மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம்.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இவரை மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க அனுகியுள்ளனர்.
ஆனால், அவர் ‘நான் தற்போது தான் ஒரு சில சோலோ ஹீரோ படங்களில் நடித்து வருகின்றேன், இந்த படத்திற்காக கால்ஷிட் ஒதுக்கினால், அதில் கவனம் சிதறும்’ என கூறி விலகிவிட்டாராம்.
பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல காதல், சண்டை, போட்டி, பொறாமை என சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரத்தோடு பிக்பாஸ் வீட்டை காலி செய்யப்போவது யார் என நாளை தெரிந்துவிடும்.
காப்பாற்றப்படுகிறவர்கள் யார் என்பது இன்று தெரிந்துவிடும். இதற்கிடையில் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசப்பட்டு வருகிறது.
தற்போது இந்நிகழ்ச்சியின் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் தனியாக பேசுகிறார்கள். இதனை கமல் குறும்படமாக இல்லாமல் விளக்க படம் போட்டுக்காட்டு கிறார். இதில் கவின், லாஸ்லியா இருவரும் முகத்தில் திகில் கலந்தது போல வைத்துக்கொள்கிறார்கள்..
பிக்பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி, தனது முன்னாள் கணவன் சாண்டிக்கு ஆதரவாக அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற ” என கருத்து கூறியிருந்தார்.
இதனால் கடுப்பான நடிகை காஜல் பசுபதி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது.
மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதற வேண்டாம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர் தற்போது சன் டிவியின் ரன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை சரண்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அடுத்து நடிகை சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் படப்பிடிப்பு தளத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது .
மேலும் நடிகை சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் திடீரெனெ பெய்த மழையால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் வைரல் பீவர் வந்துள்ளதாகவும் இதனால் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சரண்யா அந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்க்குள் நாள் முழுக்க நடக்கும் விஷயங்களில் கண்காணித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் தான் அந்த 1 மணி நேர நிகழ்ச்சியில் ஒளிபரப்ப செய்வார்கள்.
அதில் ஒருப்பிரச்சனை உருவாகிறது என்றால் அதற்கு வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் அவர்கள் ஹை லெவலில் சண்டை போட்டுக்கொள்வது மட்டும் தான் ஹைலைட் செய்யபடுகிறது.
இந்த நிலையில் கவின் சாக்ஷி நள்ளிரவுகளில் தனியாக அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கபட்டது, அதனை தொடர்ந்து லாஸ்லியா கவினும் அது போல செயல்பட்டார்கள்.
இதனால் பல அமளித்துமளிகள் ஆனதும் , சித்தப்பு உட்பட பலர் இதற்க்கு எதிர் கருத்து சொன்னதும் அனைவரும் அறிந்தது தான் இருந்தாலும் இதற்க்கு பெரிதாக எதிர் வினையை ஆற்றியவர், தர்ஷன் பல முறை இந்த கேள்வியை தர்ஷன் லாஸ்லியாவிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்ஷனும் – செரினும் தனிமையில் நள்ளிரவுகளில் அமர்ந்து பேசுவது போல காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
இதற்கு இடையில், தர்ஷன் என்ன கோச்சுகிட்டியா என கேட்பதும், அதற்கு செரின் செல்லமாக கோவபடுவதும் உடனே தர்ஷன் தாஜா பண்ணுவதும் என சில நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கபட்டதாக அதன் அதிகாரபூர்வ இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது. இதனை அடுத்து சில மணி நேரத்திற்க்குள்ளாக வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி, வெளியே வந்ததும் கூட மதுமிதாவால் பெரும் ச ர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் த ற்கொ லை முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரில் மதுமிதா த ற்கொ லை செய்துக்கொள்வதாக மி ரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புகாரின் முழு பின்னணியும் தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்லும் போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூ.11.50 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் ரூ.80,000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக விஜய் டிவி நிர்வாகம் கூறியிருக்கிறது.
அப்போது அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, திடீரென்று கடந்த 19 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மி ரட்டல் விடுத்துள்ளார். அதில், இன்னும் இரண்டு நாட்களில் பாக்கி பணத்தை தரவில்லை என்றால் த ற்கொ லை செய்து கொள்வேன், என்று மிரட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து நடிகை மதுமிதாவிடம் கேட்டதற்கு, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால், தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரபல இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அல வைக்குந்தபுரமுலோ (Ala Vaikunthapuramulo) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹாரிகா மற்றும் ஹாஸின் கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் சார்பாக அல்லு அரவிந்த் மற்றும் ராதா கிருஷ்ணா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
அல்லு அர்ஜூனின் 19வது படமான இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு தமன் இசையமைக்க, பி.எஸ்.வினேத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக பிரபல தமிழ் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை, கர்ப்பமாக இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாராம்.
பேபி நடிகை தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறாராம். இவர் இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளாராம். இவர் தற்போது தமிழில் சக்கைப்போடு போட்ட நம்பர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறாராம்.
பேபி நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்தாராம். ஆனால் திருமணத்துக்கு பிறகும் பேபி நடிகை மார்க்கெட் குறையவில்லையாம். தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க பேபி நடிகை முடிவு செய்துள்ளாராம். அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.
கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரேகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற ரேகாவுக்கு புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரேகா, சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்கு காரணம் என் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், தான் இறந்த பின், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.