இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் பிரபலம் இவர்தானா?- ரசிகர்களுக்கு இது குஷியா? வருத்தமா?

வெளியேறப்போகும் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாடு ரசிகர்கள் பரபரப்பாக்கிய ஒரு ஷோ. இறுதி கட்டத்தை நிகழ்ச்சி எட்ட இருக்கிறது, போட்டியாளர்களும் குறைந்து கொண்டே வருகின்றனர்.

இந்த வாரம் வந்துவிட்டது, யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள் கவின், வனிதா, தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டி.

வாக்கு எண்ணிக்கைகள் வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வனிதா வெளியேறுவார் என கூறப்படுகிறது. அவருக்கு தான் மிக குறைவான ஓட்டுகள் வந்துள்ளது.

வனிதா வீட்டைவிட்டு வெளியே போவது ரசிகர்களுக்கு வருத்தமா? குஷியா?, அவர் தான் வெளியேறுகிறாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.

கவினுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு : அடுக்கடுக்காக சரமாறி கேள்விகள் கேட்ட நபர் : பயத்தில் காதல் மன்னன்!!

கவினுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உள்ளே 7 பேர் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். காரணம் அனைவரின் உறவுகளும் உள்ளே வந்துள்ளதால் தான்.

இன்று கவினின் நண்பர் பிரதீப் உள்ளே வருகிறார். அப்போது கவின் இவனை இப்போதே அனுப்பிவிடுங்கள், இவனை அனுப்பாதீங்ககனு சொன்னேனே பிக்பாஸ், அவனுக்கு எனக்கு கருத்து ஒத்துவராது என கூறுகிறார்.

அதற்கு அவரின் நண்பர் கவின் சுயநலமாக தன்னை புத்திசாலியாக நினைத்துக்கொண்டிருக்கிறான், நல்லவர்களை கெட்டவர்கள் என நினைக்கிறான் என கூறினார்.

மேலும் கவின் நீ உன் விளையாட்டை விளையாடு, நீ யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம், நீ வெற்றி பெறுவாய் என எதிர்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நீ செய்வது கடுப்பாக இருக்கிறது. அப்பா, அம்மாவை நினைத்து பார் என அடுக்ககாக பல கேள்விகளை கவினிடம் கேட்கிறார்.

கவினுக்கு யாரும் பாவம் பார்க்கவேண்டாம். எதிர்த்து நில்லுங்கள். அப்போது தான் அவன் விளையாடுவான். ஒரு கட்டத்தில் கவினை ஓங்கி கன்னத்தில் அவர் அறைந்துவிடுகிறார். கவினை அனைவரும் காதல் மன்னன் என கூறுவதுண்டு.

யாரு உனக்கு ஃபிரண்டு? அவளா? வனிதாவை பற்றி அத்தனையும் போட்டுக்கொடுத்த முக்கிய பெண்!!

யாரு உனக்கு ஃபிரண்டு? அவளா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 83 நாட்களை எட்டிவிட்டது. விரைவில் 100 ம் நாட்களை எட்டவுள்ளது. இதில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துபோகிறார்கள்.

இன்று ஷெரினின் அம்மா மற்றும் தோழி ஸ்ரீஜா ஆகியோர் உள்ளே வந்திருந்தார்கள். ஷெரின் அம்மா சாண்டியுடன் பாட்டு பாடி நடனமாடி அசத்த, ஒருபக்கம் முகேனை அவர் கலாய்த்தார்.

இது ஒரு பக்கம் இருக்க வனிதாவை நம்பாதே! அவ செய்ஞ்சது. நீ வேலை செய்யல, அது பண்ணல, இது பண்ணல நு அவ சொல்றது சின்னபிள்ள தனமா இருக்கு. அவள் உனக்கு தோழி கிடையாது. சொல்லிட்டேன். எப்படி ஹாய் சொன்னேன்னு எனக்கு தெரியல. அவங்கள மேல செம கோபத்துல இருக்கேன். யாரையும் நம்பாதே என கூறியுள்ளார்.

கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி காட்டிய பிரபல இயக்குனர் : ஆதாரத்தை வெளியிட்டு கடும் கேள்வி!!

கவின், லாஸ்லியா காதலுக்கு பச்சக்கொடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விருந்தினர் வாரம் எனலாம். உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து போகிறார்கள்.

இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார்கள். இதில் அண்மையில் வெளிநாட்டிலிருந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா தங்கைகள் ஆகியோர் வந்திருந்தனர்.

உள்ளே வந்ததும் காதல் விசயத்தில் லாஸ்லியாவின் நடத்தைகளை கண்டித்து அறிவுரை கூறினார். அதே வேளையில் கவினிடமும் அவர் முகம் கொடுத்து நன்றாக பேசினார். உள்ளே இருந்து சேரனும் அவர்களின் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்த் பாலன் மலையாள பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்ட பியர்ல் மானே மற்றும் சீரியல் நடிகர் ஸ்ரீனிஷ் இருவரும் காதல் வயப்பட்டு பின் பிக்பாஸ் முடிந்து திருமணம் செய்துகொண்டார்கள்.தமிழகத்தில் இன்னும் காதல் எதிர்ப்பு இருக்கிறது? என்ன செய்ய பிக்பாஸ்! அனைவரும் கேம் விளையாடுங்க என அறிவுறுத்துகிறார்கள்.

