களை இயக்கியிருந்தனர். பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிய இப்படம் வழக்கம் போல சர்ச்சையானது.
பல்வேறு அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்திருந்த போதும், இப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற முதல் குறும்படத்தில் அமலா நடிக்கவிருக்கிறார். இந்தியில் ராதிகா ஆப்டே நடித்த பாத்திரத்தை தெலுங்கில் அமலா ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாபால் டிஜிட்டல் மீடியா பலமாக வளர்ந்துள்ள இந்த சூழலில், வட இந்தியாவைப் போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன.
இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியவான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
சவாலான கதாபாத்திரங்கள் இது பற்றி நடிகை அமலா பால் தெரிவிக்கும்பொழுது, கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சவால் நிறைந்த கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைகளுக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள்.
ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்.
அதிலும் மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என்னை இந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்தமைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் முன்னணி OTT டிஜிட்டல் மீடியமாக விளங்கும் நெட்ஃபிளிக்ஸின் தென்னிந்திய வருகை, இங்கே பல புதிய மாற்றங்களையும், கதைக்கருக்களில், எதார்த்தமான படைப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்.
இந்த மாற்றத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்ததில் மேலும் பெருமை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை எனக்கு தொடர்ந்து அளிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்று கூறியுள்ளார்.