ஒத்த செருப்பு படத்தில் இவர் தான் உஷாவா? வெளிச்சத்திற்கு வந்த அந்த முகம்!!

வெளிச்சத்திற்கு வந்த அந்த முகம்..

சமீபத்தில் வெளியான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது . பார்த்திபன் எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான கதைகள் தேர்தெடுத்து இயக்குவார்.

அதைப்போல தமிழ் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாத ஒரு புதுவிதமான முயற்சியை கையில் எடுத்து ஒத்த செருப்பு படம் இயக்கி உள்ளார்.

படத்தில் பார்த்திபன் மற்றும் கதாபாத்திரத்தின் உருவம் இல்லாமல் பாத்திரத்தின் குரல்களை மட்டுமே வைத்து முழு படத்தை இயக்கியுள்ளார். இந்த புது முயற்சிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

படத்தில் கதாபாத்திரத்தின் உருவம் இல்லாமல் குரல் மட்டும் கேட்பதால் அவர்கள் யார் எப்படி இருப்பார்கள் என்று கற்பனையை தூண்டியது.

படத்தில் பார்த்திபன் மனைவி உஷாவின் குரல் அந்த கதாபாத்திரத்திற்கு பிளஸ். அந்த குரல் யாருடையது தெரியாமல் இருந்த நிலையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ஹீரோயின் காயத்ரியின் குரல் தெரியவந்துள்ளது.உ ஷாவின் குரல் காயத்ரி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

 

ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை : கடும் வியப்பில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்!!

ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை

சின்னத்திரை நடிகை யஷாஸ்ரீ மஸுர்க்கர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஒரு வருஷமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.

கார் என்னிடம் இருந்த போது காரை ஓட்ட ஓட்டுநர் தேவைப்பட்டார். அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.

எனக்கு சரி வர கார் ஓட்டத் தெரியாது. ஆட்டோ என்றால் செலவும் குறைவு. நானே ஒட்டிக் கொள்ளவும் முடியும். அதனால்தான் காரிலிருந்து ஆட்டோவுக்கு மாறினேன். இந்த ஆட்டோவை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை.

எனது டென்மார்க் நண்பர் இந்தியா வந்தபோது இந்தியாவைச் சுற்றி பார்க்க அவர் வாங்கியது. டென்மார்க் திரும்பும்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு சென்றார். அதன் பின்னர் நான் தொடர்ந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து விட்டடேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவருடன் அவர் வளர்க்கும் நாயும் பயணம் செய்யுமாம். தற்போது அவரது ஆட்டோவில் பல வசதிகளை செய்து கொண்டிருக்கிறாராம்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதால் ரசிகர்கள் கடும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த காரணத்தினால் இரண்டு நாள் தூங்கவில்லையாம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹீரோயின் என்றால் காதல் காட்சி பாடல்கள் என்று ரொமான்டிக் கதைகளை தேர்ந்தெடுக்காமல் பல வித்யாசமான கதைகளை தேர்வு செய்து தைரியமாக களத்தில் இறங்கி நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடித்த காக்க முட்டை படம் பயங்கர ஹிட் .அந்த படத்தின் மூலமாக அவர் அதிக பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்மேலும் ஷங்கர் இந்தியன் 2 படத்தை பிரமாண்டமாக இயக்கிவருகிறார்.

இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட் ஆகிருந்த வேலையில் சில காரணங்களால் பின்பு அந்த படத்தில் இருந்து விலகி கொண்டார் .இதை குறித்து அவரிடம் கேட்ட போது டிசம்பர் மாதத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினேன். ஆனால் படப்பிடிப்பு தாமதமாக ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கியது.

அப்போது நான் வேறு சில படங்களில் கமிட் ஆகிருந்ததால் படத்தில் நடிக்கமுடியாமல் விலகிக்கொண்டேன். ஆனால் இந்த சம்பவம் காரணமாக நான் இரண்டு நாள் தூங்கவில்லை இல்லை என்று வருத்தத்துடன் அவர் கூறுகிறார்.

கவின் பாதியில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதற்கு காரணமே இதுதானா? செம மாஸ்டர் பிளான்!!

பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியில் வெளியேறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் மக்கள் எலிமினேட் செய்யாமல் தானாகவே வெளியே சென்றவர் கவின். இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி கடும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் என்று இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கு 28,50000 ரூபாயை பெற்றுள்ளார்.

ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் 1,50000 ரூபாயை மட்டுமே பெற்றிருப்பார். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை எதற்காக வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே கிளம்பிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல தமிழ் நடிகை ரேகா இ றந்துவிட்டாரா? ச டலமாக அவர் இருப்பதாக வெளியான வீடியோவின் பின்னணி என்ன?

பிரபல தமிழ் நடிகை ரேகா இ றந்துவிட்டாரா?

பிரபல நடிகை ரேகா இ றந்துவிட்டார் என செய்திகள் வெளியாகும் நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை பற்றி வதந்தி பரப்புகிறவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில், காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ரேகா.

இவர் உ யிரிழந்துவிட்டதாகவும் இவர் உடலுக்கு பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு வீடியோ யூ டியூப்பில் பரவியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரேகா தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், எனக்கு பலரும் போன் செய்து இ றந்துவிட்டாயா என கேட்கிறார்கள்.

அவர்களிடம் சிரித்து கொண்டே ஆம் நான் செ த்துவிட்டேன், இப்போது பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.

நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொ ந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா?

இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு இவர்களை க டுமையாக தண்டிக்க வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.

