மக்களிடம் தர்ம அடிவாங்கிய ஹீரோ!

அ டிவாங்கிய ஹீரோ

2003 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான வெங்கட் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹூச்சா வெங்கட். இவர் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட திறமையாளர். சினிமாவில் நிறைய சாதித்தாலும் இவரது சொந்த வாழ்க்கை சர்ச்சைகள் சூழ்ந்ததாகவே உள்ளது.

நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து, அவர் தன்னை காதலிக்கவில்லை என த ற்கொ லைக்கு முயன்றதால் பரபரப்பானர். இப்படி எப்பொழுதும் அவரைச் சுற்றி ஏதாவது சர்ச்சைகள் சூழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று குடகுக்கு பயணமாகியுள்ளார். அங்கே பஸ் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு காரை கதவை பிடித்து இழுத்திருக்கிறார்.

மேலும் கண்ணாடியில் கல்லை தூக்கி அ டித்து சேதப்படுத்தியுள்ளார். திடீரென அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அங்கிருந்தவர்கள் முதலில் அவரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறிப்போகவே அங்கிருந்த பொதுமக்கள் அவரை அ டித்துள்ளனர். பலரும் அவரை போட்டு அ டிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடகு போலீசார் அவரைக் கை து செய்துள்ளது. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவர் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

சம்பளத்தை தராமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றினார்கள் : கவலையில் தனுஷ்!!

தனுஷ்

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அசுரன்’ என்ற படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இரு பாடல்கள் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தனுஷ் தன்னை தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாக கூறினார்.

இலக்கிய எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது “அசுரன்” திரைப்படம். வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் இப்படத்தில் பசுபதி,மலையாள நடிகை மஞ்சு வாரியார்,இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளனர் படக் குழுவினர். இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி துவங்கப் பட்டது அசுரன் படம். வெகு சீக்கிரத்தில் முடிந்த வெற்றிமாறனின் படமாக இந்தப்படம் கருதப்படுகிறது.இப்படத்தின் பாடல் வெளீடு விழா சென்னையில் நேற்று நடந்தது. இரண்டு பாடல்கள் வெளியானது இதனால், தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அங்கு பேட்டியளித்த தனுஷ் பத்திரிகையாளர்களிடம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பற்றி பேசியதாவது…
கலைப்புலி தாணு மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். இவர் தான் இயக்குநர் எனக்கூறியபின் நாங்கள் கமர்ஷியலாக ஒரு கதை சொன்னபோதும் அவர் தான் இந்த அசுரன் கதை நன்றாக இருக்கிறது இதைச் செய்யலாம் என்றார்.

எனக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை முழுதாக தராமல் ஏமாற்றினார்கள். இப்போதும் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் ஆனால் முதல் முறையாக படம் முடியும் முன்னரே முழுச்சம்பளத்தையும் தந்த தயாரிப்பாளர் அவர்தான் என்றார்.

கௌதம் மேனன் தயாரித்து இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா பல தடங்கலுக்கு பிறகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு சம்பளம் முழுதாக தரப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் இது போல பல தயாரிப்பாளர்கள் தனுஷுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி முதல் முறையாக தனுஷ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

சொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா?

நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருப்பவர். அதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெறுகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகள் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 60வது படத்திற்கு பாலிவுட் வில்லனா? அதுவும் இவரா மாஸா இருக்குமே?

அஜித்

அஜித்தின் 60வது படத்தை வினோத் அவர்களே இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று தான் நடக்க இருக்கிறது என போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தில் வில்லன் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பெரிய நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

விஷால் திருமணம் நடக்கிறதா, இல்லையா?- அவரது காதலி போட்ட பதிவு!!

புரட்சி தளபதி விஷால்

புரட்சி தளபதி விஷால் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். இந்த வருட ஆரம்பத்தில் அவருக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் வருட இறுதியில் நடக்கும் என்றனர், ஆனால் கடந்த சில நாட்களாக இருவரின் திருமணம் நின்றுவிட்டது என்றனர்.

அதற்கு ஏற்றார் போல் நேற்று விஷால் பிறந்தநாள், ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்த பெண்ணான அனிஷா விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா? பழைய போட்டோ மற்றும் Chat-ஆல் வந்த அதிர்ச்சி!!

ப்ரியா பவானி ஷங்கர்

ப்ரியா பவானி ஷங்கர் இன்று தமிழ் சினிமாவின் லீடிங் கதாநாயகி. இவர் இந்தியன் 2, விக்ரம் படம் என பல பெரிய படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார், அதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்கள் அனைவரும் அவர் ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பல புகைப்படங்களை எடுத்து தற்போது ஷேர் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் நல்ல நண்பர்களாக கூட இருந்திருக்கலாம், ஒரு சிலர் வேண்டுமென்றே தற்போது எடுத்து இதை வேறு திசையில் பேசுகிறார்களா என்றும் யோசிக்க வைக்கின்றது.

கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் : குவியும் லைக்குகள்!!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன.

சமீபத்தில் வெளியான, ஓ பேபி திரைப்படம் பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. இது சமந்தாவிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவுள்ளதாக சமீபத்தில் திரையுலகில் செய்தி பரவி வருகிறது.

ஆனால், நடிகை சமந்தா இது குறித்து எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமந்தா தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மிக சிறிய உடையில், கண்ணுக்கே புலப்படாத சார்ட்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரியும் வண்ணம் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

அதே வேளையில் அடுத்தவாரம் சமந்தா சைதன்யா ஜோடியின் திருமண நாளும் வருகிறதாம். இதையும் சேர்த்தே அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

இதில் சமந்தாவை கணவர் சைதன்யா ஹாட் லுக்கில் போட்டோ எடுக்க அதை சமந்தா வெளியிட 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

சாஹோ படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம்!!

சாஹோ

சாஹோ இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் படம். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சாஹோ நாளை 4 மொழிகளில் ரிலிஸாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தின் புக்கிங் வேற லெவலில் உள்ளது.

தமிழ், மலையாளம் ரிசல்ட் பொருத்து தான் கூட்டம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதில் ‘படத்தின் இடைவேளை டுவிஸ்ட் சூப்பராகவும், கடைசி அரை மணி நேரம் பிரபாஸ் சண்டைக்காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளதாகவும்’ கூறியுள்ளனர்.

தோற்றம் எதையும் முடிவு செய்வதில்லை, ஆனால்… கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கருத்து கூறிய நடிகை கிரண் ரத்தோட்!!

கிரண் ரத்தோட்

விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார்.

ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார்.

இந்நிலையில், தற்போது தனது உடலை இளைத்து மீண்டும் தனது பழைய உடல் அழகை அவர் பெற்றுள்ளார். அவரின் தற்போதையை சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து மீண்டும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அம்மணி.

மேலும், ” தோற்றம் எதையும் முடிவு செய்வதில்லை. ஆனாலும், தோன்றுகிறேன் ” என்றும் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

பிக் பாஸ் கவினின் தாய்

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கவின் தாயார் பண மோ சடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி அருணகிரி சொர்ண ராஜன் ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோ சடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.