பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிரடி முடிவு, அங்கேயே போய் படம் எடுக்கின்றாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிரடி முடிவு…

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் எந்த படம் வந்தாலும் இந்தியளவில் மிகப்பெரும் வரவேற்பு பெறும்.

அந்த வகையில் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வந்தனர்.

தற்போது இவர் ராஜமுந்திரியில் உள்ள சிறைச்சாலையில் ஒரு காட்சி எடுக்கவுள்ளாராம், அதற்காக அங்கேயே தன் படக்குழுவை அழைத்து சென்றுவிட்டார்.

கமல் அங்கு வந்ததை அறிந்து பல காவலர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்!!

தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்..

விஜய், நயன்தாரா இணைந்து நடிக்கும் இரண்டாம் திரைப்படம் பிகில். இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

இப்படத்தன் இசை வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றுவருகிறது. இதற்காக பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிடுவிழாவில் கலந்துகொண்ட அணைத்து ரசிகர்களுக்கும் பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சி மற்றும் விசில் பரிசாக வழக்கங்கப்பட்டது.

அஜித் எவ்ளோ பெரிய மனுஷங்க, இப்படி ஒரு விஷயத்தை செய்தாரே, புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!!

புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்..

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது, இந்நிலையில் அஜித் விஸ்வாசம் படம் விவேகம் படத்தின் தோல்விக்காக தான் உடனே செய்துக்கொடுத்தார் என்பது தெரிந்தது தான்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் அழகப்பன் ஒரு பேட்டியில் ‘தற்போதுள்ள நடிகர்கள் யார் தயாரிப்பாளரை பார்க்கிறார்கள்.

அஜித் விவேகம் தோல்விக்கு விஸ்வாசம் செய்துக்கொடுத்தார், அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகி, அந்த தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து லாபத்தை சம்பாதித்தார், எவ்ளோ பெரிய மனுஷங்க அவர்’ என்று புகழ்ந்துள்ளார்.

சமூக வலைத்தள ச ண்டை பற்றி ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!

ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்..

ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து ச ண்டை போட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரு வசனம் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சமூக வலைத்தளங்கள் பற்றி பேசியுள்ளார்.

“சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். யார சந்தோசபடுத்த ஆன்லைன்ல ச ண்டை போடுறீங்களோ அவங்களுக்கே உங்கள பிடிக்காம போயிடும்” என விஜய் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

 

பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடியவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை, மலேசியாவை சார்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான்.

இந்நிலையில் பிக்பாஸ் நேற்று முட்டையை எடுத்து அடிக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் சேரன் மிகவும் சோர்ந்து இருந்தார்.

அதோடு அவர் முதுகில் ஏதோ கட்டியிருந்தது போல் இருக்க, அதை பார்த்த ரசிகர்கள், அவருடைய முதுகில் அடிப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

தன்னுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்த தமிழ் நடிகர்கள்!!

தமிழ் நடிகர்கள்

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி : கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

பாக்யராஜ்-பூர்ணிமா : திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜும், பல தென்னிந்திய மொழிகளில் நடித்த பூர்ணிமாவும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அஜித்குமார்-ஷாலினி : நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ என்ற ஒரே படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது தான் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் வெளியான அடுத்த ஆண்டிலேயே(2000) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா-ஜோதிகா : ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன் முறையாக ஒன்றாக நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடி, அதன் பின்னர் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தது. ஆனால், முதல் படத்திலேயே இவர்களின் காதல் மலர்ந்துவிட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பிரசன்னா-சினேகா : நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரத்குமார்-ராதிகா : சரத்குமார்-ராதிகா இருவரும் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பொன்வண்ணன்-சரண்யா : இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சுந்தர்.சி-குஷ்பு : இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி கடந்த 1997ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். சுந்தர்.சி இயக்கிய முதல் படமான ‘முறை மாமன்’ திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்துள்ளார்.

முதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கமல்ஹாசன் : அவரை ஏன் பிரிந்தார் தெரியுமா? கசிந்த ரகசியம்!!

