விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து அதன்பிறகு நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க ஆரம்பித்தவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி.
விஜய் டிவி நடத்திய ஒரு விழாவில் அவர்களுக்கு மேடையிலேயே மாலை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
திடீரெனெ ரகசிய திருமணம் செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம்” என கூறியுள்ளார்.
நடிகர் ஒருவருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நல்ல திறமையான நடிகர் அவர். பெரிய ஆளாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதேதோ நடந்துவிட்டது.
நடிகரின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்ததே தவிர எதுவும் நிலைக்கவில்லை. ச்ச்சீ இந்த காதல் பழம் புளிக்கும் என்று எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார் நடிகர். ஆனால் அவரை அப்படியே விட்டுவிட்ட பெற்றோருக்கு மனம் இல்லை.
நடிகருக்கு வயதாகிக் கொண்டே போவதால் விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். சில இடங்களில் நடிகரை பற்றி தெரிந்து பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்களாம். இதே பிரச்சனை ஏற்பட்ட மற்றொரு நடிகருக்கு தற்போது திருமணமாகிவிட்டது.
ஆனால் நடிகரின் விஷயத்தில் மேலும் சில பிரச்சனை உள்ளது. அதாவது பெண் கொடுக்க சம்மதித்தால் நடிகர் தரப்பில் இருந்து இரண்டு பிரச்சனை ஏற்படுகிறதாம். பெண்ணை நடிகருக்கு பிடித்தால் குடும்பத்தாருக்கு பிடிப்பது இல்லையாம். குடும்பத்தாருக்கு பிடிக்கும் பெண்ணை நடிகருக்கு பிடிப்பது இல்லையாம்.
குடும்பத்தாருக்கும், நடிகருக்கும் எந்த பெண்ணை பிடிக்கிறதோ அவரே மணமகளாம். இதெல்லாம் எப்பொழுது நடந்து, எங்க அண்ணனுக்கு எப்போ திருமணம் நடப்பது என்று ரசிகர்கள் தான் பாவம் கவலையில் உள்ளனர். நடிகருக்கு திருமணம் கைகூடாமல் இருப்பது அவரின் தந்தைக்கு பெரிய வருத்தம்.
மகனை நினைத்தால் மனிதர் கண் கலங்கிவிடுகிறார். கடவுள் தான் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறார் நடிகரின் அப்பா.
மனைவியை ஏமாற்றி துரோகம் செய்த கணவன் என்ற செய்தி அடிக்கடி வருவதை பார்த்திருப்போம். இது போன்ற சூழல்களை நட்சத்திர தம்பதிகளும் தாண்டி வந்துள்ளனர். இதனால் விவாகரத்து பெற்ற தம்பதிகளும் இருக்கிறார்கள்.
அதே சமயம் கணவனை மன்னித்து ஏற்று கொண்டவர்களும் உள்ளனர். அப்படி துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட நட்சத்திரங்களின் மனைவியர் குறித்து காண்போம்.
நடிகர் ஆதித்யா பஞ்சோலி : பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா மனைவி ஸரீனா வஹாபை ஏமாற்றி பல பெண்களுடன் உறவில் இருந்ததாக அவரே கூறியுள்ளார். அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பிரபல நடிகை கங்கனாவுக்கு இவர் நிறைய பணவுதவி செய்ததாகவும், ஒருமுறை கங்கனா இவர் மீது தொல்லை செய்ததாக கூறி வழக்கு தொடர்ந்தார் என்றும் பல செய்திகள் வெளியாகின. ஆனால், அனைத்தையும் தாண்டி, ஸரீனா வஹாப், ஆதித்யாவை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
அமிதாப்பச்சன் : இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவர் மனைவி ஜெயாபச்சன் ஆகியோர் சிறந்த காதலுக்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அமிதாப்பச்சனே தனது மனைவி ஜெயாவை ஏமாற்றி ரேகாவுடன் உறவில் இருந்தார் என பல ஊடகங்களில் அந்நாட்களில் செய்திகளாக வெளியாகின. அமிதாப்பச்சன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என கூறினார்.
