உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
அரசியல் அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரகனி, விவேக், வித்யுத் ஜமால், காமெடி நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
சமூக ஆர்வலராக பசுமை புரட்சி செய்து வரும் நடிகர் விவேக் தற்போது இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரே இது குறித்து பேட்டியில் தெரிவித்துள்ளாராம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் இவருக்கு தானாம்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தியில் தற்போது 13 ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். புரமோ வந்திருந்தாலும் இதுவரை யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை ரஷாமி தேசாய் தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து கலந்துகொள்கிறாராம்.
அவருக்கு ரூ 1.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் பெற்றவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கஸ்தூரி மற்றும் வனிதா இடையே அதிக அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால் அவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர்.
கவின் விஷயம் பற்றி வனிதா கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய கஸ்தூரி ஒரு ட்விட் போட்டார். அதில் வாத்து குறியீடையும் பயன்படுத்தியிருந்தார்.
“என்னதான் #losliya வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா!” என்று கஸ்தூரி ட்விட் செய்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த வனிதா, “பலரும் உங்களுக்கு பதிலடி கொடுங்கள் என கூறுகிறார்கள். உங்களுக்கு தகுந்த எமோஜி எதுவுமே இல்லையே” என கூறினார். இப்படியே சண்டை நீண்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
சீனுராமசாமி தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். அந்த வகையில் தற்போது இவர் மாமனிதன் என்ற படத்தை இயக்கத்தில் இதை யுவன் தயாரிக்கின்றார், மேலும், யுவனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மீது இளையராகாவிற்கு கோபம் இருப்பதாக செய்திகள் வந்தது, அதுக்குறித்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். இதோ…
என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம், நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.
இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன் “திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.
படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன்.
அவ்வளவுதான் 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன்.
அவர் அன்போடு பெற்றுக் கொண்டார். படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன் யுவன் தரப்பில் “திரு.பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம். இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.
இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய். நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.
தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன். அன்புடன் சீனுராமசாமி திரைப்பட இயக்குநர்
கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தது பலருக்கும் ஷாக் தான். ஏனெனில் பைனல் வரை சென்றால் அவர் தான் கண்டிப்பாக டைட்டில் அடிப்பார் என்று இருந்தது.
ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறியது அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்நிலையில் கவின் இன்று கமலை சந்தித்து பிக்பாஸ் மேடையில் முழு விளக்கத்தையும் கொடுத்தார்.
அப்படி அவர் பேசுகையில் ‘நான் கண்டிப்பாக ஒரு சில வாரம் கழித்து வெளியே போகும் எண்ணத்தில் தான் இருந்தேன்.
அப்போதே வந்திருந்தால் லொஸ்லியா இன்னும் மனம் உடைந்திருப்பார், கொஞ்ச நாட்கள் அதாவது, பைனல் முந்திய வாரம் வரை செல்வோம்.
கண்டிப்பாக ஒரு சான்ஸ் கிடைக்கும் அப்போது வெளியே வந்துவிடலாம் என்று தான் இருந்தேன், அதேபோல் கிடைத்தது வந்துவிட்டேன்’ என்று கவின் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் நடிப்பில் வந்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் கதாசிரியராக பணியாற்றிவர் மகரிஷி. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
எழுத்தாளராக இவர் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் எழுதியுள்ளார். சினிமாவில் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, நடிகை லதா, சுமித்ரா நடித்த வட்டத்துக்குள் சதுரம், ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் படத்திலும் பணியாற்றியுள்ளார்.
என்ன தான் முடிவு என்ற படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருதும் பெற்றுள்ள அவருக்கு 87 வயதாகிறது. அவரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் தனிமையில் தவிக்கும் லொஸ்லியாவுக்கு ஆதரவு வழங்குவதாக வனிதா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,என்னுடைய ஓட்டு லொஸ்லியாவுக்குதான். இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம். இந்த தருணத்தில் அந்த பெண் விருப்பம் தேர்வு இல்லை அவரை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன்.
அவள் ஒரு டார்லிங் எனக்கு மற்றபடி மற்றவர்கள் மேல் எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, வனிதாவின் இந்த கருத்து ரசிகர்களுக்கு கடும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சினிமா உலகில் புகழின் உச்சத்தை தொட்ட நடிகர் கமல்ஹாசன் , தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
64 வயதாகிவிட்ட நிலையிலும் , சினிமா ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என கலக்கி வருகிறார்.
என்னதான் தனது பணியில் ஆர்வமாக இருந்தாலும், தனது உடலையும் மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
தினமும் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்வார், அப்படி நேரம் கிடைக்காவிட்டால் வீட்டில் உடற்பயிற்சி செய்துகொள்வார்.சாப்பாட்டு விடயத்தில் அசைவ விரும்பி ஆவார்.
மற்ற உணவுகளை விட கமல்ஹாசனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் சமைப்பதற்காகவே தனி சமையல்காரரை சமையலுக்கு வைத்திருந்தாராம்.
அதுவும் கேரளத்தின் கறிமீன் ப்ரை என்றாலே கமலுக்கு தனி பிரியமாம். இவர் கேரளத்திற்கு சென்றால், அடிக்கடி இந்த கறிமீன் ப்ரையை தான் சாப்பிடுவாராம்.
துரித உணவுகளை தவிர்க்கும் கமல்ஹாசன் மாட்டிறைச்சியையும் விரும்பி சாப்பிடுவார். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உணவுகளை அதிக அளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை.
பால் குடிப்பதை விட பிளாக் காபி அதிகம் குடிப்பார்.மேலும், இவருக்கு பிடித்த உணவு பிரியாணி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்தினால் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
திறமைகள் நிறைந்த அபிராமியின் வேகமாக டென்சன் ஆகி படபடவென பேசிவிடும் காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில விமர்சனங்களை சந்தித்தார்.
காதல் ஆசை யாரை விட்டது இவரையும் விட்டு வைக்காமல் இருக்க. முகென் விசயத்தில் இவரின் மீது சில அதிருப்தி இருந்தது.ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் அவர் தற்போது தன்னை ஏளனம் பேசினாலும், என்னை ஏளனமாக பேசினாலும்..
என் அன்பை மட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது. அன்பே சிவம் என பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ளார்.அதே வேளையில் இந்த பதிவில் ஏளனம் என்பதற்கு ஏளனம் என தவறாக வார்த்தை பதிவிட தொடர்ந்து மதுமிதா ஆ ர்மி மட்டுமில்லாது அவரின் தவறை சுட்டிக்காட்டி கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.