முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்.. சனம் செட்டியை காதலிக்கிறாரா? உண்மை இது தான்!!

முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்

பிக்பாஸ் வீட்டைவிட்டு கடந்த வாரம் தர்ஷன் நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தர்ஷனிற்கு சனம் ஷெட்டியுடன் காதல் இருக்கிறதா இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தர்ஷன் இதுவரை சனம் ஷெட்டியை காதலிக்கிறேன் என்று ஒரு முறைகூட கூறியதில்லை. ஆனால் சனம் ஷெட்டி தர்ஷனை காதலிப்பதாக பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தன் காதல் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவரிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு தர்ஷன் இல்லை நான் சிங்கிள் என்று கூறியுள்ளார். ஆக சனம் ஷெட்டியை தர்ஷன் காதலிக்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது.

தர்ஷனிடம் நீங்கள் யாரையாவது காதலித்துள்ளீர்களா என்றும் கேள்விக்கு, தர்ஷன் கூறியதாவது ஆம் காதலித்துள்ளேன், ஆனால் அந்த பெண் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டாள். அதற்கான காரணமும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தர்ஷனின் முன்னாள் காதலி பற்றின விவரம் அவர் குறிப்பிடவில்லை.

மீண்டும் ஆடை பிரச்சனையை கையிலெடுத்த பிக்பாஸ் மதுமிதா : என்ன சொல்லியிருக்கார் பாருங்க!!

பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதா டிவிட்டரில் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா காவிரி விவகாரம் குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் தனது கையை சரமாரியாக கிழித்துக் கொண்டார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட பின்னர், விஜய் டிவி ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து விமர்சித்தார்.

பெரும் பரபரப்பு அத்தனை ஆண்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் அபிராமியும் சாக்ஷியும் உள்ளாடை அணியாமல், அரைகுறை ஆடையில் சுற்றித்திரிந்ததாக கூறினார் மதுமிதா. மதுமிதாவின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஆடை விவகாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து பேசி ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் மீண்டும் ஆடை விவகாரம் குறித்து பேசியிருக்கிறார் மதுமிதா. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ள மதுமிதா, அதற்கு மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ஆடை விவகாரத்தில் எனக்கு நியாயமான முடிவுகளை எடுக்க இரவுகள் நீள்கிறது. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? நாம் நினைத்த உடைகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? நாம் அணியும் உடை மற்றவர்களை பாதிக்குமா? பாதிக்காதா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மதுமிதாவுக்கு ஆதரவு மதுமிதாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். பெரும்பாலான பதிவுகள் மதுமிதாவுக்கு ஆதரவாகவே உள்ளது. அவற்றில் சில.. ஆடை சுதந்திரம் நீங்க இருக்குற இடத்தை பொறுத்தது அது, இங்கே தமிழ்நாட்டுல எதுக்கு பேர் போனது? பண்பு, கலாச்சாரம் அதில் உடையும் அடங்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாடுகள் , இதே வெளிநாடு சென்றால் அங்கு கதையே வேறு, அதனால் நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த ஆடை சுதந்திரம் நிர்ணயிக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆபாசமாக இருக்கக்கூடாது நாம் அணியும் ஆடையே நமது மரியாதையை தீர்மானிக்கிறது. ஆடை குறைந்தால் நம்முடைய மரியாதையும் குறையும்.நமக்கு பிடித்த ஆடையை அணிய முழு சுதந்திரம் உண்டு ஆனால் அது ஆபாசமாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.

டீச்சர் நடிகைக்கு விரைவில் டும்டும்.. சினிமாவிற்கு பைபை.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

டீச்சர் நடிகைக்கு விரைவில் டும்டும்.

முன்னணி நடிகை ஒருவருக்கு விரைவில் டும்டும்டும் நடக்க போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் அந்த நடிகை.

முதல் படமே பல மொழிகளில் ஹிட் அடித்து பெரிய வைரல் ஆனது. இதன் மூலம் தென் இந்தியாவில் பெரிய அளவில் பிரபலம் ஆனவர், அதன்பின் காணாமல் போனார். ஆம் திடீர் என்று சினிமா எதிலும் நடிக்காமல் வெளிநாடு பறந்து போனார்.