ஜெயா கூறுகையில், நான் என் கணவரை நம்புகிறேன். நான் அவரது செயலில் ஒருபோதும் அச்சத்தையோ, நம்பிக்கையின்மையோ உணர்ந்தது இல்லை என கூறினார்.
கோவிந்தா : ஒரு காலத்தில் நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் திரையில் சிறந்த ஜோடியாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது.
ஒரு முறை ஒரு செய்தி நிபுணர் வெளிப்படையாக தானே, கோவிந்தாவை ராணி இல்லத்தில் இரவு உடையில் நேரே கண்டுள்ளேன் என கூறினார். ஆனால், அதை ராணியின் பெற்றோர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.
அக்ஷய்குமார் : அக்ஷய்குமார் ட்விங்கிள் கண்ணாவுடன் காதலில் இருந்தே அதே சமயத்தில், ஷில்பா ஷெட்டியையும் காதலித்து வந்தார் என தகவல்கள் பரவின. அக்ஷய்குமார் தன்னை ஏமாற்றுகிறார் என அறிந்தே ஷில்பா அவரை பிரிந்தார் என கூறப்பட்டது.
இதை அனைத்தையும் அறிந்தும், ட்விங்கிள் அக்ஷய்குமாரை காதலுடன், முழு மனதுடன் அப்படியே ஏற்றுக் கொண்டார்.
ஷாருக்கான் : ஷாருக்கான் குறித்த புரளி பாலிவுட்டில் பிரபலம், ஆனால் தமிழில் பலருக்கும் தெரியாது. டான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் என கூறப்பட்டது.
ஒருமுறை ஷாருக்கான் அலுவலகத்தில் இருந்து நள்ளிரவு மூன்று மணியளவில் பிரியங்கா சோப்ரா வெளியேறினார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால், ஷாருக்கான் மீது மனைவி கெளரி கான் எள்ளளவும் சந்தேகப்படவில்லை. அவரை முழுமையாக காதலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சி செய்தவர் ஓவியா.
அடுத்தப்படியாக 3வது சீசன் எடுத்துக் கொண்டால் மதுமிதா மோ சமான முயற்சியை எடுத்தார். அதைக்கேட்டு அனைவருமே பதற்றம் அடைந்தார்கள்.
அவரது கணவர் ஜோயல் ஒரு பேட்டியில், இரவு போன் செய்து உங்களது மனைவியை அழைத்துச் செல்லுங்கள் என்றனர், அதைக்கேட்டதும் பதற்றம் அடைந்தேன். கையில் இருந்த கத்தி, கழுத்திற்கு சென்றால் என் வாழ்க்கை என்ன ஆவது என மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.
மதுமிதா எப்படி கையை அ றுத்துக் கொண்டார் என்ற புகைப்படத்தை நீங்களே பாருங்கள்,
சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பல மாற்றங்களும் திருப்பங்களும் கொண்டு ஒளிபரப்பாகிறது.
வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலரின் உண்மை முகம் வெளியாகிக் கொண்டு இருக்க கவினின் உண்மை முகம் பற்றி சில விஷயங்கள் சொல்கிறார் “சரவணன் மீனாட்சி” இயக்குனர் பிரவீன்.
தொடரின் கடைசி கட்ட படப்பிடிப்பில் கவினிடம் பல மாற்றங்கள் தெரிந்தது. நாங்களே கவின் கிட்ட அதை பற்றி சொல்லிருக்கோம்.கவினிற்கு பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் தான் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னார்.
அதனால்தான் அந்த தொடர் முடிவுக்கு வந்தது என்றும் இப்பவும் கவினுக்கு ஓட்டு விழுவதற்கு காரணம் சரவணன் மீனாட்சி வேட்டையன் வேடத்திற்காக மட்டும் தான் என்று சொல்கிறார் அத்தொடரின் இயக்குனர் பிரவீன்.