என்னை பொறுத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானா பிக்பாஸ் வீடு. இங்கே கேம் விளையாடக்கூடாது, வாழத்தானே வேண்டும், வாழும் போது காதல் வருவது சகஜம் தானே என அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளார்.

திரிஷா இஸ் பேக்.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்!!

திரிஷா இஸ் பேக்..

தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார் நடிகை திரிஷா. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் அதன் பிறகு சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தற்போதும் அவர் கைவசம் ராங்கி, கர்ஜனை, சுகர், 1818 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது த்ரிஷா நடிகர் மோகன்லால் ஜோடியாக ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தினை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் படத்தினை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரன் மகள், அப்பாவிற்கு அதிரடி கண்டிஷன்- மகள் கேட்டதை செய்வாரா? முடியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரன் மகள்

பிக்பாஸில் இந்த வாரம் கலகலப்பாக செல்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் எல்லோரின் முகத்திலும் ஒரே சிரிப்பு தான்.

முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா வீட்டின் உறவினர்கள் வந்துவிட்டார்கள். அடுத்து சேரனின் மகள் வீட்டிற்குள் வருகிறார்.

வீட்டிற்குள் வந்த அவர் தனது அப்பாவிடம் ஒரு கண்டீஷன் போடுகிறார். 5 பேரிடம் பேசுங்கள் ஆனால் அந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களுடன் பேச மாட்டேன் என்று கட்டளையிடுகிறார்.சேரன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனது அம்மாவின் நிலையை தெரிந்துகொண்டு கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா? நிகழ்ச்சியில் புதிய மாற்றமா?

கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?

தமிழில் நடந்த 2 பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக சில விஷயங்கள் நடந்துள்ளது.இந்த 3வது சீசனில் சரவணன் அறிவிப்பு இன்றி வெளியேறுவது, மதுமிதா த ற்கொ லை செய்தது என சில பரபரப்பான சம்பவங்கள் நடந்தது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வரும் தகவல் என்னவென்றால் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி கவினின் குடும்ப பிரச்சனையை கூறியதாகவும் அதை தெரிந்துகொண்ட அவர் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

TRP-ல் உச்சம் தொட்ட பிக்பாஸ், சேனலே முன்னேறியது, ஆதாரத்துடன் இதோ!!

TRP-ல் உச்சம் தொட்ட பிக்பாஸ்

தொலைக்காட்சிகள் பொறுத்தவரை TRP என்பது மிக முக்கியம். அதை வைத்து தான் எந்த சேனல் நம்பர் 1 என்று கண்டுப்பிடிக்க முடியும்.அந்த வகையில் பிக்பாஸ்-3 தொடங்கியதில் இருந்து விஜய் தொலைக்காட்சியின் TRP வேற லெவலுக்கு சென்றுள்ளது.

எப்போதும் முதலிடத்தில் சன் டிவி தான் என்றாலும், இரண்டாவது இடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆக்கிரமித்தது.

தற்போது விஜய் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திற்கு வந்து சன் தொலைக்காட்சியை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது, இதோ..

காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.

இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாத்திக்கொண்டதுடன் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் தற்போது ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் நடித்து வரும் ஆர்ஜே மிர்சி செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இப்படி யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களே? என்ற வருத்தம் இருந்தாலும் புதுமணத்தம்பதியை ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் வாழ்த்தி வருகின்றனர்.

உன் வீட்டையே தப்பா பேசாதே, மதுமிதாவை விளாசிய பிரபல நடிகர்!!

மதுமிதாவை விளாசிய பிரபல நடிகர்..

மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது பெரும் சர்ச்சையை உண்டாக்கினார். அதை தொடர்ந்து அந்த வீட்டில் நடந்த ஒரு பிரச்சனையின் போது அவர் கையை அறுத்துக்கொண்டுள்ளார்.

அதனால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர், வெளியே வந்தும் அந்த வீட்டிற்குள் நடந்த விஷயத்தையும், தொலைக்காட்சி செய்ததையும் பேட்டியில் கூறிவிட்டார்.

இதுக்குறித்து பிரபல நடிகர் தாடி பாலாஜி ‘நீ அக்ரீமெண்ட் போட்டு தானே வீட்டிற்குள் சென்றிருப்பாய், அப்போது தெரியாதா அவர்கள் எல்லாம் வட இந்தியர்கள் என்று.

அப்படியே அவர்கள் வட இந்தியர்களாக இருந்தாலும், உடை விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிட வேண்டும், பிக்பாஸ் வீட்டை திட்டுவது உன் வீட்டையே திட்டுவதற்கு சமம்’ என்று கூறியுள்ளார்.