படம் இல்லை வெளிநாட்டிற்கு படிப்பு தொடர்பாக சென்றவர், மீண்டும் சில மாதங்களில் திரும்பி வந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். வரிசையாக நிறைய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழ் எப்படி தமிழ் பெண்ணாக இருந்தாலும் கூட கவனமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் இவர் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார். அங்கு ரசிகர்களும் இவருக்கு அதிகம் ஆனார்கள். ஆனால் இதன் பின் இவர் இரண்டு தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இரண்டு படமும் மிக மோசமாக தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டிலும் இவரின் நடிப்பு பெரிய வைரலானது.

ஒரு பாடலும் பெரிய ஹிட் அடித்தது. அடுத்து என்ன இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆம் இந்த நடிகைக்கு வீட்டில் தீவிரமாக திருமணம் குறித்து பேசி வருகிறார்களாம். தெலுங்கு நடிகர் அல்லது மருத்துவர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூறுகிறார்கள்.

நான்தான் வாய்ப்பு கொடுத்தேன்.. இப்போ என் மார்க்கெட்டே போச்சு.. இளம் நடிகரால் ஷாக்கான மாஸ் ஹீரோ!!

இளம் நடிகரால் ஷாக்கான மாஸ் ஹீரோ

இளம் நடிகர் ஒருவரின் வளர்ச்சியால் முன்னணி நடிகர் ஒருவரின் மார்க்கெட் பெரிய அளவில் சரிந்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. கோலிவுட்டில் இளம் நடிகர் ஒருவர் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறார். அவரின் நடிப்பில் என்ன மாதிரியான படம் வந்தாலும் மாஸ் வெற்றிபெறுகிறது.

இவரை தமிழுக்கு அறிமுகம் செய்ததே இன்னொரு மாஸ் நடிகர்தான். அவரின் படங்களும் அவ்வப்போது ஹிட் அடித்து வருகிறது. ஆனால் இல்லை ஆனால் அந்த இளம் நடிகர் போல இந்த மாஸ் நடிகரின் படங்கள் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை.

இன்னும் சில படங்கள் மோசமாக தோல்வி கூட அடைகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் சில படங்கள் வரவேற்பை பெறுவதில்லை. என்ன கோபம் அந்த இளம் நடிகர் வரும் முன் இந்த மாஸ் நடிகர்தான் பெரிய புள்ளியாக பார்க்கப்பட்டார். ஆனால் இவர் வந்த பின் மார்க்கெட் நிலவரம் அப்படியே மாறிவிட்டது.

மொத்தமாக ரசிகர்கள் பலர் இந்த இளம் நடிகரை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். மார்க்கெட் போச்சு இதனால் மாஸ் நடிகர் தற்போது மார்க்கெட் இல்லாமல் தவித்து வருகிறாராம். அவருக்கு கிடைக்கும் விளம்பரத்தில் பாதிதான் நமக்கு கிடைக்கிறது. அவர் வந்து நின்றாலே அது விளம்பரமாக மாறிவிடுகிறது என்று இந்த மாஸ் நடிகர் புலம்பி வருகிறாராம்.

நான்தான் அதோடு சென்னை கலெக்சஷனும் இந்த இளம் நடிகருக்குத்தான் அதிகமாக இருக்கிறதாம். எப்படி இவர் மார்க்கெட்டை பிடித்தார் என்று தெரியாமல் பல நடிகர்கள் குழம்பி வருகிறார்களாம். நான்தான் அவரை அறிமுகம் செய்தேன், அவர் இப்போது எனக்கே ஆப்பு வைத்துவிட்டார் என்று மாஸ் நடிகர் வருத்தத்தில் இருக்கிறாராம்.

ரொம்ப தூரம் போயிட்டியா ராம் : 96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்!!

96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

96 படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த படக்குழுவினர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 96 படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை.

பல பள்ளிகளில் ரீயூனியன் நடக்க காரணம் அந்த படம்தான் என்றால் மிகையாகாது. 96 என்றவுடன் நமது நினைவுக்கு வருவது த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் தான். பள்ளி பருவ காதல் அதற்கு பின் ஏற்படும் பிரிவு பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் காதலர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீரா காதல் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை மீண்டும் பிரிவு என ஒரு இறுக்கமான காதல் கவிதை தான் 96.