பிரபல இயக்குனரும் சீரியல் நடிகருமான ராஜசேகர் சில தினங்களுக்கு முன்பு காலமானார். 61 வயதாகும் அவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.
உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவதி பட்டுள்ளனர்.
அவர் நடித்த சீரியலின் இயக்குனர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்த பணமும் சிகிச்சைக்கு போதவில்லை. இந்த நிலையில் தான் ராஜசேகர் உயிரிழந்துள்ளார்.
வறுமை காரணமாக ஒரு முன்னணி இயக்குனர்+சீரியல் நடிகர் இப்படி இறந்திருப்பது சினிமா துறையில் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த மதுமிதாவால் பல சர்ச்சைகள் உருவாகியது.மதுமிதா எதனால் கையை அறுத்துக்கொண்டார் என்ற விஷயம் வெளியில் வராத நிலையில் சில விஷயங்களை சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் என்று முதல் முறையாக மனம் திறக்கிறார் மதுமிதா.
வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை Hello App பதிவிடப்போகிறோம் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து, சுதந்திர தினம் அன்று தமிழ் நாட்டில் மழை இல்லாத ஆதங்கத்தில் நான் சொன்ன ஒரு வரி கவிதை’ வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார் இதில் எங்கும் அரசியல் இல்லை, ஆனால் அதை முற்றிலும் அரசியல் ஆக்கிவிட்டனர் அந்த எட்டு பேர்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் இடம் இருந்து அரசியல் பேசக்கூடாது என்று தகவல் வந்த உடன் மேலும் என்னை பேச ஆரம்பித்து விட்டனர் அதை பொறுக்க முடியாமல் நான் கையை அறுத்து கொண்ட போது சேரன் கஸ்தூரி தவிர மிதியுள்ளவர்கள் அதை கிண்டலாக பார்த்து சிரித்தனர் என்று மதுமிதா கவலையுடன் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகாக வனிதாவுக்கு பக்குவமாக கமல்ஹாசன் பாடம் புகட்டினார். ஷெரின், தர்ஷன் நட்பை காதல் பிரச்சனையாக மாற்றி சம்மந்தப்பட்டவர்களை சங்கடப்படுத்தினார்.
அவரை மற்ற போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். நேற்று சேரன் வெளியேறியதற்காக கண்ணீர் விட்டு அழுதார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் காஜல், கஸ்தூரி, சேரன் தவிர எல்லாரும் கெட்டவங்களாம், சும்மா போற தர்ஷண கூப்பிட்டு சண்டய ஆரம்பிக்க முயற்சி பண்ணி, அப்பறம் அப்படியே கவின் பொண்ணுங்கள யூஸ் பண்றானு பிளேட் மாத்தி அடேங்கப்பா, இது உலகமகா நடிப்புடா சாமி என கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிகழ்ச்சிகள் அதிகம் மக்களிடம் பிரபலம். நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர்களான மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே குஷியாக இருக்கும்.
தற்போது இவர்கள் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீப்ரீயா. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுப்பது, இது மிகவும் மோசமான செயல்.
இவர்கள் இதுபோல் கிண்டல் செய்வது தவறு என கூறும் எனது டுவிட்டர் பாலோவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.
சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மக்களிடம் அதிகம் பிரபலம். சிறுவர்கள், பெரியவர்கள் என நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கிறது, இந்த சீசனிற்கு முன் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. அதில் பாடும் போது முக பாவனைகளை அழகாக காட்டி எல்லோரையும் மயக்கியவர் அஹானா.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை காணவில்லை, இப்போது ஒரு விளம்பரத்தில் அவர் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நடிகை நயன்தாரா நடித்துள்ள ஒரு நகை கடை விளம்பரத்தில் அஹானா நடித்துள்ளார். அடுத்தடுத்து அவருக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.