ஜெயலலிதா பயோபிக் : எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

ஜெயலலிதா பயோபிக்

ஜெயலலிதா நடிக்க உள்ள தலைவி படத்தில் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப், படமாகப் பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் அதைச் சரியாக ஏ.எல்.விஜய் மட்டுமே செயல்படுத்தி வருகிறார்.

தலைவி’ என்ற பெயரிட்டுள்ள இதில் ஜெயலலிதாவாகப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் லுக்குகாக கங்கனா அமெரிக்க சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் கங்கனா அந்த படத்திற்காக எடுக்கும் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் எம்ஜிஆரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆதலால் அதில் யாரு நடிப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கனா தற்போது ஜெயலலிதாவின் உடல் மொழி, பேச்சு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள அவரது படங்களை உன்னிப்பாகப் பார்த்து பயிற்சி மேற் கொண்டு வருகிறாராம். அது மட்டுமின்றி முறையாகப் பரதநாட்டியமும் கற்று வருகிறாராம்.

இதில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு தோற்றங்களில் கங்கனா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஷ்டாரான நீலிமா…!

ஷ்டாரான நீலிமா

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் பலர் உண்டு.

இவ்வளவு ஏன்? அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியோடு பொடிப் பெண்ணாக சுற்றி வரும் மீனா, ஒருகட்டத்தில் ரஜினிக்கே ஜோடியானார்.

Neelima Rani

அதேபோல் நடிகை நீலிமாவுக்கும் பின்னணி உண்டு. 1986ல் சென்னையில் பிறந்த நீலிமா 1992ல் சிவாஜி, கமல் நடிப்பில் சக்கைபோடு போட்ட தேவர் மகனில் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருப்பார்.

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஒருகட்டத்தில் மொழி உள்ளிட்ட படங்களில் துணை நடிகை ஆனார். நான் மகான் அல்ல படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். முதன் முதலில் சீரியல் ஒன்றிலும் தலைகாட்டினார் நீலிமா.

அதன் பின்னர் தமிழ், தெழுங்கு சீரியல்களில் முக்கிய ரோல்கலில் நடிக்கத் துவங்கினார். காதல் மணம் புரிந்த நீலிமா இப்போது வாணி ராணி சீரியலில் சக்கைபோடு போடுகிறார்.

ஆக இவரது இத்தனை பயணத்தை யும் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தது அந்த தேவர்மகன் படம் தான்!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷன் முதன் முதலாக எங்கு சென்றுள்ளார் பாருங்க!!

பிக்பாஸ் போ ட்டியில் கண்டிப்பாக இந்த வருடம் தர்ஷன் தான் வின்னர் என்று கூறி வந்தனர். ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் பொது மக்களே செம்ம கோபம் ஆனார்கள், ஏனெனில், தர்ஷனுக்கு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு அலை இருந்து வந்தது.

இந்நிலையில் தர்ஷன் வெளியே வந்து தன் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றார், பல ரசிகர்களை சந்தித்து செல்பிக்கு போஸ் கொடுத்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் தர்ஷன் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திற்கு சென்றுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ உங்களுக்காக…

வெளிநாட்டில் சாதித்த தமிழன் : நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் நிறைவேறிய கனவு… குவியும் பாராட்டுகள்!!

வெளிநாட்டில் சாதித்த தமிழன்..

மாற்றுத்திறனாளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியின் தலைவராகவும், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் விளையாட்டு வீரராகவும் உள்ளார். இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் நேபாளம் சென்றார் சிவா.

அங்கு நடந்த தொடரில் 3 – 0 என்ற கணக்கில் 3- டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா கலந்து கொண்டார்.

முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காரணத்தினால் தனது சொந்த ஊரில் கோப்பையை காண்பிப்பதற்காக அவருக்கு கோப்பை வழங்கப்பட்டு நேற்று மதுரை வந்தடைந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் சிவா கூறுகையில், நேபாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடிய காரணத்தினால் வாங்கிய கோப்பையை அனைவரிடமும் காட்டுவதற்காக இங்கு கொண்டு வந்துள்ளேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் தற்போது நான் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளேன்.

இதுபோல் பல பேர் தேர்வாக வேண்டும், இன்னும் 2 மாதங்களில் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற போட்டியில் பங்கேற்க உள்ளேன். இந்த முறை நன்றாக விளையாடிய காரணத்தினால் எனக்கு அதில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

அஜித்தின் அழகு மகன் குட்டி தல : செம ஹேப்பி – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

அஜித்தின் அழகு மகன்

அஜித் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இவ்வருடம் கொடுத்துவிட்டார். அதே வேளையில் துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு என சாதனைகள் செய்தார்.

தற்போது தல 60 படத்திலும் இணைந்துள்ளார். அவர் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் அண்மைகாலமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்களும் அதை ஆர்வமாக பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் அம்மா ஷாலினியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

பூவே உனக்காக ஹீரோயின் தற்போது எப்படி இருக்கிறார்? லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பூவே உனக்காக ஹீரோயின்

விஜய் நடித்து 1996ல் வெளிவந்த படம் பூவே உனக்காக. அந்த படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர் பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த்.