கடந்த ஆண்டு அக்டோபர் 4 இதே நாளில் வெளியாகி மிக பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. 96 படம் ரீலிஸாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. நேற்றிலிருந்து ஒன் இயர் ஆப் 96 என்ற ஹாஸ்டேக் இணையத்தில் டிரென்ட் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி ராமாகவும் ஆதித்யா பாஸ்கர் சிறு வயது ராமாகவும் த்ரிஷா ஜானுவாகவும் கௌரி சிறு வயது ஜானுவாகவும் நடித்து ப்ரேம் குமார் இயக்கிய படம் 96. தற்போது 96ன் நினைவுகளை பகிரும் நோக்கில் படக்குழு லைப் ஆப் 96 என்ற வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவும் படத்தை போல சிறு ஹைகூவாக மனதின் காதல் பக்கங்களை தட்டி எழுப்பியுள்ளது. இதயத்துடிப்பின் லப் டப் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரொம்ப தூரம் போயிட்டியா ராம் என்ற ஜானுவின் குரல் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் 96 போஸ்டரை பதிவேற்றம் செய்து நன்றி தெரிவித்து உள்ளனர்.

96 Kannada Remake 99 Movie Poster

96 படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கு கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் கணேஷ் மற்றும் பாவனா சேர்ந்து சேதுபதி த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

தெலுங்கில் சமந்தா மற்றும் சர்வனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் போராடி வருகிறோம்.. அக்கறை இருந்தால் இதை செய்யுங்கள் : வைரலாகும் கமல்ஹாசன் பதிவு!!

வைரலாகும் கமல்ஹாசன் பதிவு

பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சாலையில் வைத்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்ததன் காரணமாக அவர் லொறி மோதி பலியானார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பட நடிகர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஆகியோர் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்திய – சீன சந்திப்புக்கு வரவுள்ள நிலையில் அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சுபஸ்ரீயின் இழப்பிலிருந்து மீண்டு வர தமிழர்களும், தமிழ்நாடும் போராடி வருகிறோம்.இந்த நேரத்தில் தமிழக அரசு உங்களுக்கு பேனர் வைப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நீங்கள் முன்னோடியாக செயல்பட்டால், அது உங்களுக்கு தமிழர்கள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும், மேலும் அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரத்தை கொடுக்கும் என பதிவிட்டுள்ளார்.

முன்னணி இயக்குனர் மீது தேசதுரோக வழக்கு : அதிர்ச்சித் தகவல்!!

இயக்குனர் மீது தேசதுரோக வழக்கு

முன்னணி இயக்குனர் மணிரத்னம் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மதவாதம் மற்றும் அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேச விரோதி, urban நக்சல் என கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கடிதத்தை எதிர்த்து பிகரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை!!

நடிகை சாந்தினி தமிழரசன்

நடிகை சாந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள தாழம்பூ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்” விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்.

பள்ளி பருவத்தில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர். 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கினார். அவர் நடித்த முதல்படம் சித்து +2.பிறகு – சில வருட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த படம் தான் “நான் ராஜாவாக போகிறேன்”. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் பிரபலமானவர்.

தற்போது இவர் தொடர்ந்து 10 படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் .ஆனால் நடித்த எந்த படமும் தனக்கு கை கொடுக்காத நிலையில் தன் பிரபலத்திற்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் “தாழம்பூ “என்ற சீரியலில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றாலும் தனக்கென்று நிலையான இடம் கிடைக்காததால் பல கிசு கிசுக்கள் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையில் அவர் அடியெடுத்து வைத்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தாழம்பப்பூ சீரியலயுடைய ப்ரோமோவே நன்றாக அமைந்தது , இப்பொழுது சீரியல் உலகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும் என்பது சாந்தினியுடைய கனவு. வீட்டில் சாந்தினியையை எல்லோரும் “” டீம்பு “”என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர்.

செல்லமாக வளர்ந்து மீடியா உலகில் அடியெடுத்து வைத்து படி படியாக முன்னுக்கு வரும் சாந்தினி – கவண் படத்தில் விஜய் சேதுபதியை மிக அழுத்தமாக கட்டி பிடித்து நின்றது – மிகவும் பிரபலம் ஆனது. தாழம்பூ சீரியலலிலும் பல கட்டிப்புடி வைத்தியங்கள் இருக்கிறது என்பது ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது. அவர் எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 லெப்ட்டா ரைட்டா? போட்டோ போட்டு உசுப்பேத்தும் நடிகை!!

