ரத்த கா யங்களுடன் வீட்டில் ச டலமாக கிடந்த பிரபல நடிகர் தீபக்கின் தந்தை!!

தீபக்கின் தந்தை

பிரபிரபல நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக திமி தா, முன் தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.

இவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருகிறார்.

தீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் தந்தை விட்டர் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் திகதி கும்பகோணத்துக்கு சென்றார்.

இதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில், விட்டல் ர த்தக் கா யங்களுடன் இ றந்து கிடப்பதைப் பார்த்து அ திர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, விட்டல் திகார் ராவ் இ றந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகையின் வயிற்றை பார்த்து கிண்டல் செய்த ரசிகர்கள் : நடிகை கொடுத்த சரியான பதிலடி!!

ஜரீன் கான்

பிரபல திரைப்பட நடிகையின் வயிற்றில் ஏதோ கோடு, கோடாக இருக்கிறதே என்று கிண்டல் செய்த நபர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் போன்றே இருக்கிறார் என்று பலராலும் கூறப்பட்டவர் தான் நடிகை ஜரீன் கான். இவர் சல்மான் கானின் வீர் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார். அதைக் கண்ட இணையவாசிகள், அது என்ன உங்களின் வயிற்றில் கோடு, கோடாக உள்ளது. வயிறை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது.

இப்படி ஒரு வயிறை வைத்துக் கொண்டு அது தெரியுமம்படி புகைப்படம் வெளியிடலாமா? பாலிவுட் நடிகையாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான வயிறா என்று மோசமாக விமர்சித்தனர்.

சிலரோ ஜரீன் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வயிற்றுக்கு மேக்கப் போட்டு அழகாக காட்டாமல் உள்ளதை உள்ளபடி பெருமையாக காட்டியுள்ளீர்கள் என்றும் பாராட்டினர்.

நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த ஜரீன் கான் கூறியதாவது, என் வயிறு ஏன் அப்படி இருக்கிறது என்று வியப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

50 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த ஒருவரின் வயிறு இப்படித் தான் இருக்கும். போட்டோஷாப் செய்யவில்லை என்றால் வயிறு இப்படி தான் தெரியும்.

எப்போதும் உண்மையாக இருக்க விரும்புபவள் நான். அதனால் என் வயிறை நினைத்து நான் வெட்கப்படவில்லை. எனவே, என்னை கிண்டல் செய்வது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

போயும் போயும் அப்பா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கத் துடிக்கும் நடிகை !!

இளம் நடிகை

இளம் நடிகை ஒருவர் தனது அப்பா வயது நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார். பிரபல இயக்குநர் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் அந்த நடிகை. அவர் அழகையும், சிரிப்பையும் மட்டும் வைத்து காலத்தை ஓட்டுவதாக தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.

அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லை. அதனால் ஹீரோவை காதலித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அவர் ஹீரோயின் தான் என்றாலும் சில படங்களில் அவர் எதற்காக இருக்கிறாரே என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் நடிகை அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவரை பலரும் கண்டபடி விமர்சனம் செய்தனர்.

ஆனால் நடிகை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு ஒரு ஆசையாம். அதாவது தனது அப்பாவை விட பெரியவரான நடிகர் ஒருவருடன் அதுவும் ஜோடியாக நடிக்க வேண்டுமாம்.

நடிகையின் இந்த ஆசை காத்து வாக்கில் அந்த சீனியர் நடிகரின் காதுகளில் விழுந்துள்ளதாம். அந்த சீனியரின் அடுத்த படத்தில் அம்மணி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த சீனியரின் படத்தில் நடித்தாலும் அவருக்கு நிச்சயம் வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடைக்காது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

என்னால் சிறப்பாக நடிக்க முடியும், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை கொடுங்கள் என்று நடிகை சில இயக்குநர்களிடம் கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லையாம்.

போட்டோவை போட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பூ : கேலி கிண்டல் செய்த ரசிகர்கள்!!

