நீண்ட நாட்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!!

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, வேதாளம் என பல படங்களில் நடித்தவர். இவர் கடைசியாக நடித்த படம் றெக்க.

இப்படத்தை தொடர்ந்து இவர் வேறு எந்த படங்களிலும் தலைக்காட்டவில்லை, தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

இவர் இயக்குனர் வசந்தபாலனின் உதவி இயக்குனர், மேலும், இப்படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக ஆரி நடிக்க, சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவும் கமிட் ஆகியுள்ளார்.

 

பிரபல சீரியலில் ஆபாச காட்சிகள் : சன்டிவிக்கு அபராதம்!!

சன்டிவிக்கு அபராதம்!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை தொடர்கள் என்றாலே சன்டிவி தான், இன்றுவரையிலும் டாப் 5 இடங்களில் பெரும்பாலும் சன்டிவி தொடர்களே இடம்பெற்றுள்ளன.

மாலை நேரங்களில் சன்டிவி சீரியலே பார்க்காதவர்களே குறைவு என்று கூறும் அளவுக்கு பெரும்பாலான வீடுகளை அலங்கரித்துள்ளன.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்த சீரியலில் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிப்பரப்பப் பட்ட எபிசோட்களில் கூட்டுப்பலாத்காரக் காட்சிகளும் அது பற்றிய தீவிரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன.

இதற்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்ததுடன், பிசிசிசி அமைப்புக்கும் புகார்கள் சென்றன, இதனை தொடர்ந்து சன் டிவிக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதமும் சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்யாண வீடு சீரியல் ஒளிப்பரப்பாகும் போது 30 வினாடிகள் கொண்ட மன்னிப்பு காட்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டுமெனக் கூறியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்? அது கடவுள் கொடுத்த வரம்.. ஓபனாக பேசிய பிரபலம்!!

பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்?

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய 20 நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் குரல் கொடுக்கும் பிரபலமான கோபி நாயர் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் குறித்து அவர் பேசியுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களிலும், பிக்பாஸ் குரல் கொடுப்பவர் இவர் தான் என பல வதந்திகள் வந்தன. அதுபோல இந்த பிக்பாஸ் சீசனிலும் குரல் கொடுப்பவர் இவர் தான் என்று கூறிவந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், சத்தியமாக பிக்பாஸ் வாய்ஸ் நான் கொடுக்கவில்லை. பிக்பாஸ் குரல் கொடுப்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவரை பார்க்கவும் முடியாது. காரணம் , அவரின் உருவம் வெளியே தெரிந்துவிட்டால் அந்த கர்ஜனையான குரல் சாதாரணமான குரலாக எண்ண நேர்ந்துவிடும். அதனால் அவரின் உருவம் கடைசி வரை வெளியே காட்ட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும், இந்த சீசனில் அந்த குரல் சற்று தொய்வை சந்திக்கிறது என்றே கூறலாம். அந்த குரலை கண்டால் முதல் இரண்டு சீசன்களில் மிரளுவார்கள். ஆனால் தற்போது அப்படி நிகழுவதில்லை. தலைகீழாக மாறியுள்ளது.

இன்னும் 20 நாட்கள் உள்ளது. போட்டியாளர்களை பிக்பாஸ் சுண்டி இழுக்க வாய்ப்பிருக்கிறது. அந்த குரலின் கர்ஜனை மேலோங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கவின், 80 நாட்கள் தெரிந்து கொள்ளாததையா இனிமேல் தெரிந்துகொள்ள போகிறேன் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தவறு, தெரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. திருத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காதல் என்பது ஒரு புனிதமான விஷயம். அதை மற்றவர்கள் விமர்சிக்கும் விதமாக கவின் செய்யும் செயல்கள் வருத்ததிற்குரியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

லாஸ்லியா வெளிநாட்டிலிருந்து தன்னந்தனியாக வந்து தைரியமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் .மேலும், தர்ஷன் ஒரு வலிமையான போட்டியாளர் என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண் : பரபரப்பாகும் பிக் பாஸ்!!

பரபரப்பாகும் பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் இறுதியில் சேரன் மற்றும் ஷெரின்னு அதிக போட்டிகள் நிலவியது. ஆனால், இந்த வாரம் திடீர் மாற்றமாக லொஸ்லியா மற்றும் ஷெரினுக்கு போட்டிகள் நிலவுகின்றது.

நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் மூன்றாவது, நான்காவது இடத்தில் லொஸ்லியா மற்றும் ஷெரின் உள்ளனர்.இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது.

சேரனுக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. பொருத்திருந்து பார்ப்போம் இறுதி நேரத்தில் ஈழத்து பெண் காப்பாற்றப்படுவாரா என்று.

பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில், முதல் படமே சோலோ ஹீரோயின்!!

பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில்,

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து செம்ம கலக்கு கலக்கியவர்கள் பலர். சிவகார்த்திகேயன், சந்தானம் தற்போது ரியோ வரை வந்துவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த செம்ம புகழ் பெற்றவர் சித்ரா, இவரிடம் நம் சினிஉலகம் சார்பாக தொடர்புக்கொண்டு பேசிய போது சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.

