பிக் பாஸ் 3 தர்ஷனுக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சனம் ஷெட்டியும் தர்ஷனும் காதலிக்கிறார்கள் என்ற தகவலும் வர, ஒரு கட்டத்தில் சனம் நான் இனி தர்ஷன் காதலி இடையாது என வீடியோவே வெளியிட்டுவிட்டார்.
தற்போது யு ஆர் ஜமீல் இயக்கி வரும் மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் சனம் ஷெட்டி இப்படத்தில் இணைய உள்ளராம்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் மஹா படத்தில் ஹன்சிகாவும் கேமியோ கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்கள்.
திரில்லர் படமான இந்த பட போஸ்டர் வெளிவர படத்தின் மீது ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்போது சனம் ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றி மக்களுக்கு பரீட்சியமான பாடகி ரம்யா பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. திருமண நிகழ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, ரம்யா தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இலங்கை தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் அல்லாமல் அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களையும் சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளனர்.
ராஜா ராணி சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.
இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதுடன் தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தங்களது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் கொடுத்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்க…
அதுமட்டுமின்றி அவர்களைப் போலவே அவர்கள் ஹனிமூன் சென்ற மாலத்தீவும் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் பின்னணியில் பிக் பாஸின் மிகப்பெரிய பிளான் உள்ளது. பிக் பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என மக்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர் வனிதா.
ஆனால் மூன்றாம் வாரமே அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.
எதிர்பார்த்தபடியே கண்டெண்டுகளை வாரிக் கொடுத்த வனிதா, நேற்று மீண்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யார் எது பேசினாலும், அதை வைத்து குட்டி கலாட்டாக்கள் பண்ணுவதில் வல்லவராக இருந்தார் வனிதா.
இதனால் அவர் வெளியேற்றப்பட்டதும் இனி கண்டெண்ட்டுகள் கிடைக்காதோ என்ற தவிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னணியிலும் சரி, இனி வரும் எபிசோட்களுக்கான பிளானிலும் சரி, பிக் பாஸ் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னமும், வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை வைத்து மட்டும் ஓட்ட முடியாது. ஏற்கனவே இது பிக் பாஸா இல்லை சீரியலா எனக் கேட்கும் அளவிற்கு அழுகாச்சி காவியமாக நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.
காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என போர் அடிப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். எனவே, போட்டியாளர்களை ஆக்சனில் இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு வந்துவிட்டது.
இனியும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், அவர் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். எனவே தான் அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.
பிரச்சினை செய்யாமல் உள்ளே இருந்தால் அவரது கெத்தே போய் விடும் என்பதால் வனிதாவும் இந்த காண்ட்ராக்ட்டிற்கு ஓகே சொல்லி விட்டார் போல.
கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.
ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே.
இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உறவு குறித்து கூறியதாவது, சுந்தர் என்னை புரபோஸ் செய்யும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் புரப்போஸ் செய்தார். அது எனக்குப் பிடித்திருந்ததால் நான் உடனே சம்மதித்தேன்.
ஆனாலும் எங்களது திருமணம் உடனே நடந்து விடவில்லை. ‘ஒரு நடிகையான உனக்கு செளகர்யமான வாழ்க்கைமுறை அமைத்துத் தரும் அளவுக்கு நான் எப்போது பொருளாதார வசதி அடைவேனோ அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என சுந்தர் கூறியிருந்தார்.
அதன்படி 1999 ல் அவர் சொந்த வீடு கட்டினார். அவர் எதிர்பார்த்த பொருளாதார வசதிகளை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். உடனே அடுத்த வருடமே 2000 ல் எங்களது திருமணம் நடந்தது.’ இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
பிரபுவும் குஷ்புவும் இணைந்து தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சின்னத்தம்பி, பாண்டித்துரை, மை டியர் மார்த்தாண்டன், கிழக்குக்கரை, சின்ன வாத்தியார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தனர் என்பதும் இதில் சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். ஆனால் லாஸ்லியாவின் பெற்றோர் வீட்டுக்குள் வந்தபோது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாஸ்லியா இனி கேமில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என முடிவெடுத்தார்.
இந்நிலையில் கமலிடம் லாஸ்லியா சொன்ன ஒரு விஷயம் பற்றி கவின் நேற்று கோபத்துடன் பேசினார். “நேத்து நீயும் அதைத்தானே சொன்ன. கமல் சார் கிட்ட பேசும்போது. பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது. அது உண்மையா பொய்யா தெரியல இன்னும் அப்டினு” என கவின் கேட்டார்.
அதற்கு லாஸ்லியா “நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை. சேரன் பற்றி இதற்குமுன் கூறியதை தான் மீண்டும் கூறினேன். உண்மையை பொய்யா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருப்பது பற்றித்தான் பேசினேன்” என பதில் அளித்தார்.
குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பார்த்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புதிய பதிவை வெளியிடுபவர் ஆவார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் பசுபதியும் , இந்நிகழ்ச்சியைப் பற்றி என தன்னுடைய சொந்த கருத்துக்களை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணான லாஸ்லியா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம்தான்.
கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரத்தை பற்றியும் நடிகை காஜல் பசுபதி தினமும் புதிய வெளியிட்டவர் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்திருந்தனர் . அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே லாஸ்லியாவிடம் கவின் உடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கோபமாக கேட்டனர்.
இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பு நிறைந்த இடமாக மாறியது. லாஸ்லியாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த எபிசோடை பார்த்த நடிகை காஜல் பசுபதி,
“இனிமேல் நான் கவின் லாஸ்லியா ஆகியோரின் காதலைப் பற்றி விமர்சிக்க போவதில்லை” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த காஜல் பசுபதி ரசிகர்கள் எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்று கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.
நடிகை காஜல் பசுபதி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தாண்டு போட்டியாளராக பங்கேற்றார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.