உசுப்பேத்தும் நடிகை

நடிகை யாஷிகா ஆனந்த் போஸ்ட் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமென்ட் அடித்து வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்ட விதமும் அவருடைய முதிர்ச்சியான பேச்சும் பலரையும் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருங்கிய நட்பு கொண்டார்.

இன்று வரையும் அவர்களுடைய நட்பு, ஆண்டு விழா கொண்டாடும் அளவுக்கு நல்லபடியாக இருந்து வருகிறது. மெலிந்துள்ளார் தற்போதைய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் சீசனின் போட்டியாளர் என்ற ரீதியில் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிற்கு அப்போதைய சக போட்டியாளரான மகத்துடன் சென்றார் யாஷிகா.

இதனை பார்த்த ரசிகர்கள் முன்பைவிட தற்போது யாஷிகா ரொம்பவே எடை குறைந்து மெலிந்து போயிருப்பதாக கூறி வருகின்றனர். கண்களை திறந்து இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு போட்டோக்களை பதிவேற்றியுள்ளார்.

ஒன்றில் கண்களை மேல்நோக்கி பார்த்து சிரித்தப்படியும் மற்றொன்றில் கீழ்நோக்கி கண்களை மூடியிருப்பதை போன்றும் போஸ் கொடுத்துள்ளார். லெப்ட் ஆர் ரைட்? இந்த போட்டோக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக எடுக்கப்பட்டது என தெரிகிறது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த டிரெஸில்தான் உள்ளார் யாஷிகா. மேலும் அந்த போட்டோவுக்கு லெப்ட் ஆர் ரைட்? என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

டபுள் மீனிங் கமென்ட் இதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். சிலர் உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது, ஆகையால் நீங்கள் கண்களை திறந்திருக்கும் போட்டோதான் நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் இரண்டுமே அழகுதான் என்றும், நீங்கள் ரொம்பவே ஸ்லீம் ஆயிட்டிங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக யாஷிகா ஏராளமான கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஒரு போட்டோ.. வாய்ப்பிற்காக நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கடைசியில் இப்படி ஆகிட்டாங்களே!!

வாய்ப்பிற்காக நடிகை வெளியிட்ட புகைப்படம்

முன்னணி நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆன நடிகை அவர். முதலில் சிறு சிறு படங்களில் நடித்த அவர், பின் பெரிய ஹீரோக்களின் சில படங்களில் நடித்தார்.

தொடக்கத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. மிக மோசமான பிளாப் படங்களாக அவை மாறியது. இதையடுத்து தெலுங்கு திரையிலகில் தனது கவனத்தை செலுத்தினார். கிரிக்கெட் எப்படி இந்த நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இவர் காதலில் இருந்தார். ஆனால் அந்த காதலும் முறிந்து, சினிமா வாய்ப்பும் இல்லாமல் வரிசையாக வாழ்க்கையில் நிறைய அடிகளை வாங்கினார். அந்த கிரிக்கெட் வீரர் இப்போது வேறு பெண்ணை மணந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அதிகமாக உடல் எடை போட்ட இவர் தன்னுடைய பெயரை கொஞ்சம் மாற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் பெயர் மாற்றிய பின் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் அடித்தது. ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பல மொழிகளில் வைரலானது.

ஆனால் இவரின் வாய்ப்புகள் மீண்டும் குறைந்து போகவே, டயட் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார். 20 கிலோ வரை உடல் எடையை குறைத்தவர் மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்டார். இவர் தொடர்ந்து உடலை எடையை குறைத்த வண்ணம் இருக்கிறார். இப்படியா இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெலிந்த உடலுடன் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தினமும் பிகினி போட்டோக்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து இவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்னும் இல்லை ஆனால் இன்னும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த தயாரிப்பாளரும் இவருக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக இவரை அணுகவில்லை என்கிறார்கள். பிகினி போட்டோக்களை வெளியிட்டு இவர் கெட்டபெயர் எடுத்ததுதான் மிச்சம்.