இதில் அவர் கூறுகையில் ‘தற்போது தான் கால்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இதில் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம். இப்படத்தில் சித்ரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

மேலும், படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூரில் நடக்க, இன்னும் சில தினங்களில் முடியவுள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.

பாத்ரூம் வரை சென்று ஷெரினிடம் எல்லை மீறிய கவின்!!

ஷெரினிடம் எல்லை மீறிய கவின்!!

பிக்பாஸ் 3வது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறமிருக்க கவின் கடந்த சில நாட்களாக ஷெரினிடம் எல்லைமீறி பேசி வருகிறார்.நேற்றும் அதே போல தொடர்ந்து கவின் அவரை irritate செய்துவந்தார். ஷெரின் பாத்ரூமிற்கு குளிக்க சென்றபோதும் கவின் அவரை பின்தொடர்ந்து சென்றார்.

“ஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள்ளயும் வருவியா” என ஷெரின் கோபமாக கேட்க, “இல்லை.. எனக்கும் டெசண்சி தெரியும்ல” என கூறி சமாளித்தார் கவின்.

லாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா : முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் – பாத்ரூமில் நடந்தது என்ன?

முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இன்னும் 15 நாட்களில் முடிவடையவுள்ளது. வெற்றி பெறுவதற்கு எல்லோரும் கடுமையாக போட்டி போடத்தொடங்கிவிடுகிறார்கள்.

இதில் அண்மையில் கவினால் லாஸ்லியாவும் ரசிகர்கள் வெறுப்பை சம்பாதித்தார். பெற்றோர்கள், கமலின் அறிவுரையை தொடர்ந்து அவர்கள் இருவரும் விலகி போட்டியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

இருவரும் முன்பு போல நெருக்கமாக பேசிக்கொள்வதில்லை. அதே வேளையில் கவின் முகத்தில் சோகம் இன்னும் மாறவில்லை. மனதிற்குள் கவலை இன்னும் இருக்கிறது.

இந்நிலையில் பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் லாஸ்லியாவிடம் கவின் பேச வருகிறார். ஆனால் அங்கு லாஸ்லியா மற்றும் முகேன் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கவின் அப்படியே திரும்பி செல்கிறார்.இது Unseen வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது

சாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி : மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்!!

காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் தற்போது போட்டியாளராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். அண்மையில் அவரை சந்திக்க வந்த அவரின் மனைவி சில்வியாவையும் மகள் லாலாவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவருக்கு முன்பே நடிகை காஜல் பசுபதியுடன் திருமணமாகி பரஸ்பர விவாகரத்து ஆனதை பலரும் அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களோடும் டிவிட்டரில் பேசி வருகிறார். இந்நிலையில் அவரை, சாண்டிக்கும் உங்களுக்கு என்ன? குழந்தைகள் இருக்கிறதா? இது உண்மையா பொய்யா என பலரும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் காஜல் கடுப்பாகியுள்ளார். மேலும் அவர் இந்த கேள்விக்கு நான் அவரை திருமணம் செய்துகொண்டேன், விவாகரத்தும் பெற்றுவிட்டேன். குழந்தைகள் இருப்பதாக வரும் தகவல் பொய்யானது. அவர்கள் என்னுடை உறவுக்கார குழந்தைகள். எனக்கு குழந்தை இல்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். நான் எப்போதும் வருத்தப்படுவது இந்த ஒரு விசயத்தில் தான் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் : சேரப்பா ரியாக்‌ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்!!

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்துவிட்டது. தற்போது உள்ளே ஷெரின், சாண்டி, சேரன், கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளார்கள்.

இனி தான் நிஜமான போட்டியே ஆரம்பம் என்பது போல உள்ளிருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மாறிவருகிறது. டிகெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் சொல்லி காட்டுகிறார். லாஸ்லியாவும், மற்ற போட்டியாளர்களும் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

இணையதளத்தில் பிரச்சாரம் ஆரம்பித்த பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம்!!

அபிராமி

பிக் பாஸ் 3 பல சர்ச்சைகள் சண்டைகள் எல்லாம் தாண்டி இறுதி கட்ட போட்டியில் இருக்கிறது.

கடைசி வாரம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சென்றனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் லொஸ்லியா மற்றும் ஷெரின் இருக்கிறார்கள்.

லொஸ்லியாவும் ஷெரினும் அபிராமிக்கு தோழிகளாக இருந்த நிலையில் அபிராமி போட்டியில் இப்போது இல்லை.

ஆனால் அபிராமி பிக்பாஸ் ரசிகர்களிடம் ஓட்டு போடுவது உங்கள் விருப்பம் ஆனால் எனது தோழியும் தங்கையும் நாமினேஷனில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன் ஷெரின் கடைசி வரைக்கும் போட்டியை தொடர்வதற்கு தகுதியானவர் எனவே அவர்களுக்கு ஓட்டு போடுமாறு ரசிகர்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.