நடிகர் தனுஷ் எங்களுக்கு பிறந்த மகன் என கூறிய தம்பதி மீண்டும் கிளப்பிய சர்ச்சை!!

நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மதுரை தம்பதிகள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன், மீனாட்சி தம்பதி இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதில் மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தனுஷூக்கு உரிமை கோரும் மதுரை தம்பதிகள் வழக்கு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடுரோட்டில் நடிகை நமீதா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய நிலையில் அவர்களுடன் நமீதா கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார்.

இந்நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உட்பட 4 பேர் இருந்தனர்.

இதனையடுத்து, அந்த காரை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான், வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த சோதனையின் போது அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம், நகை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.