அது வெறும் கற்பனைக் கதை : டிஜிபிக்கு எதிராகக் கொதிக்கும் ஸ்ரீதேவியின் கணவர்!!

ஸ்ரீதேவி

‘ஸ்ரீதேவின் ம ரணம் கொ லை’ எனப் பேசிய கேரள டிஜிபின் கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த வருடம் தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உ யிரிழந்தார். ஸ்ரீதேவி இ றந்த பிறகு அவர் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் ச ந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் மற்றும் அவர் தங்கியிருந்த அறைகளில் துபாய் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ‘ ஸ்ரீதேவியின் ர த்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் அவரின் இ றப்பு விபத்து’ என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து ஸ்ரீதேவி இ றப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவி இ றந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?
இந்நிலையில் சமீபத்தில் கேரளகவ்முதி என்ற நாளிதழுக்குப் பேட்டியளித்த கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங், “ தடயவியல் நிபுணரான உமாதாதன் (Umadathan) என் நெருங்கிய நண்பர். அவர் சில காலங்களுக்கு முன்னர், ஸ்ரீதேவியின் ம ரணம் விபத்து இல்லை அது கொ லை என என்னிடம் கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் சில காரணங்களையும் என்னிடம் விளக்கினார். அவர் கூறியபடி, ‘ ஒருவர் எவ்வளவு மது அருந்தியிருந்தாலும் ஒரு அடி நீரில் மூழ்க வாய்ப்பில்லை. அதே நேரம் இ றந்தவரின் காலை வேறு ஒருவர் பிடித்து நீரில் மூழ்கடித்தால் மட்டுமே உ யிரிழக்க முடியும் என என் நண்பன் கூறினார்” என்று டிஜிபி பேசியிருந்தார். டிஜிபி கூறிய தடயவியல் நிபுணர் உமாதாதன் தற்போது உயிருடன் இல்லை.

ஸ்ரீதேவி இ றந்து ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு போ லீஸ் அதிகாரியே இப்படியொரு கருத்தைத் தெரிவித்தது பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. தற்போது டிஜிபியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். ஸ்பாட் பாய் இ (SpotboyE) என்ற பாலிவுட் ஊடகத்துக்குப் பேட்டியளித்து அவர், “இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு : 2 ஓர் பார்வை!!

கழுகு – 2

காதல், களவு, காட்டு விலங்குகள்… இவற்றுக்கு மத்தியில் கதை..
கொடைக்கானலை ஒட்டிய காட்டுப்பகுதியில் மரம் எடுக்கும் கான்ட்ராக்ட்டை எடுக்கிறார் ஒரு லோக்கல் புள்ளி. ஆனால் அங்கே செந்நாய்கள் தொல்லை. செந்நாய்களைச் சமாளிக்கவும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும் தேனியில் சின்னச் சின்னதாகத் திருட்டு வேலைகள் செய்யும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் ‘வேட்டைக்காரர்கள்’ எனத் தவறாக நினைத்து, காட்டுக்குள் அழைத்துப் போகிறார் மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கர். அங்கே கிருஷ்ணா பிந்து மாதவியைப் பார்க்க, காதல் பிறக்க, வில்லன் புதையலைப் பார்க்க, ஆசை பிறக்க, இயக்குநர் ஸ்க்ரிப்ட் நீளம் பார்க்க… இன்னும் சில கிளைக்கதைகள் பிறக்க, எல்லாம் முட்டி மோதி ஆக்ஸிடென்ட் ஆவதுதான் மீதிக்கதை.

கிருஷ்ணாவுக்கு அப்பாவி வேடம் பொருந்துகிறதுதான். ஆனால் எத்தனை படங்களுக்கு அதையே செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. போன நூற்றாண்டோடு போய்விட்ட, ‘மாமா… எங்க இருக்கீங்க?’ டைப் கதாபாத்திரம் பிந்துமாதவிக்கு! காளிவெங்கட் காமெடிகளுக்கு செந்நாய்களே பரவாயில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பெராடி போன்றவர்கள் எல்லாம் காட்டுப்பாதையில் கடந்துபோகும் செடிகளைப்போல சட்டெனக் காணாமல்போகிறார்கள். இசை யுவன் என டைட்டில் கார்டில் பார்த்தால் திடுக்கென இருக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவரின் சாயல் கொஞ்சமும் இல்லை. மலையும் பனியும் சேர்ந்து ஒளிப்பதிவாளரைக் காப்பாற்றுகின்றன.

