பிரபல நடிகை இலியானா தன்னுடைய நீண்டநாள் காதலர் ஆன்ட்ரூ நீபோன் என்பவரை சமீபத்தில் பிரிந்துவிட்டார் என செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதத்தில் அவரும் இந்தியாவில் தனியாகவே பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது இலியானா கூறியுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக அவர் கூறியிருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
காலையில் எழுந்து பார்க்கும்போது கால்களில் அடிபட்டு இருக்கும் என்று இலியானா கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பலர் வந்திருந்தார்கள். அழுகை, கோபம், சந்தோசம் எல்லாம் நிரம்பி வழிந்தது.
இதில் சாண்டியை காண அவரின் மனைவி சில்வியா மற்றும் குழந்தை லாலாவும் வந்திருந்தார்கள். சாண்டி மகளை பார்த்து கண்கலங்கி அழுதார். குழந்தையுடன் அனைவரும் கொஞ்சி விளையாடினார்கள்.
இந்நிலையில் சாண்டியில் எதிர்பார்ப்பு என நேற்று கமல் கேட்டபோது என் மச்சினிச்சியும் நானும் நடனமாடுவோம், மாமியாரும் வருவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் அவர்கள் வரவில்லை என கூறினார்.
இந்நிலையில் சாண்டி மாமியார் வெளியே இருந்து இதுவரை சாண்டியை நான் மருமகனாக பார்க்கவில்லை. என் அப்பா, அம்மாவை போல தான் பார்த்தேன். மாப்பிள்ளை என கூப்பிட்டதில்லை.
இப்போது முதல் முறையாக சொல்கிறேன் ஜெயித்துவிட்டு வாங்க மாப்பிள்ளை என கூறி வாழ்த்தியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதா. அதில் அதிகாரத் தன்மையாலும், மற்றவர்கள் அடக்கி ஆள்வது போல பேசியதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
முன்பே வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் போட்டியாளராகும் வாய்ப்பை மீண்டும் பெற்றார். பிக்பாஸ் விட்டில் கடந்த வாரம் குடும்ப சுற்றில் போட்டியாளர்களை காண அவரின் குடும்பத்தார்கள் வந்தார்கள். இதில் வனிதாவின் இரண்டு மகள்கள் வந்தார்கள்.
இந்நிலையில் நேற்று கமல் ஹாசன் வனிதாவை அன்னை வனிதா அவர்கள் என கூறி பெருமைப்படுத்தியதோடு வனிதா மீது இருந்த முந்தய இமேஜ் மாறிவிட்டது. எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் வந்துவிட்டது என கூறி பாராட்டி பேசினார்.
அப்போது வனிதாவிடம் எதிர்பார்ப்பு குறித்து கேட்ட போது அவர் மனக் குமுறலோடு குழந்தைகள் மீதிருந்த பாசத்தால் மற்றவர்களை பகைத்துவிட்டேன். தன் மகன் வருவான். பிக்பாஸ் அழைத்துக்கொண்டு வருவார் என எதிர்பார்த்தேன்.
பரவாயில்லை, அவனுக்கு ஏதோ என் மீது கோபம் இருக்கிறது. அவன் என்னை புரிந்துகொண்டு திரும்பி வருவான் என நம்புகிறேன் என கூறினார்.
ஆ பாச திரைப்பட நடிகையாக இருந்த மியா கலிபா அந்த துறைக்குள் தான் நுழைந்தது பற்றியும் பின்னர் வெளியேறியது எப்படி எனவும் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஒரு சமயம் ஆ பாச திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மியா கலீபா. பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து அவர் அதிலிருந்து விலகிவிட்டார்.
அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், நான் என் சிறு வயது முழுவதும் மிகவும் பருமனாக இருந்தேன். ஆண்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான் க வர்ச்சிகரமாக இல்லை என்று நினைப்பேன்.
பின்னர் என் எடையை கணிசமாக குறைக்க தொடங்கினேன். மிகவும் பெரிதாக இருந்த என் மார்பகங்கள், சரியான அளவிற்கு மாறின. திடீரென ஆண்கள் பார்வை என் பக்கம் திரும்பியது. முதன்முதலில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை அவர்கள் புகழ்ந்து பேசியதை முதல் முறையாக கேட்டேன்.
திடீரென ஒருவர் வந்து என்னை ஆ பாசப் படங்களில் நடிக்க அழைக்கவில்லை. என்னை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், மொடலிங் செய்கிறீர்களா? நி ர்வாண மொடலாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இப்படி தான் ஆ பாச திரைப்பட துறைக்குள் நுழைந்தேன்.
ஹிஜாப் அணிந்து ஆ பாசக் காட்சிகளில் நான் நடித்த போது ஐஎஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்னை மி ரட்டினார்கள்.
ஆ பாச படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்தபின்னர் ஒரு மாதம் கழித்து நான் ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, அவர்களிடம் என் ராஜினாமா கடிதத்தை அளித்தேன். பின்னர் அவர்களிடம் நான் எப்படி உணர்கிறேன் என்று கூறினேன்.
என்னை அந்த துறையை விட்டு போக வேண்டாம், இதெல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள், ஆனால் நான் என் முடிவை மாற்றவில்லை என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார்.
இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.
1971-ம் ஆண்டு தபஷ்வினி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார்.
சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சுஜாதா.
தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும் ஏன் அவரை சந்திப்பதுமே பெரிய சவாலாக இருந்தது.
அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த வரலாறு. பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார்.
அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால் சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா கதையாகவே முடிந்துவிட்டது தான் பெரும் சோகம்.
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது குறித்த தொடர் சர்ச்சைக்கு, நடிகர் மிலிந்த் சோமன் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன்(53).
பிரபல நடிகரும்-மொடலுமான இவர், தனது மனைவியும், பிரெஞ்ச் நடிகையுமான Mylene Jampanoi-வை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு, விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 27 என்பதால், சமூக வலைதளங்களில் இவர்களது திருமணம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
அதிலிருந்து தொடர் சர்ச்சைக்கு மிலிந்த் ஆளானார். இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
மிலிந்த் சோமன் தனது காதல் திருமணம் குறித்து கூறுகையில், ‘பொதுவாக சமூகம் காதலிப்பவர்களுக்கு சாதி, மதம், பாலினம், நாடு என பல காரணங்களை கூறி தடைகளை உருவாக்கும்.
ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல. இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தான் அவசியமானது’ என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தளபதியுடன் இருந்தாலும்.அவர் இப்போ இயக்கி வெளிவர இருக்கும் படம் கைதி. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்துடன் போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில் கைதி படத்தின் முக்கிய ரகசியங்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ஒன்லைன் கேட்பவர்களுக்கு ஹாலிவுட் படம் பர்ஜ் நினைவிற்கு வரலாம் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உலகளவில் தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ், இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இறுதி நாட்களை நெருங்கியுள்ளதால் Freeze Task வைக்கப்படுகிறது, செய்வாய்க்கிழமை ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து லொஸ்லியாவின் தந்தையான மரியநேசன் வந்திருந்தார்.
10 ஆண்டுகள் கழித்து மகளை பார்த்த சந்தோஷம் இருந்தாலும், பிக்பாஸில் அவரது செயல்களால் மனம் நொந்து போயே காணப்பட்டார். உள்ளே வந்ததும் மகளை அவர் கண்டித்த விதம், சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
யார் இவர்? : இலங்கையின் கிளிநொச்சியில் மரியநேசன்- மேரி மாக்ரட்டின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி லொஸ்லியா பிறந்தார்.
யுத்த சூழ்நிலையின் காரணமாக திருகோணமலை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு அன்புவெளிபுரம் பகுதியில் ஓலைகளானாலான வீடொன்றைக் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், மரியநேசன் ஓட்டுநராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்க, 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் வாய்ப்பை தேடி கனடாவுக்கு சென்றுள்ளார்.
அதன்பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது சகோதரிகள் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்ற லொஸ்லியாவுக்கு, தமிழில் ஆர்வம் அதிகம். பல்வேறு போட்டிகளில் தன் திறமையை லொஸ்லியா வெளிப்படுத்த, பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஊடக துறையை தெரிவு செய்த லொஸ்லியா, முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி, செய்தி வாசிப்பாளராகவும் தன்னை தரம் உயர்த்தி கொண்டார்.
இதன் பின்னர் இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலக பிரபலமடைந்ததுடன் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
எனினும் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அறிவுரையால் லொஸ்லியாவின் செயல்பாடுகளை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.
தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு நியூ படத்தில் இருந்து காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
அவர்களை பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் அவர்களோடு கலந்துரையாடினார்கள். பின் தர்ஷணின் தங்கச்சி சாண்டி அண்ணா இல்லையெனில் இந்த சீசன் 3 போர் என கூறினார்.
அதே போல தர்ஷணின் அம்மாவும் கூறினார். உடனே எல்லோரும் சாண்டியை கிண்டலடித்தனர். பின்னர் தர்ஷணின் அம்மா சியாமளாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின் பிக்பாஸ் குரலில் வாழ்த்து கூறினார். உடனே சாண்டி சொல்வது போல சியாமளா நன்றி குருநாதா என கூற அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களாக போட்டியாளர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வுகளாக அமைந்துவிட்டது. முகென் குடும்பத்தாரை தொடர்ந்து, வனிதா மகள்கள், தர்ஷண் குடும்பத்தார், சேரன் குடும்பத்தார் என வந்திருந்தார்கள்.
சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் இருந்து ஞாபகம் வருதே பாடலை போட்டு சேரன் குடும்பத்தாரை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்றனர். அப்போது சேரன் கண்கலங்கி அழ, அவரின் மகள் தாமினி, சேரனின் அம்மா கமலாவும் அழுதுவிட்டார்.
மேலும் சேரனை பார்க்க சேரனின் தங்கை வனிதாவும் வந்திருந்தார். பின் சேரனின் மகள் தன் அப்பாவை தனியே கூட்டிச்சென்று நானும் அக்கா மட்டும் தான் உங்களுக்கு மகள்கள்.
என் தோழிகள் எல்லாம் உங்க அப்பா உன்ன மறந்திட்டாரா. லாஸ்லியா பத்தியே பேசிகிட்டு இருக்கிறாரு என கேட்பதாக சொல்லி வருத்தப்பட்டார்.லாஸ்லியா பக்கமே போகாதீங்க. அவ கூட பேசினீங்கனா நான் டென்சன் ஆகிடுவேன். உங்கள விட்டுக்கொடுத்த லாஸ்லியா கூட பேச்சு வச்சிகாதீங்க என கூறியுள்ளார்.
மேலும் தாமினி லாஸ்லியாவிடம் நீங்கள் எங்க அப்பா பக்கம் நிற்காவிட்டாலும் அவர் உங்க கூட எப்போதும் இருப்பார். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள் என கூறினார்.