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தற்போது முக்கிய டிவி சானல் சீரியலில் நடித்து வருகிறார். தீவிர அரசியலில் இருந்து வந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் லண்டலில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வெளியே சென்றபோது ஷாப்பிங் மாலில் இருந்த மொபைல் கவர் ஒன்றை புகைப்படம் எடுத்து அதில் இருப்பது ரஜினிகாந்த் என பெருமையாக பதிவிட்டிருந்தார்.

இதை ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் டேக் செய்திருந்தார். ஆனால் அந்த மொபைல் கவரில் இருந்தது ரஜினி இல்லையாம். அவர் கத்தார் நாட்டின் எமிர் என்று சொல்லப்படுகிற தமிம் பின் ஹமத் என்பவராம்.

உடைந்து போன லாஸ்லியா, சோகத்தில் கவின், புலம்பி தவிக்கும் சேரன் – நடந்தது என்ன?

புலம்பி தவிக்கும் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 70 ம் நாளை எட்டிவிட்டது. இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது.

காலை முதலே லாஸ்லியா வந்த போன் கால், சேரப்பா லாஸ்லியா உறவை கவின் டிராமா என கூறியது குறித்து நேயர் ஒருவர் போனில் கேட்க லாஸ்லியா அழுகிறார்.

பின் கமல்ஹாசன் லாஸ்லியா செய்யும் தவறுகளை நேரடியாக பக்குவமாக கேட்கிறார். தற்போது சேரன் இன்னும் லாஸ்லியா மீதான அக்கறையில் தர்ஷணிடம் லாஸ்லியா செய்யும் தவறுகளை எடுத்துச்சொல்கிறார்.

கதைக்கு தேவையென்றால் எந்த மாதிரியும் நடிப்பேன் – மனம் திறந்த ரெஜினா!!

மனம் திறந்த ரெஜினா

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்துள்ள இளம் நாயகிகளில் ஒருவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி அதிகம் தெரியாது., எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் இப்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் நான் என்னை பற்றியே ஆராய்ச்சி செய்கிறேன். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதில் எனது பங்கு என்ன என்பது குறித்து யோசிக்கிறேன்.

சில நேரம் நான் செய்வது தவறாகவும் முடிந்து விடுவது உண்டு. இப்போது சினிமா நன்றாக புரிகிறது. கதைக்கு தேவைப்பட்டால் எந்தமாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 17 வயது சிறுமியிடம் வரம்பு மீறிய நடிகர்!!

மந்தர் குல்கர்னி

நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை காட்டி 17 வயது சிறுமியை அரைநிர் வாணமாக புகைப்படம் எடுத்த மராட்டிய நடிகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகரும், இயக்குனருமான மந்தர் குல்கர்னி, நடிகர்களை உருவாக்குவதற்காக தனியாக நாடக வொர்க்ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார். அங்கு நடிப்பு கற்றுக்கொள்வதற்காக 17 வயது சிறுமி சேர்ந்துள்ளார்.

நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டிய மந்தர், அதற்காக சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனக்கூறி 16ம் திகதியன்று வீட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

அதனை நம்பி சென்ற சிறுமிக்கு பல்வேறு ஆடைகளை கொடுத்து அணிந்து வருமாறு கூறியுள்ளார். அவர் கொடுத்த அனைத்து ஆடைகளையும் அணிந்து சிறுமியும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இறுதியில் பிகினி உடையில் வருமாறு அந்த சிறுமியிடம் குல்கர்னி கூறியுள்ளார். அந்த ஆடையினையும் சிறுமி அணிந்து வந்த போது அதன் அளவை எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி, அங்கு நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அ திர்ச்சியடைந்த அவருடைய அம்மா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் 22ம் திகதியன்று மந்தர் குல்கர்னியை கைது செய்தனர். இந்த சம்பவமானது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்த திரிஷா : ஏன் தெரியுமா?

நடிகை திரிஷா

நடிகை திரிஷா சமூக, ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். யுனிசெப் அமைப்பில் நல்லெண்ண தூதராக இருந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.

பா லியல் வ ன்கொடு மையில் ஈடுபடுவோரை தண்டிக்க அரபு நாடுகளை போன்று கடுமையான சட்டங்களை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என்றார்.