‘என்ன சாப்பிட்ட?’ – ‘தயிர் சாதம்’ – ‘ஊறுகாயைப் பிசைஞ்சு சாப்பிட்டிருக்கலாம்ல!’ – ‘ஓ… தயிர்சாதத்துக்கு ஊறுகாய் தொட்டுக்குவாங்களா?’ – இப்படித்தான் இருக்கின்றன வசனங்கள்! ஓவர்லாப்பில் செல்லும் வசனங்கள் மட்டுமே பெளண்டடு ஸ்க்ரிப்ட்டில் முக்கால்வாசி வரும்போல! கடைசிப் பத்து நிமிடங்கள் மட்டுமே விறுவிறுவென இருக்கின்றன.

யாரிடமும் விசாரிக்காமலா வேட்டைக்காரர்களைத் தேர்ந்தெடுப்பார் எம்.எஸ்.பாஸ்கர், துப்பாக்கியைப் பறிகொடுத்த போலீஸ்காரர்கள் ஏன் கிருஷ்ணாவைத் தேடவில்லை, தேசிய அரசியல் பிரபலம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்ன ஆனது, முதுமக்கள் தாழியில் எப்படித் தங்கப்புதையல், கொடைக்கானலுக்கு எம்.எல்.ஏ-வே கிடையாதே? இப்படிப் படம் முழுக்க ஏகப்பட்ட கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன. எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ பறக்கிறது இந்தக் கழுகு.

பிச்சைக்காரி ரோல்ல நடிக்கச் சொன்னாலும் தயங்கமாட்டேன் : ஜாக்குலின் அதிரடி!!

ஜாக்குலின்

“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. ஸோ, கல்யாணப் பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு” எனக் கலாயாக ஆரம்பிக்கிறார் சீரியலில் கமிட்டாகியிருக்கும் ஜாக்குலின்!

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் ஜாக்குலின். அதன் பிறகு, நயன்தாராவின் தங்கையாக `கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். சினிமாவிலே நடித்திருந்தாலும் சீரியலில் நடிக்கும் ஆசையும் ஜாக்குலினுக்கு இருந்தது. அந்த ஆசையை `தேன்மொழி பி.ஏ’ என்கிற புது சீரியலின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். பிஸி மோடில் இருந்தவரை நேர்காணலுக்காகச் சந்தித்தேன்.

“திடீர்னு ஒரு நாள் விஜய் டி.வி சேனலில் இருந்து சந்துருனு ஒருத்தர் போன் பண்ணி, `புது சீரியல் ஆரம்பிக்கப்போறோம். அதுல நடிக்க உங்களுக்கு ஓ.கேவா’னு கேட்டார். ஆரம்பத்துல விருப்பம் இல்லைனு சொன்னேன். அப்புறம், `யோசிச்சு பதில் சொல்றேன். இரண்டு நாள்கள் டைம் கொடுங்க’னு கேட்டேன்.

இந்த சீரியல் `நிம்க்கி முக்கியா’ (Nimki Mukhiya) என்கிற இந்தி சீரியலுடைய ரீமேக். முதல்ல தயக்கத்தோட இருந்தேன். அப்புறம், சீரியலுடைய புரோமோ பார்த்ததும் ஆசை வந்திடுச்சு. `எதுக்குமே கவலைப்படாம ஜாலியாக சிரிச்சிட்டே இருப்பா. குழந்தைத்தனம், எதையும் சீரியஸா எடுத்துக்காத கேரக்டர்’னு சொன்னதும் என் அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. `இது உனக்கு நல்ல வாய்ப்பு. அதுவும் லீடு ரோல். நிச்சயம் உனக்கு நல்ல ரீச் கிடைக்கும்’னு சொல்லி என்னை உற்சாகப்படுத்தினாங்க.

