விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார்.
ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி.இயக்கிய ஆம்பள படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார்.
இந்நிலையில், தற்போது தனது உடலை இளைத்து மீண்டும் தனது பழைய உடல் அழகை அவர் பெற்றுள்ளார். அவரின் தற்போதையை சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து மீண்டும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அம்மணி.
மேலும், ” தோற்றம் எதையும் முடிவு செய்வதில்லை. ஆனாலும், தோன்றுகிறேன் ” என்றும் பதிவு செய்துள்ளார்.
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கவின் தாயார் பண மோ சடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி அருணகிரி சொர்ண ராஜன் ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோ சடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் மீண்டும் காதலித்து வருவதாக தகவல் பரவுகிறதாம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக வசூல் ஈட்டிய வரலாற்று படத்தின் நாயகனும், நாயகியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டதாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டார்களாம்.
இதனிடையே வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை மணக்க நடிகர் தயாரானதாக தகவல்கள் கசிந்ததாம். இந்த நிலையில் வரலாற்று பட நாயகனும், நாயகியும், அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதாம். இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறதாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார் நடிகை விசித்ரா.நடிகை விசித்ராவை நினைவிருக்கிறதா? கவர்ச்சி, குத்துப்பாட்டு எனத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ‘ரசிகன்’, ‘முத்து’, ‘வீரா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், ஒருகட்டத்தில் சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி கணவருடன் மைசூரில் செட்டிலானவர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க இருக்கிறார். முதல் கட்டமாகச் சென்னையிலும், தொடர்ந்து தேனி பகுதியிலும் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். சென்னைக்கு வந்திருந்தவரிடம் பேசினோம்.
“சினிமாவுக்கு வர்ற எல்லாருக்குமே ஹீரோயின் ஆகணும்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். நான் மட்டும் விதிவிலக்கா இருப்பேனா? ஆனா குத்துப்பாட்டுக்கு ஆடுறவங்க; கவர்ச்சி நடிகைங்கிற அடையாளம்தான் எனக்கு முதல்ல கிடைச்சது. அதுக்காகப் பெரிசா வருத்தப்படலை. ஏன்னா, அன்னைக்கு கவர்ச்சி நடிகைகளில் விஜய் படத்துல இருந்து ரஜினி படம் வரைக்கும் எல்லா நடிகர்களின் படங்களிலும் வந்தவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுலேயும் என்னை ரஜினி சாரே தன்னோட ஒரு படத்துக்கு ரெகமெண்டு பண்ணினார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கவுண்டமணினு பெரிய பெரிய ஆளுங்களோட வொர்க் பண்ணிட்டேன்.
நான் எடுத்துக்கிட்ட 18 வருஷம்கிறது பெரிய இடைவெளிதான். ’கல்யாணத்துக்குப் பிறகு நடிப்போமா இல்லையா’ங்கிற கேள்வி அன்னைக்கு எனக்குள்ளும் இருந்தது. அதுக்குப் பதில் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே மும்பை, புனேனு பல இடங்களுக்கு மாறியிருந்தேன்; கணவரோட வேலை அப்படி. தொடர்ந்து குழந்தைகள். மூணு பேரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகிடுச்சு.
இதுக்கிடையில பொருளாதார ரீதியா உதவும்னு தொடங்கின ஹோட்டல் பிசினஸ் ஒருபுறம். இவ்வளவுக்கு மத்தியிலும் ‘சினிமாவிலோ, சீரியலிலோ மறுபடியும் நடிப்பேன்’னு மட்டும் ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருந்தது. நான் சைக்காலஜி படிச்சவள். அதை வச்சு சொல்றேன், நம்முடைய ஆழ் மனசு ஒரு விஷயத்தை நடக்கற மாதிரியே நினைக்குதுன்னா, ஒருநாள் அந்த விஷயம் நிச்சயம் நடந்திடும். இதோ இப்ப கமிட் ஆகிட்டேனே! இனி தினமும் எல்லாரையும் சந்திக்கப் போறேன்’’ – உற்சாகமாகச் சொன்னவரிடம், இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.