கமல்ஹாசன்

சினிமாவிலும், அரசியலிலும் பிரபலமாக இருக்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் அதிகம் பேசமாட்டார். இவர் காந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் பத்து வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன்பின்னர் சரிகாவை மணந்த கமல்ஹாசன் அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து கவுதமியுடன் வாழ்ந்த அவர் 2016-ல் அவரை பிரிந்தார். மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றும் நடிகர் கமல்ஹாசன் திருமணத்தின் மீது நம்பிக்கையற்றவர்.

இதனை அவரே வெளிப்படையாக ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார், திருமணம் என்பது பழைய கலாசாரம். ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம். யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை என்று கூறினார்.

கமல்ஹாசன் வாணியை பிரிந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை.
இதன் காரணத்தினாலேயே கமல், வாணி கணபதியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கூட நமது எம்.ஜி.ஆர் என்ற பத்திரிக்கையில் கமல் குறித்து ஒரு கவிதை போல் வெளியிட்டுள்ளனர். அந்த கவிதை முழுவதும் கமலை திட்டியுள்ளனர், அதில் வாணி கணபதி கர்ப்பமாக இருந்த போது வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றினார்.

அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டனர். ஆனால், இன்றுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமல் விளக்கம் அளித்தது கிடையாது.

எனது படுக்கையறையை எட்டிபார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது தான் அவரின் பதிலாக உள்ளது.

ரசிகர்களால் குடும்பத்தோடு பொது இடங்களுக்கு நிம்மதியாக செல்லமுடியவில்லை : குமுறும் நடிகை டாப்சி!!

நடிகை டாப்சி

தமிழ் மொழியில் ஆடுகளம் படத்தின் மூலம் பிரபல நடிகையாக அங்கீகாரத்தினை பெற்றவர் நடிகை டாப்சி. இவர் அதன்பின் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். வேலை இல்லாத சமயங்களில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் ஷாப்பிற்கு வெளியில் தன் குடும்பத்துட வெளியில் செல்லமுடியவில்லை. ரசிகர்கள் தன்மீது இருக்கும் அன்பால் தன்னிடம் நெருங்கி பேசுவதால் எனக்கு சில இடையூறும் நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் ஷாபிங் செய்ய முடியவில்லை. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தான் ஆடைகளை வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

நண்பர்களுடன் சென்று காஃபி ஷாப்பிற்கு கூட என்னால் செல்ல கஷ்டமாக உள்ளது என்று அவர் படும் துன்பத்தை கூறியுள்ளார்.

9ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்ற முரட்டுகுத்து பட நடிகை.. மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்??

மியா கலிஃபாவை வைத்து எப்படி ஒப்பிடலாம்??

இருட்டு அரையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு கடைசி வாரம் வரையில் இருந்தார். யாஷிகாவுன் ஐஸ்வர்யா தத்தாவுன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாலியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

போட்டோஹுட்டில் அதிக ஆர்வமுடன் இருக்கும் யாஷிகா சமீபத்தில் படுமோசமாக ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார். ஒரு பேட்டியொன்றில் தான் 12ம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் 9 வது படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன். அது எனக்கு பெரிய தவறாக தெரியவில்லை.

தன்னுடைய ஹாட்டான படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் ஆபாச நடிகை மியா கலிஃபா போல இருப்பதாக சொல்லி இருப்பதை கண்டித்து மற்றவர்களை ஒப்பிட்டு என்னை பேசிவது தவறு என்றும், நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் என்னை கவர்வதற்கு நல்ல பர்ஃப்யூம் போட்டும், உயரமாக, தாடி அதிகமாக வைத்திருக்கும் ஆண்களை இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

லொஸ்லியாவிற்காக கவின் செய்த கேவலம், இன்னும் திருந்தவில்லையா?

கவின் செய்த கேவலம்

கவின் பிக்பாஸ் வீட்டில் கடும் சர்ச்சையில் மாட்டும் போட்டியாளர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போது லொஸ்லியாவை வெறுப்பேற்ற இவர் ஷெரீனிடம் சென்று வழிந்து வருகின்றார்.

இது பார்ப்பவர்கள் அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, லொஸ்லியா ஒதுங்கி சென்றாலும் கவின் வேண்டுமென்றே அவரை சீண்டுவது போல் தெரிகின்றது.