`ஆண்டாள் அழகர்’ இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன் சார்தான் இந்த சீரியலையும் இயக்குறார். ஆரம்பத்துல எனக்குதான் கஷ்டமா இருந்தது. அது ஓவர் ஆக்ட் பண்ற மாதிரியான கேரக்டர். நான் அந்த அளவுக்கு ஓவர் ஆக்ட்லாம் பண்ணமாட்டேன். அந்த கேரக்டருக்குத் தகுந்த மாதிரி என்னை மாற்றியது இயக்குநர்தான். இந்த சீரியலுக்கான புரோமோ ஷூட் வித்தியாசமா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும், நல்லா இருக்குனு சொன்னதும், எனக்கு இன்னும் சந்தோஷமாகிடுச்சு. அதுக்கப்புறம் சீரியலுடைய சில எபிசோடுகளைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிடுச்சு. அடுத்த நாளே ஓ.கே சொல்லிட்டேன். காஸ்டியூம் போட்டப் பிறகு இன்னும் ஆத்மார்த்தமா உணர ஆரம்பிச்சிட்டேன்.”

சீரியலுடைய ஆரம்பத்துலேயே கல்யாண கெட்டப்ல நடிக்கிறீங்க… வெளியில என்ன பேசிக்கிறாங்க?
“சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. கல்யாண பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு. பிச்சைக்காரியா நடிக்கச் சொன்னாலும் எந்தத் தயக்கமும் இல்லாம நடிப்பேன்.”

“நடிப்புல பிஸி ஆகிட்டீங்க. வி.ஜேவா மறுபடியும் வருவீங்களா?”
“நிச்சயமா வருவேன். நான் கேட்கிறதுக்கு முன்னாடியே, `நடிக்க வந்துட்டோம்ங்கிறதால, உனக்குப் பிடிச்ச வி.ஜே வேலையை விட்டுடாதே’னு டீம்லேயும் சொல்லிட்டாங்க. என்ன வேலை வந்தாலும் என்னைப் பலருக்கும் அடையாளம் தெரிஞ்சது வி.ஜேவாதான். அதனால, எப்பவும் அதை விடமாட்டேன்” எனத் தனது டெம்ப்ளேட் சிரிப்போடு பேசி முடித்தார், ஜாக்குலின்.

மனநலம் பாதிக்கப்பட்டோரை இழிவுபடுத்துகிறதா நேர்கொண்ட பார்வை?

நேர்கொண்ட பார்வை

பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் “அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பா திப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆ பத்தை விளைவிப்பார் என்பதாகும்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ‘பைபோலார் டிஸார்டர்’ எனப்படும் இருமுனைப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் செயல்பட்டுவரும் ‘மைண்ட் மேட்டர்ஸ் சர்க்கிள்’ என்ற அமைப்பு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சரவணராஜா, ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து தனது எதிர்ப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கருத்தைப் பல்வேறு மனநல மருத்துவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சரவணராஜாவிடம் பேசினோம்.
“சமூகம் நாளுக்குநாள் பக்குவப்பட்டுக்கொண்டு தனது கருத்தியல்களை மாற்றிக்கொண்டு வருகிறது. பெரும்பான்மை சமூகத்தால் பாதிப்புக்குள்ளாகும் பல்வேறு வகைச் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கும் மனநிலைக்கு மாறிக்கொண்டு வருகிறோம். பல்வேறு காரணங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களை ‘மனநலச் சேவைப் பயனர்கள்’ என்று அழைக்கவேண்டுமென்று ஐ.நா. சபை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் மனநலச் சேவைப் பயனர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற கருத்தைப் பதிவுசெய்யும் திரைப்படங்கள் நம் தமிழ்த்திரையுலகில் தொடர்ந்து வெளிவருகின்றன.`உறியடி’ திரைப்படத்தில் கூலிக்கு கொலை செய்பவன் மனநோயாளியாக நடிப்பதாகக் காட்டுவது, `ராட்சசன்’ திரைப்படத்தில் கடுமையான உடல்நலச் சிக்கல்களை உண்டாக்கக் கூடிய வயதாகும் குறைபாடு (aging syndrome) உள்ள நபரை பகாசுர சக்தி கொண்ட வில்லனாகக் காட்டுவது என மனநிலை பா திக்கப்பட்டவர்களை கொ டூரமானவர்களாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள `நேர்கொண்ட பார்வை’ திரைப்படமும் அதே கருத்தை உறுதிசெய்யும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.