அனல் பறக்கும் இறுதி நாள் Voting : கவீனால் ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : வெளியேற போவது இவரா?

அனல் பறக்கும் இறுதி நாள் voting..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனால் பெரும் சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளார். அது மாத்திரம் இல்லை, லொஸ்லியாவும், யாரிடமும் பேசாமல் என்னையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.தற்போது கவின் வெளியேறிய நிலையில் லொஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஷெரீனுக்கு மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் ஷெரீன் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பாக உள்ளது. மேலும், ஷெரீன் வெளியேற்றப்பட்டால் லொஸ்லியா மட்டுமே இறுதி பெண் போட்டியாளராக இருப்பார்.

இதனால், பெண்களின் ஆதரவு இவருக்கு அதிகம் இலங்கை பெண்ணுக்கு கிடைக்கும். இந்நிலையில், இறுதி வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மேலும், இந்த தகவல் எந்த அளவு உறுதியானது என்பது தெரிய வில்லை. பொருத்திருந்து பார்ப்போம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தெரிந்து விடும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!

சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்  எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்க, மனிதத் தன்மையுடன் இருந்து மக்களின் மதிப்பை பெற்ற சேரன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் தனஞ்ஜெயன் ‘வெல்கம் பேக்’ சேரன் சார், நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை கொடுத்தீங்க என்னுடைய வாழ்த்துக்கள் சார். மேலும் உங்களுக்கான அடுத்த பணி காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதற்காக சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் சொன்ன மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்தனா , இல்லையான்னு எனக்குத் தெரியல. என்ன பொறுத்தவரை வெற்றி, தோல்வி எல்லாத்தையும் தாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்தது எனக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது.

இந்த உலகத்தில் நாம் அனுபவமாக இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தந்தது பிக்பாஸ்.

இந்த தருணத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.நாம் என்ன தான் நாமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழல் நம்மை அந்த மாதிரி வாழ விடாது.

அதையும் தாண்டி வாழ்ந்தால் நம்முடைய அதிர்ஷ்டம் என்றும் கூறினார். இந்த வகையில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த இந்த 90 நாட்கள் ரொம்ப பாக்கியம் செய்தவன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மேலும், சேரன் அவர்கள் டைரக்டர் தனஞ்ஜெயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தகட்ட பணிக்கு நான் தயாராக உள்ளேன் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மலேசிய மக்கள் ஏன் இப்படி கேவலமான ஒருத்தனை.. அங்க வச்சிருக்கீங்க : லைவ் வீடியோவில் அபிராமி கூறியது யாரை?

அபிராமி கூறியது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் கடந்த இரண்டு சீசனைவிட பல விமர்சனங்களையும், ச ர்ச்சைகளையும் பெற்றது.

இந்த பிக்பாஸ் சீசனில், பல காதல் கதைகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த வகையில் நடிகையும், மொடல் அழகியுமான அபிராமி மலேசிய நபரான முகேன் ராவை காதலித்து வந்தார்.

அதாவது, ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். இதனால், பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அவரிடமும் ச ண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். இதனால், முகேன் அபிராமியை காதலிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அபிராமி அடிக்கடி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படங்களை வெளியீட்டு வந்தார்.

இதனால் கடுப்பான சாக்க்ஷி, அபிராமியை மறைமுகமாக தா க்கி பேசி இருந்தார். அதே போல அபிராமி விளம்பரத்திற்காக தான் பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, லைவ் வீடியோ செய்துகொண்டிருந்த போது மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், நீ மலேசியா வந்தால் கல்லால் அடிப்பேன் என்று கூற, உடனே கோபமான அபிராமி இதுபோன்ற கேவலமான ஆட்களை மலேசியாவில் ஏன் வைத்துள்ளீர்கள் என்று மிகவும் ஆ த்திரமாக பேசியுள்ளார்.குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? பிக்பாஸ் வரும் முன்பு நடந்த சம்பவங்கள்!!

கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பு டிவி சீரியல் மற்றும் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காகத்தான் கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து விலகினார். ஆனால் படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகாமல் வருடக்கணக்கில் தள்ளிப்போனது. ஆரம்பத்தில் அவரை பல தயாரிப்பாளர்கள் தேடி வந்தாலும், முதல் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் ஒரு பிரபல இயக்குனரிடம் அசிஸ்டன்டாக சேர்ந்துவிட்டாராம் கவின். உதவி இயக்குனர் வேலையில் சரியாக உணவு, தூக்கம் இல்லாமல் கவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிகம் ஒல்லியாகியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நட்புன்னா என்னனு தெரியுமா படம் ரிலீஸ் ஆனாலும் பெரிய படத்துடன் மோதியதால் வசூல் அதிகம் பெறவில்லை. அதன் பிறகு பிக்பாஸ் சென்ற அவர் ரசிகர்கள் பெரிய அளவில் கவர்ந்தாலும், தற்போது இறுதி கட்டத்தில் தானாக வெளியேறியுள்ளார்.

டிவி நடன நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி : இரண்டு கைகளும் செயலிழந்து பரிதாபமான நிலையில் பிரபல நடிகை!!

பரிதாபமான நிலையில் பிரபல நடிகை!!

தற்போதெல்லாம் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் மிக அதிக ரிஸ்க் கொண்ட பல விஷயங்களை செய்கிறார்கள்.

அப்படி Nach Baliye என்ற ஹிந்தி ஷோவின் 9வது சீசனில் பிரபல நடிகை பூஜா பேனர்ஜி ஆடிய நடனத்தின் போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

வலியால் துடித்து மயங்கிய அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது இரண்டு கைகளும் தற்போது செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் பூஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.