அவர் இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2001க்கு பிறகு அவர் எந்த தமிழ் படங்களிலும் தோன்றவில்லை. ஆனால் மலையாள படங்களில் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் ‘அவரா இது?’ என கேட்கும் அளவுக்கு மாறிவிட்டார் அஞ்சு அரவிந்த்.

பொசு பொசுவென இருந்த நித்யா மேனனா இது..? இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நித்யா மேனனா இது..?

மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நித்யா மேனன், பிறமொழியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன் அதிக உடல் எடையுடன் காணப்பட்டார்.

அவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் சிலர் கிண்டல் செய்தனர். இதுப்பற்றி நித்யா மேனன் கூறியிருப்பதாவது., என் உடல் எடை கூடியிருப்பது பற்றி நானே கவலைப் படாத போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். பிடித்ததைச் சாப்பிடுவேன், நிறைய சாப்பிடுவேன்.
ஓய்வில் இருந்ததால் உடை எடை கூடிவிட்டது. இப்போது நான் நடித்து வரும் படங்களுக்கு என் உடல் எடை பிரச்சினை இல்லை. அடுத்து ஒரு படத்தில் எடை குறைத்து நடிக்க வேண்டும். அதற்காக எடை குறைக்க இருக்கிறேன். நான் நினைத்தால் நினைத்த நாட்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியும். குறைத்து காட்டுவேன் என்று சவால் விட்டார்.

உடல் எடையை குறைக்க நடிகை அனுஷ்கா கஷ்டப்பட்டு வரும் நிலையில் இவர் உடல் எடையை குறைக்கப்போகிறாராம் என்று பலரும் கிண்டலடித்தனர். ஆனால், அந்த கிண்டல்களுக்கு பதிலடி தரும் விதமாக கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான டயட் ஆகியவற்றை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் நித்யா மேனன்.

வெளியே வந்த மறுநாளே தர்ஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… படவாய்ப்பினால் படுகுஷியில் ரசிகர்கள்!!

தர்ஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதிவாரம் என்பதால் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார்.

இந்நிலையில்  தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷனில் ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேறியது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயங்கர சோகத்தில் போட்டியாளர்கள், பார்வையாளர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில், தர்ஷன் வெளியே வந்ததும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல கவினை வைத்து “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தை தயாரித்த ‘லிப்ரா புரொடக்ஷன்’ தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளது.

அதில், தர்ஷன் இறுதியாக உங்களின் கேம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கோலிவுட்டில் உங்களுடைய கேம் துவங்க இருக்கிறது. லிப்ரா புரொடக்ஷன் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மிக விரைவில் தர்ஷன் படத்தில் நடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரும் என்று ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.

 

பொசு பொசுவென குண்டாக இருந்த வித்யுலேகா ராமன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க : தூக்கிவாரி போட்டுடும்!!

வித்யுலேகா ராமன்

வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா, தற்போது உடல் எடையை குறைத்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகை வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமின் மகள். கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். மேலும், வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். மிகவும் குண்டாக இருந்த இவர் சில காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு நடிகை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மக்கள் அவரை கவர்ச்சியாக பார்க்கவோ, உணரவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சி உடையில் இருக்கும் வித்யுலேகாவின் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை காமெடி ரோலில் மட்டும் நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகள் வயது பெண்ணை மணமுடித்த இலங்கையை சேர்ந்த பாலுமகேந்திரா : சொல்லப்படாத கதை!!

மகள் வயது பெண்ணை மணமுடித்த  பாலுமகேந்திரா..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்தவர் பாலுமகேந்திரா.இவர் கடந்த 1939ஆம் ஆண்டு இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா தனது 74வது வயதில் உயிரிழந்தார்.

பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்கள் நிறைந்தது.இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மெளனிகா என மூன்று மனைவிகள் இருந்தனர்.தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா.

அகிலா
அகிலா குறித்து பாலுமகேந்திரா முன்னர் கூறுகையில், எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் 18 வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் புராணகாலத்தில் தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா.

என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்தது தான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

மெளனிகாவுடனான என் உறவை நான் ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும், என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை என கூறினார்.

ஷோபா
நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா திருமணம் செய்து கொண்டாலும் அவரை பற்றி சில இடங்களில் மட்டுமே பேசினார்.ஷோபா தனது 17 வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் குறித்த நினைவலைகளை முன்னர் பகிர்ந்த பாலுமகேந்திரா, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார்.

ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.

நடிகை மெளனிகா
நடிகை மெளனிகாவை பாலுமகேந்திரா கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். பாலுமகேந்திராவை விட மெளனிகாவுக்கு 30 வயது குறைவாகும்.

பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று அப்போது சிலர் சண்டை போட்டது பலரும் தெரிந்திருக்கும்.

கணவர் உடலை காண கதறி அழுத மெளனிகா இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு முன்பு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார்.

மெளனிகா குறித்து பாலுமகேந்திரா கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது என மெளனிகா கூறினாள்.

ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள் என கூறினார்.