“‘பிங்க்’ படத்தில், அமிதாப் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் (தீபக் சேகல்) மனநல பாதிப்பு குறித்து ஒரு மேலோட்டமான சுட்டுதல் மட்டுமே இருந்தது. ஆனால், தமிழில் அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரம் (பரத் சுப்பிரமணியம்) இருமுனைப் பிறழ்வுடையவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மனைவியின் ம ரணத்தையொட்டி பரத்துக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மனநல மருத்துவத்தின் அடிப்படையில் மிகவும் த வறான கருத்து. ஒரு துன்பியல் இழப்பினால், ஒருவருக்கு இருமுனைப் பிறழ்வு ஏற்பட வாய்ப்பில்லை.

பாட்டிலிலிருந்து மாத்திரைகளைக் கொட்டி உண்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஆபத்தானவை. அவை பொதுமக்களுக்குத் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும். எந்தவொரு உடல்நலக்கோளாறுக்கும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குமேல் மருந்துகளை உட்கொண்டால் அது கடும்விளைவுகளை உண்டாக்கும்.

பரத்தின் மனநல மருத்துவராக வரும் கதாபாத்திரம் மிக மோசமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. “பரத் மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உனக்கும் நல்லது. உன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது” என அறிவுரை வழங்குகிறார். அதன் பொருள், மனநலப் பாதிப்பு காரணமாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரத் ஆபத்தை விளைவிப்பார் என்பதாகும்.

உண்மை என்னவெனில், மாத்திரைகள் எடுக்காவிடில் ஒருவர் தனக்குத்தானே ஊறு விளைவிக்கத்தான் சாத்தியம் அதிகம், பிறருக்கு அல்ல. மேலும், அடியாள்களிடம் பேசும் காட்சியில், “தம்பி, நீ ஓடிரு… நீ தாங்க மாட்ட… இது பல வருஷக் கோபம்” என்கிறார் மருத்துவர். இவையெல்லாம் மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் மீது சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மிகைப்படுத்தல்களே.

நடிகர் அஜித்துக்கு ஹீரோயிசமான சண்டைக்காட்சிகளை அமைப்பதற்காகவே மூலத்திரைப்படத்திலிருந்து விலகி, இருமுனைப் பிறழ்வு குறித்து தவறான, மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளைப் பதிய வைத்துள்ளனர். வணிகப் படங்களின் வியாபார நிர்பந்தங்களுக்கு இருமுனைப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பலிகடாவாக்கப்படுவதை நிச்சயம் ஏற்க முடியாது.

எனவே, திரைப்படக்குழுவினர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மனநலப் பாதிப்பு குறித்த அனைத்துக் காட்சிகளையும் நீக்க வேண்டும். குறிப்பாக சமூகப் பொறுப்புணர்விற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற நடிகர் அஜித், இத்தகைய தவறான காட்சிப்படுத்தல்களால் ஏற்படும் நீண்ட கால எதிர்மறை விளைவுகளைப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் : புகைப்படங்கள் உள்ளே!!

நடிகை யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்தில் இவர் செம்ம கி ளாமராக நடித்திருப்பார். முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிர்களாக மாறினர். இதையடுத்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது நடிகை யாஷிகா வழக்கம்போல் ப டுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.இவர் அவ்வப்போது க வர்ச்சி என்ற பெயரில் ப டுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேட்டி எடுக்க வந்த பெண் மீது ஏற்பட்ட காதல் : ரஜினியின் சுவாரசிய காதல் கதை!!

ரஜினியின் சுவாரசிய காதல்கதை!!

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த்.வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இவ்வளவு ஆண்டுகள் இருந்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.

தனது எளிமையின் காரணமாகவே ஏழை எளிய மக்களை கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்க தீராத நாவல் போன்றது. அவரின் காதல் கதைகளை கேட்டால் ஒரு படமே எடுத்துவிடலாம். அந்த அளவு சுவாரஷ்யங்கள் இருக்கின்றன.

ரஜினி – லதாவின் காதல் கதை பொதுவான காதல் கதை போன்றது அல்ல. உச்சத்தில் இருக்கும் ஓர் நடிகனுக்கு சாதாரண பெண் மீது காதல் வருவது என்பது சாதாரண விடயம் அல்ல.