‘’சினிமாவுல அறிமுகமானப்போ 18 வயசுகூட ஆகலை. பெரிசா சினிமா பின்னணி இல்லாத, அப்பா கவர்மென்ட்ல வேலை பார்த்த குடும்பம் எங்களோடது. அதனால இயல்பாவே ஒரு பயம் இருந்தது. ஒருவழியா அதையெல்லாம் கடந்து ரஜினி சார் படம் வரைக்கும் நடிச்சுட்டேன்.
ஆனா இன்னைக்கு சீரியலுக்கு கிடைக்கிற வரவேற்பு உண்மையிலேயே வியக்க வைக்குது. சீரியல் நடிகர் நடிகைகளைக் கேரக்டர் பெயர்லயே கூப்பிடறதும், அவங்களை தங்களோட வீட்டுல ஒருவராவே பார்க்கறதுமா, ஆச்சர்யமா இருக்கு. அந்த வகையில கவர்ச்சி நடிகை விசித்ராங்கிறது என்னோட பழைய அடையாளமா இருக்கலாம்.
ஆனா நானும் இனி உங்க வீட்டுல ஒருத்தியா இருக்கப் போறேன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, உடன் நடிக்கிறவங்களில் சிலர் என்னோட படங்கள் வெளியான நாள்கள்ல ஸ்கூல்ல படிச்சவங்களாம். அவங்களுக்கெல்லாம் எங்கிட்ட வந்து பேச ஆசை. ஆனா ஏனோ தயங்கவும் செய்றாங்க. ஷூட்டிங் இப்பதானே தொடங்கியிருக்கு, போகப்போக கூச்சம், தயக்கமெல்லாம் சரியாகி தெளிவாகிடுவாங்கன்னு நம்பறேன்’’ எனச் சிரிக்கிறார் விசித்ரா.
நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனான பிரபல நடிகர் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கும்.செல்பி எடுக்க முடியாத காலகட்டங்களில் பொக்கிஷமான புகைப்படங்கள் நமது முந்தைய தலைமுறையினர் எத்தனையோ சேகரித்து வைத்து உள்ளனர்.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக இந்த ஃபோட்டோ பார்க்கப்படுகிறது இது போன்ற போட்டோக்கள். அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்.
ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.
இளைய திலகம் பிரபு இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் வைக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.
மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம்.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இவரை மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க அனுகியுள்ளனர்.
ஆனால், அவர் ‘நான் தற்போது தான் ஒரு சில சோலோ ஹீரோ படங்களில் நடித்து வருகின்றேன், இந்த படத்திற்காக கால்ஷிட் ஒதுக்கினால், அதில் கவனம் சிதறும்’ என கூறி விலகிவிட்டாராம்.
பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல காதல், சண்டை, போட்டி, பொறாமை என சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தோடு பிக்பாஸ் வீட்டை காலி செய்யப்போவது யார் என நாளை தெரிந்துவிடும்.
காப்பாற்றப்படுகிறவர்கள் யார் என்பது இன்று தெரிந்துவிடும். இதற்கிடையில் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசப்பட்டு வருகிறது.
தற்போது இந்நிகழ்ச்சியின் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் தனியாக பேசுகிறார்கள். இதனை கமல் குறும்படமாக இல்லாமல் விளக்க படம் போட்டுக்காட்டு கிறார். இதில் கவின், லாஸ்லியா இருவரும் முகத்தில் திகில் கலந்தது போல வைத்துக்கொள்கிறார்கள்..
பிக்பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி, தனது முன்னாள் கணவன் சாண்டிக்கு ஆதரவாக அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற ” என கருத்து கூறியிருந்தார்.
இதனால் கடுப்பான நடிகை காஜல் பசுபதி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது.
மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதற வேண்டாம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர் தற்போது சன் டிவியின் ரன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை சரண்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அடுத்து நடிகை சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் படப்பிடிப்பு தளத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது .
மேலும் நடிகை சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் திடீரெனெ பெய்த மழையால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் வைரல் பீவர் வந்துள்ளதாகவும் இதனால் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சரண்யா அந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.