வெளியூர்களில் படப்பிடிப்புகள் நடக்கும்போது அருகில் உள்ள கோவில் கள் பற்றி விசாரித்து அறிந்து நேரில் சென்று வழிபடுகிறார். வாரணாசியில் ‘பேட்ட’ படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது ஈஷா அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஆன்மிகம் என்பது ஒரு சிறப்பான விஷயம். அமைதியான தெய்வீகம் உள்ள ஆன்மிக குருவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் ஈஷா மையத்துக்கு சென்று சிவராத்திரி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அவளுக்கு தெரிஞ்சுடக்கூடாதுன்னு ட்விட்டர்ல டேக் கூட பண்ணலை : விஜி சந்திரசேகர்!!

விஜி சந்திரசேகர்

நடிகை விஜி சந்திரசேகர் இயற்கை விவசாயத்தில் ஆர்வமிக்கவர் என்பது எல்லோருக்குமே தெரியும். “இயற்கை விவசாயத்துல ஈடுபாடு காட்டுவதற்கு என் சின்ன வயசிலிருந்தே, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு என் மனசுல ஊறிப்போனதுதான் காரணம். சென்னையடுத்த மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற எங்களோட பண்ணையில, கிட்டத்தட்ட 20 வருஷமா இயற்கை முறையில் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம்.

கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளின்னு சில காய்கறிகளை மட்டும் விளைவிக்கலாம்னுதான் ஆரம்பிச்சோம். ஆனா, கடையில் வாங்குற காய்கறிகளுக்கும், எங்க பண்ணையில் இயற்கை முறையில் வளர்ந்த காய்கறிகளுக்கும் இருந்த சுவை வித்தியாசம், ரசாயன மருந்து ஏதும் தெளிக்காத ஃபிரஷ்ஷான காய்கறிகள் ஆகியவை பிடிச்சுப் போச்சு.

வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்தமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு. அதனால, வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறிகளையும் நம்ம பண்ணையில்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு பண்ணி, ஆள்களை வேலைக்கு அமர்த்திக் களத்துல இறங்கினோம்.

இப்ப வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்துமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு. தவிர, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்காக எள்ளு, நிலக்கடலையும்கூட விதைச்சிருக்கோம்” என்று விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவரே இதைச் சொல்லியும் இருக்கிறார்.

தற்போது, அமேசான் காடுகளில் தீப்பிடித்ததையொட்டி, இயற்கை குறித்த விழிப்புணர்வு பிரசாரமாக விஜி சந்திரசேகரும் அவர் மகள் லவ்லினும் தங்கள் பண்ணையில் வளர்ந்த மரக்கன்றுகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பூமியைப் பாதுகாக்கும் இந்தப் பெண்களுடைய செயலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்க போன் செய்தோம்.

”லவ்லின்கிட்டேயும் என்னைப் போலவே இயற்கை நேசிக்கிற இயல்பு இருக்கு. அமேசான் காடுகள் எரிகிற செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அவ அப்செட்டாதான் இருந்தா. சரியா தூங்க மாட்டேங்கிறா. நம்மளால முடிஞ்சதை செய்யணும் மம்மி’ன்னு சொல்லிட்டே இருந்தா. சிலர், அவகிட்டே ‘ஹவுஸ் ஓனருக்குப் பிறகு, அடுத்த படம் என்ன பண்ணப் போறீங்க’ன்னு கேட்டாங்க.

அதுக்கு லவ்லின், ‘உலகம் குளோபல் வார்மிங், அமேசான் காடு எரியறதுன்னு செ த்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல என் அடுத்த படத்தைப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு மரங்கள் நடப்போறேன். மத்தவங்களுக்கும் கொடுக்கப்போறேன்’னு சொன்னா. அவளுடைய பதில் எனக்கு ஒரு நிமிஷம் ஷாக்காக இருந்தாலும் அடுத்த நிமிஷம் பயங்கர சந்தோஷமாயிட்டேன். இந்தச் சின்ன வயசுல உலகத்தைப் பத்தி கவலைப்படறா என் பொண்ணுன்னு அப்படியே உடம்பு சிலிர்த்துப்போச்சு.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே ‘உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க’ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா.சரி, லவ்லின் ஆசைப்பட்டபடியே மரங்கள் நடலாம்னு முடிவு பண்ணிட்டு, எங்க பண்ணையில் இருந்தே ஆரம்பிச்சோம்.