சூப்பஸ்டாரை பேட்டி எடுக்க வந்த பெண்தான் லதா. அந்த பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்தாக மாற பாதை போட்டு கொடுத்தது என்று கூறலாம். தில்லுமுல்லு திரைப்பட ஷூட்டிங்-ன் போது தான் ரஜினியும் லதாவும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.

பேட்டியின் போதே லதாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றுள்ளார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

கடந்த 1978-79 என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இரவு பகலாக ஓய்வு இன்றி நடித்து வந்துள்ளார். இதனால் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த லதா அவருக்கு தாய்மை பாசம் தேவை என்பதை உணர்ந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

அவர்களின் உண்மையான காதலும் திருமணத்தில் முடிந்தது. நரம்பியல் பிரச்சினையில் இருந்து சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

ரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும், அன்பும் தான் காரணம்.அன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

இதேவேளை, ஜாக்கிசானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தானாம். இவரது ஸ்டைலை யாராலும் இன்று வரை இவரைப் போலவே செய்ய முடியாது. இது போன்ற பல விடயங்கள் இவரை இன்றும் தனித்துவமாக காட்டுகின்றது என்றால் மிகையாகாது. நடிகராக இருக்கும் இவரின் வாழ்க்கை வரலாறு கூட மிக விரைவில் படமாக்கப்படலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொ லையுதிர்காலம் : திரைவிமர்சனம்!!

கொ லையுதிர் காலம்

பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில், ஒரு பிரமாண்ட எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துகளின் உரிமையாளர் அபா லாசன். அவரது இ றப்புக்குப் பிறகு அந்தச் சொத்துகளும், அவர் நிர்வகிக்கும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளும் அபா லாசன் தத்தெடுத்த மகளான நயன்தாராவின் கைக்கு வருகிறது. சொத்துகள் முறைப்படி பதிவுசெய்யப்பட, லண்டன் செல்லும் நயனுக்கு அபா லாசனின் அண்ணன் மகன் மூலம் மிரட்டல் வருகிறது. அதன்பிறகு நடப்பவற்றை திகில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம் : கொ லையுதிர் காலம்
படத்தின் திரைக்கதையில் காட்சிகளில் ஒரு திகில் படத்திற்கான சுவாரஸ்யமோ எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் பரபரப்போ இல்லை. 110 நிமிடப் படத்தில் நயன்தாரா தத்தெடுக்கப்பட்ட கதையை நீட்டி முழக்கிச் சொல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு நடக்கும் துரத்தலும், கொலைகளும் எந்தவித உணர்ச்சியையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை.

“யாராச்சும் சீக்கிரம் செத்துத் தொலைங்கப்பா. வீட்டுக்குப் போகணும்” என்பதாகத்தான் இருந்தது பார்வையாளர்களின் மனநிலை. ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ஆனால், இயக்குநர் சக்ரி டோலட்டியின் முந்தைய படங்களின் உழைப்பில் கொஞ்சமும் இதில் வெளிப்படவில்லை. பிரதாப் போத்தன், பூமிகா, ரோஹிணி ஹட்டாங்கிடி ஆகியோருக்கு, படத்தில் நடிப்பதற்கான சவாலான காட்சிகளோ வாய்ப்போ இல்லை.

காது கேட்காத, வாய் பேச இயலாத நயன்தாராவின் பாத்திரம் படத்திற்குப் புதுமையான ஒன்றாகவெல்லாம் இல்லை. ஆனால், இயக்குநர் அதைப் பெரிதும் நம்பியிருக்கிறார், குறிப்பாக அதை மட்டுமே நம்பியிருக்கிறார். அதன்மூலம் ரசிகர்களுக்குப் பரிதாபத்தைக் கடத்த நினைத்தார்களோ என்னவோ, அவர்களுக்கே வெளிச்சம்.

“இந்தத் திரைக்கதைக்கு நாங்க வேற என்னதான் செய்யறது?” என்று பரிதாபமாகக் கேட்பதுபோல இருந்தது ஒளிப்பதிவாளர் கோரி க்ரேயாக், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி ஆகியோரின் பங்களிப்புகள்.‘கொ லையுதிர் காலம்’ என்ற படத்தின் தலைப்பு அளவுக்காவது திகிலூட்டியிருக்கலாம்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ – ஓர் பார்வை!!

