திருமணம் செய்யாமல் காதலனுடன் வாழ்ந்து வந்த பிரபல பாடகிக்கு நேர்ந்த கதி!!

பிரபல பாடகிக்கு நேர்ந்த கதி..

இந்தியாவில் பிரபல பாடகி கொ லை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). கடந்த 1ம் திகதி இவர் இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் சு ட்டு கொ ல்லப்பட்டார்.

இதனால் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொ லை வழக்கில் சுஷ்மாவின் காதலர் கஜேந்திர மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் இந்த வழக்கு குறித்து கூறுகையில்,

சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சுஷ்மாவிற்கும், காதலனுக்கும் இடையே சொத்து தொடர்பான பி ரச்னை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவது, அவருடைய காதலனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிர ச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கஜேந்திர காதலியை சுஷ்மாவை கொ லை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மா சென்ற காரை விபத்து ஏற்படுத்தி கொ லை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக தப்பிவிடவே, சம்பவ தினத்தன்று சுஷ்மாவை சு ட்டு கொ லை செய்துள்ளனர். சுஷ்மாவை சு ட்டுக் கொ லை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து கஜேந்திரா திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொ லை செய்ய இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1ம் திகதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை இந்த நபர்கள் சு ட்டுக் கொ ன்றுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

நடிகை மீனா என்ன படித்துள்ளார் தெரியுமா??

நடிகை மீனா என்ன படித்துள்ளார் தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை மீனா தற்போது ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை மீனா ஒரு பேட்டியில் தனது படிப்பு விபரம் பற்றி கூறியுள்ளார். அதில் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தனது படிப்பை எட்டாம் வகுப்பிலேயே நிறுத்தி விட்டதாகவும் அதன் பிறகு தனியாக கோசிங் சென்றே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகவும் நடிகை மீனா கூறியிருந்தார்.

மேலும் சினிமாவில் நடித்துக்கொண்டே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் வரலாற்று பிரிவில் பட்டம் பெற்று உள்ளதாகவும் நடிகை மீனா கூறியுள்ளார். மீனாவை அடுத்து அவரது மகள் நைனிகா விஜயின் தெறி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.

கமலை ரகசியமாக திருமணம் செய்த சிம்ரன்? ஓர் ப்ளாஷ்பேக்!!

கமலை  திருமணம் செய்த சிம்ரன்

1990களில் கனவுக்கன்னியாக இளைஞர்களை கட்டிப்போட்டவர் சிம்ரன், முன்னணி நடிகர்கள் அனைவருடன் இணைந்து கலக்கியவர்.அசத்தலான நடிப்பு, வசீகரமான நடனம் என தன்னுடைய திறமையால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

புகழின் உச்சத்தில் இருந்த போதே, பிரபுதேவாவின் அண்ணன் ராஜீசுந்தரத்துடன் காதல், அப்பாஸ்சுடன் காதல், கமலுடன் ரகசிய திருணம் என பல கிசுகிசுக்களில் சிக்கியவர்.

இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சிம்ரன், அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

என் காதல் நிஜமானது தீபக்குடன் தான், சிறு வயது தோழனான அவன் என்னை ரிஷி என்று தான் அழைப்பான்.நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என கனவிலும் நினைத்து பார்த்ததில்லை, “எல்லாமே விதியின்” கையில் தான் இருக்கிறது.

நான் முதல் படம் பண்ணும் போதே நீ நல்லாவரணும் ரிஷி என்று டெல்லியிலிருந்து போனில் வாழ்த்தினான்.சினிமாவில் பிஸியானதும் அவனை சந்திக்க முடியாமல் போனது, எனினும் எனக்காக அவன் சந்தோஷப்பட்டான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது.இன்னும் பல விடயங்கள் பாதித்ததால் நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன், இதை என் பெற்றோரிடம் சொன்னதும் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

அப்போது தான் அம்மா தீபக்கை பற்றி கேட்டார், என் வாழ்வில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தியவன் அவன் தான், நண்பரே கணவர் ஆனால் பெரிய ப்ளஸ் தானே… அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலியே!!! என நெகிழ்கிறார்.

வடிவேலு நடிக்க வேண்டிய படத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்!!

வடிவேலு

வடிவேல் என்றாலே உலகம் முழுவதும் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் திரைக்கு வந்து பல நாட்கள் ஆகியிருந்தாலும் இணையதளத்தில் தினமும் அவரை வைத்து வராத மீம்ஸ் இல்லை எனலாம்.

தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் வைகைப்புயல் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான வேளையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இப்போது அந்த படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்று.

மேலும் யோகிபாபு பக்கத்தில் இருந்து இந்த செய்தி தற்போது பிரத்யேக அழைப்பின் மூலம் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து உறுதி செய்துள்ளது நமது சினிஉலகம்.

யோகி பாபு தற்போது அடுத்தடுத்து படங்கள் கொடுத்துவருகிறார். ஆனால் வடிவேலுக்கு பதிலாக ஏன் இந்த படத்தில் யோகிபாபு மாற்றப்பட்டுள்ளார் என்று சரியான தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் பல நாட்களுக்கு பிறகு வைகைப்புயல் அவர்களை திரையில் பார்க்க ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

பேனர் வைப்பதற்கு பதிலாக எல்லோரையும் அசர வைத்த விஜய் சேதுபதி ரசிகர்கள் : இதுதான் பெஸ்ட்!!

அசர வைத்த விஜய் சேதுபதி

சமீபத்தில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உ யிரிழந்த துயர சம்பவத்தை அடுத்து அனுமதி பெறாமல் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் என பலரும் எந்த ஒரு பட ரிலீஸ் முன்னிட்டு பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதனை தொடர்ந்து சங்கத்தமிழ் படம் ரிலீஸ் ஆகும் வேளையில் கள்ளக்குறிச்சியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக பேனர் வைக்காமல் கடுவனூர் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடுவதற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களின் புதிய முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் அல்லாமல் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.ஆனால் ஒரு துயர சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு முயற்சி எடுக்கிறோம் என்று எண்ணுகையில் ஒரு பக்கம் வருத்தம் எழும்புகிறது என்றே சொல்லலாம்.

ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்!

எல்லாம் ஓரினம்தான்

எத்தனை நாட்களுக்குத்தான் ஆண் பெண் சுதந்திரம் என்று பேசிக்கொண்டு இருப்பது.. அதற்கு மேலும் சிந்திக்க பல விஷயங்கள் இருக்கின்றன என்று நடிகை திரிஷா வலியுறுத்தி உள்ளார். நடிகைகள் இன்னமும் சினிமாவில் ஆண் பெண் பேதம் பார்த்துதான் கதை அமைக்கிறார்கள்.

சம்பளம் போன்ற விஷயங்களை முடிவு செய்கிறார்கள் என்று குமுறலுடன் இருக்கும் காலகட்டம்தான் இது. என்றாலும் கூட இப்போது இதெல்லாம் கவலைப்பட வேண்டிய பெரிய விஷயம் இல்லை என்கிறார் நடிகை திரிஷா. அவர் என்னதான் சொல்ல வருகிறார்? பேசிப்பேசி ஆணுக்கு முழு சுதந்திரம் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்றே நாம் எப்போதும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாமே.

சுதந்திரம் போன்று இரு பாலருக்கும் எல்லாமே அவர்கள் வளரும் விதத்திலும் சூழ்நிலையிலும் அமைகிறது, சுற்றி உள்ளவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் பெண் சுதந்திரம் என்று பழங்கதை பேசிக்கொண்டு இருப்பது வெட்டி வேலை என்கிறார்.

வரும் காலத்தில் நமக்கு சுதந்திரம் இருக்குதோ இல்லையோ, தண்ணீர் இருக்காது. மலைகள் இருக்காது, காடுகள் அழிந்து போகும் நிலை. பனி மலைகள் உருகி வருகின்றன. சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்குமா என்பது சந்தேகம்.இப்படி இயற்கை பேரழிவைப் பற்றி கவலைப்பட நமக்கு இதுதான் சரியான நேரம். இவைகளை விட்டு இதை விட்டுட்டு, இப்போதும் நாம் நம்மைப் பற்றியே கவலைப்பட்டு கொண்டு இருக்க வேண்டாமே என்பதுதான் என்னுடைய கருத்து.

இயற்கைக்கு நம்மால் முடிந்ததை மட்டும் அல்ல, முடியாததையும் சிரமப்பட்டு செய்ய முயற்சி வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் நமது பேச்சுக்கள் நமது சிந்தனைகள் மாற வேண்டும். எப்போதும் வேண்டாததை பேசி வீணாகிக்கொண்டு இருக்கிறோம்.