எங்க பண்ணையில மாமரம், எலுமிச்சை, மாதுளைனு பலவகை மரங்கள் இருக்கு. அதோட விதைகளெல்லாம் கீழே விழுந்து முளைச்சிருக்கும். தரையில அள்ளாம மக்கிப் போய் கிடக்கிற சருகுகள் எல்லாம் அந்த மரங்களுக்கு உரமாகியிருக்கும். அந்த மரக்கன்றுகளையெல்லாம் எடுத்து, எனக்குத் தெரிஞ்சவங்க, அவளுக்குத் தெரிஞ்சவங்கன்னு எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சா.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே ‘உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க’ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா. அவளோட சீரியஸ்னஸை புரிஞ்சுக்கிட்டு, இது எல்லாருடைய மனசுக்கும் போய்ச் சேரணும்னுதான் பாரதிராஜா சாரை எங்க பண்ணைக்கு இன்வைட் செஞ்சேன்.

அவரும் பெருந்தன்மையா வந்து ஒரு மாமரத்தை நட்டுவிட்டு, ‘நல்ல காரியம் பண்றேம்மா. உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்மா. உன் மனசுக்கு நல்ல நிலைமைக்கு வருவேன்’னு சொல்லி, அவ நெத்தியில முத்தமிட்டு வாழ்த்திட்டுப் போனார்” என்றவர் தொடர்ந்தார்.

” ‘நான் இப்படிப் பண்றதைப் போட்டோ எடுக்கக் கூடாது; ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல போடக்கூடாது’ன்னு கண்டிச்சுச் சொல்லிட்டா லவ்லின். ரொம்ப கெஞ்சிக்கேட்டுத்தான் போட்டோ எடுத்தேன். அவளுக்குத் தெரியாமத்தான் என் ட்விட்டர் அக்கவுன்ட்ல போட்டிருக்கேன். அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு அவளை நான் டேக்கூட பண்ணலை” என்று சிரிக்கிறார் விஜி சந்திரசேகர்.

மீண்டும் கிளம்பும் 2.0 சப்டைட்டில் விவகாரம்!!

எந்திரன்

ரஜினியின் 2.0 படத்தின் சப்டைட்டில் பணியை மேற்கொண்ட தனக்கு சம்பளம் வரவில்லை என்று கூறிய ரேக்ஸின் குற்றச்சாட்டிற்கு லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.0. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவான இப்படம் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வெளியானது.

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0. அந்த நேரத்தில் இந்திய சினிமாவிலேயே மிகப்பிரமாண்ட படைப்பாக உருவான படம் தான் எந்திரன்.

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல பெரிய படங்களுக்கு சப்டைடில் பணிகள் செய்து வரும் அவர் லைகா நிறுவனம் இதுவரை 2.0 படத்திற்கான சம்பளத்தை தரவில்லை என்று கூறினார்.

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எந்திரன் படத்திற்கு எனக்கு சம்பளம் வரவில்லை என சன் பிகசர்ஸ்க்கு மெயில் அனுப்பினேன். ஏதோ நான் சொல்வது பொய் போல, நீங்கள் சொல்வது உண்மையா என விசாரித்து உங்களை தொடர்பு கொள்கிறோம் என்றனர்.

ஆனால் இது வரை தொடர்பு கொள்ளவில்லை. இதையறிந்த ஷஙகர் நண்பன் படத்திற்கு வேலைக்கு முன்னதாக சம்பளம் தந்தார். ஆனால் லைகா நிறுவனம் 2.0 படத்திற்கு இதுவரைக்கும் சம்பளம் தரவில்லை. எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும் என்று கூறினார்.