கோமாளி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி , காஜல் அகர்வால் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் கோமாளி.

1990 காலகட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஜெயம் ரவி, தன்னுடன் படிக்கும் மாணவி சம்யுக்தா ஹெட்ஜ் மீது காதல் வயப்படுகிறார். அதற்கென, தன் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் பரிசாகக் கொடுத்த பரம்பரை சிலையை சம்யுக்தாவிடம் கொடுத்து தனது காதலைச் சொல்ல செல்கிறார். செல்லும் அதே ஏரியாவில் பெரிய ர வுடி ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கே .எஸ் ரவிக்குமார் காத்திருக்கிறார்.

அந்த ஊரின் மிகப்பெரிய ர வுடியான பொன்னம்பலத்தை கொன்று கே .எஸ் ரவிக்குமார் தான் அந்த ஊரின் மிகப்பெரிய ர வுடி ஆகவேண்டும் என்பதற்காக, தனது அ டியாட்களுடன் ஜெயம் ரவியை நெருங்குகிறார். ஜெயம் ரவி சம்யுக்தாவிடம் சிலையை பரிசாகக் கொடுத்து, தனது காதலைச் சொல்ல முயலும் பொழுது கே . எஸ் . ரவிக்குமார் பொன்னம்பலத்தைக் கொ ன்றுவிட்டு த ப்பிக்க முயலும் பொழுது எதிர்பாராத விதமாக ஜெயம் ரவிக்கு வி பத்து ஏற்பட்டு கோமா போகும் நிலை உண்டாகிறது.

20-ஆம் நூற்றாண்டின் கடைசிநாள் அன்று, கோமா நிலைக்குச் சென்ற ஜெயம் ரவி 16 ஆண்டுகளுக்குப் பிறகு, கோமாவில் இருந்து மீண்டும் சுய நினைவுக்குத் திரும்புகிறார். அவரை அத்தனை ஆண்டுகள் வரை, அவரது நண்பர் யோகி யோகிபாபு பார்த்துக்கொள்கிறார். ரவி கோமாவில் இருந்த 16 ஆண்டுகளில் உலகம் பல மாற்றங்களை அடைந்து இருந்தது. அந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஜெயம் ரவியால் அவ்வளவு எளிதில் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்ததா? அவர் படும் அவதியையும், அதன்பின் கே .எஸ் . ரவிகுமாரால் அவருக்கு வரும் பிரச்சனைகளையும், அவர் எப்படிச் சமாளித்தார் என்பதைப் பற்றி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் கோமாளி.

ஜெயம் ரவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக பார்த்த ஜெயம் ரவியை ஜாலியான அப்பாவித்தனமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் பார்ப்பது நன்றாகவே இருக்கிறது.

காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெட்ஜ் , தத்தம் கதாப்பாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். நகைச்சுவையையும் தாண்டிய, தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் நிறைய, சிறு சிறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுமே படத்துக்கு பலம் சேர்த்து இருக்கின்றன. ஹிப் ஹாப் தமிழா-வின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லவேண்டும் . குறிப்பாக பின்னணி இசை பல இடங்களில் திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. படத்தில் வரும் நண்பா நண்பா பாடலைக் கேட்கும்போது, அது நமக்குள் மனித நேய எண்ணத்தை வரவழைக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஹிப் ஹாப் ஆதி பாடலாசிரியராகவும் கவருகிறார். அவருடைய வரிகள் ஈர்க்கின்றன. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் சிறந்த ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். அவரது பிரேம்கள் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக 2016ல் சென்னையில் வந்த வெள்ளக் காட்சிகளை தத்ரூபமாகப் படம் பிடித்திருக்கிறார்.

படத்தில் பாடல் காட்சிகள் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்ட் வேலைகள் சிறப்பாக இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் உமேஷ். ஜே. குமார் இந்த படத்தில் சிறந்த பங்களிப்பை தந்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

அவருக்கு இது முதல் படமாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல் பணியாற்றியிருக்கிறார். அவர் இந்த படத்தில் ஆட்டோ டிரைவர் ஆகப் பேசும் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு கோமாளி சிறந்த இயக்குனர் அந்தஸ்தை கண்டிப்பாகப் பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் “ஓ பேபி”-திரைவிமர்சனம்!!

“ஓ பேபி”-திரைவிமர்சனம்!

சுரேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில் சமந்தா, லக்ஷ்மி , நாக சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஓ பேபி!. இளவயதிலேயே விதவையான , வாழ்வில் துன்பங்களை மட்டுமே அனுபவித்து, மகன் ஒருவர் மட்டுமே உலகமென வாழ்பவர் பேபி.

ஒரு மாயசக்தியினால் அவர் 24 வயது இளம் பெண்ணாக மாற்றமடைகிறார். அதன் பின் நிகழ்பனவற்றை அதகளமாக சொல்லியிருக்கும் படமே ஓ பேபி. படத்துக்கு ஆகப் பெரும் பலம் சமந்தா. 70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு, நடை, உடை, பாவணை என அசரடிக்கிறார்.

படத்தில் 70 வயது பேபியாக லக்ஷ்மி. தனது மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொண்டு உடைந்து அழுவது, தனது நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் கல்யாணம் பற்றி கேட்கும் நாக சூர்யாவிடம் என் பையனுக்கு கல்யாணமாகி அவன் பசங்க கல்யாண வயசுக்கு வந்துட்டாங்க என்று உலறி பின்பு அதனை சமாளிக்கும் இடம் ரகளை. இப்படி படம் முழுக்க சுவாரசியமான காட்சகளால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் நந்தினி ரெட்டி.

சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் என படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர். ரிச்சர்டு பிரசாத்தின் ஒளிப்பதிவு தரம்.

முதுமை பருவம் பற்றிய புரிதலை இந்த படம் வழங்கும். குறிப்பாக மனித வாழ்க்கையில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த மனநிலையுடன் கொண்டாட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கும் படம் தான் ஓ பேபி.

துறுதுறு சமந்தாவின் நடிப்பு, படம் முழுக்க வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என ஓ பேபி ஒரு ஃபீல் குட் எண்டர்டெயினர்.

“குருக்ஷேத்திரம்” திரைப்படம் ஒரு பார்வை!!

குருக்ஷேத்திரம்

விருஷபத்ரி புரொடக்ஷன் தயாரித்து வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டிருக்கும் படம் குருக்ஷேத்திரம். நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையை துரியோதணனை முதன்மைபடுத்தி சொல்லியிருக்கும் படம் தான் குருக்ஷேத்திரம்.

துரியோதணனாக தர்ஷன். தனது வலிமையான உடல் மொழியால் ஈந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். கர்ணனாக இந்த படத்துக்கு ஆகப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார் அர்ஜூன். குறிப்பாக போ ர் காட்சிகளில் தான் ஏன் ஆக்ஷன் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

திரௌபதியாக சினேகா. தன்னை பாண்டவர்கள் சூதாட்டத்தில் இழந்தது குறித்து கேட்டதும் அதிர்வது பின்பு தன்னை அசிங்கப்படுத்திய துரியோதணனுக்கு எதிராக சாபம் விடுவது என அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். சகுனியாக ரவிஷங்கர், அபிமன்யூவாக நிகில் என தங்களுக்கு கொடுத்த வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சக்கர வியூகம் உள்ளிட்ட போர் தந்திரங்களை தெளிவாக காட்சிகளாக நன்றாக சொல்லப்பட்டிருந்தது. மேலும் போ ர்காட்சிகள் நன்றாக வடிவமைக்கபப்பட்டிருந்தது. விஎஃப்எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஹரிகருஷ்ணாவும் ஒளிப்பதிவாளர் ஜெய் வின்சென்ட்டும் படத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். துரியோதணன் கதாப்பாத்திரத்தின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பாண்டவர்களுக்கான காட்சிகள் குறைவாகவே இருக்கிறது.

எனவே மஹாபாரதக் கதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே பாண்டவர்களின் குணாதிசயங்கள் தெரியும் என்பதால் போர் காட்சிகளின்போது சற்றுக்குழப்பம் ஏற்படலாம். முதல் பாதியில் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும் துரியோதணன் வழியாக கதை சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறது இந்த குருக்ஷேத்திரம். மஹாபாரதத்தை மாறுபட்ட கோணத்தில் சுவாரசியமான போர்காட்சிகளுடன் சொன்னவிதத்திற்காக ஒரு முறைபார்க்கலாம்.