சாதாரணமாக நாம் பேசுவது வேறு, இப்படிப்பட்ட பழம் சிந்தனைகளை பேசிப் பேசியே வீணாவது என்பது வேறு. அதனால் ஆண் பெண் என்று இரு பாலரையும் பிரிக்காமல், நாம் நம்மைப் பற்றி கவலைப்படாமல் இயற்கையைப் பற்றிய கவலையை அதிகரிக்கலாம், என்று அதிர வைக்கிறார் திரிஷா.

சர்ச்சைகளுக்கு பேர்போன நடிகையை கொ லை செய்த அவரது சகோதரர்!!

நடிகையை கொ லை செய்த  சகோதரர்

பாகிஸ்தான் நாட்டு மாடல் அழகியும் டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கினார்.

பவுசியா அசிம் என்னும் இயற்பெயரை கொண்ட இவர், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று முன்னர் திட்டி இருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.

20க்கு 20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நி ர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.

இப்படி பல்வேறு ச ர்ச்சைகளுக்கு பேர்போன குவான்டீல் பலூச்(26) பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் 15.7.2016 அன்று  ச டலமாக கிடந்தார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கௌரவத்தை சீர்குலைத்ததால் க ழுத்தை நெ றித்து, அவரை கொ ன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் காவல்துறையில் குறிப்பிட்டார்.

முல்தான் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த கொ லை வழக்கில் 35 சாட்சிகளிடம் விசாரணை நேற்று நிறைவடைந்ததோடு தீர்ப்பும் வழங்கப்பட்டது.

குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் த ண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இம்ரான் ஷபி, இதே வழக்கில் கு ற்றம் சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ஷெரின் அப்பா யார் தெரியுமா ? புகைப்படம் இணையத்தில் வைரல்!!

ஷெரின் அப்பா யார் தெரியுமா

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்ப சோக கதையை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஷெரினும் தனது கதையை கூறியிருந்தார், அதில் தன்னுடைய அப்பா 3 வயதிலேயே தன்னை விட்டுச் சென்றதாக கூறியிருந்தார். அவர் விட்டுச் சென்றதற்கு காரணம் ஷெரின் பெண் குழந்தையாக பிறந்தது ஒன்றே தானாம்.

கணவரை பிரிந்த பின் அவரது அம்மா தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து வளர்த்துள்ளார். தற்போது ஷெரின் அப்பாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ ஷெரின் குழந்தையில் அம்மா-அப்பாவுடன் இருக்கும் புகைப்படம்.

டிக் டாக் பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷடம் : ஒஹோ ஆஃபர் தான்!!

டிக் டாக் பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷடம்

டிக் டாக் மூலம் பலரும் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் படங்களிலிருந்து வசனங்கள், பாடல்கள் பேசி வீடியோ பதிவிடுவது அண்மைகாலமாக தொடர்ந்து வருகிறது.

இதில் பலரும் பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி போகத். பொழுதுபோக்குக்காக அவர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

பாஜக வின் மகளிர் அணியில் மாநில துணை பொருப்பிலும் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு அம்மாநிலம் ஆதாம்பூரில் தேர்தலில் போட்டியிட அக்கட்சி சீட் வழங்கியுள்ளதாம்.

முகினை கவிழ்க்க மறைமுகமாக வேலை பார்க்கும் அபிராமி செய்த வேலை!!

முகினை கவிழ்க்க  வேலை பார்க்கும் அபிராமி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.

அப்போது பேசிய அபிராமி, “லோஸ்லியா எனக்கு ஃப்ரண்டு கிடையாது. அவளை தங்கையாகவே பார்க்கிறேன். இந்த உறவு வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

ஜெயிலில் ஒருவர் தூங்குவதே கடினம், ஆனால் தனியாக இருக்கிறேன் என்பதால் எனக்காக ஜெயிலுக்கு வந்தார்” என்று கூறி அழத் துவங்கிவிட்டார். முகினைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.அபிராமி முகினிடம் பேசினார், முகினுடைய வோட்டு குறையலாம் என்று எண்ணித்தான் அவர் இவ்வாறு செயல்படுவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோதுகூட, மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக வீ ஆர் த பாய்ஸ் கூட்டணியில் மட்டுமே இருந்துவிட்டு சென்றார்.இந்த முறை வனிதாவுக்கும் ஷெரினுக்கும் சண்டை ஏற்பட்டபோதும்கூட, ஒட்டாமலே விலகி இருந்தார்.