கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் வேலையை காட்ட வேண்டி இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம் என்று மேடையிலேயே பகிரங்க மி ரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், ஒரு தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர்.
அதில், அது வேண்டுகோள்தான்… மி ரட்டல் அல்ல. ஏற்கெனவே ஒருமுறை அதே டி.வி-யில் ‘கேரளப் பெண்கள் அழகா… தமிழகப் பெண்கள் அழகா என்று விவாதம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் இது போன்று ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன்.
நடிகையான இவர் ஒரு மாடலாகவும் உள்ளார், பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
நடுவில் மாடல் ஷோ நடத்தி மோ சடி செய்ததாக அவர் மீது போலீஸ் புகார் எல்லாம் வந்திருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தண்ணீரில் உடையை படு க வர்ச்சியாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என திட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3 யின் ஆரம்பத்தில், முதல் சீசனை போல காதல் விவகாரத்தை வைத்து ப ரபரப்பு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, கவின் தனது காதல் விளையாட்டை தொடங்கினாலும் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை.
மாறாக லாஸ்லியாவின் சேட்டைகள் தான் மக்களிடம் பிரபலமானது. தற்போது எலிமினேட் ரவுண்ட் மூலம் ப ரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் சேட்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அதாவது, லாஸ்லியா பின்னாடி சுற்றிய கவின் தற்போது சாக்ஷியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தற்போது சாக்ஷியை கழட்டிவிட்டவர், மீண்டும் லாஸ்லியா மீது காதல் கொண்டிருக்கிறாராம்.
இன்றைய எப்பிசோட்டில் சாக்ஷிக்கு ஆதரவாக அனைத்து போட்டியாளர்களும் பேச, நடுவில் தர்ஷனோ “இரவு 2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன பிரன்ஷிப்” என்று கவினிடம் கேட்கிறார். இதனால், இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் பஞ்சாயத்து பெரும் ப ரபரப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
பிரபல திரைப்பட நடிகையான கெள்சல்யா தன்னுடைய திரைப்பயணம், வாழ்க்கை, ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90-களில் பிரபலமான நடிகைகளில் கெள்சல்யாவும் ஒருவர். பெங்களூரைச் சேர்ந்த இவர் மொடலிங் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.
ஆனால் அம்மாவின் தோழி மூலம் கெள்சல்யாவுக்கு சொட்டு நீலம் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு, மலையாள படமான ஏப்ரல் 19 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் இந்த படத்தின் விளம்பரங்களைப் பார்த்த ஏசியாநெட் சேனல் இவரை தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். அதன் பின் தமிழில் கொடிகட்டி பறந்த இவர்,தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
இதனால் ஏன் இதுநாள் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்தது. அதில் இவர் கல்யாணம் செய்து கொண்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று மிகவும் குறுகிய எண்ணத்தோடு எனக்கு வாழ விருப்பமில்லை.
பரந்த மனப்பான்மையோட எல்லோருக்காகவும் இயங்க வேண்டும் என்று விரும்புறேன். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். அதுமட்டுமின்றி இப்படி சிங்கிளா இருக்குறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களுல் ஒருவரான ஜாங்கிரி மதுமிதா சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டுவதும் புறம் பேசுவதுமாய் இருக்கிறார்கள்.
மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் தான் நமக்கு தெரியும் அளவிற்க்கு ஒகே ஒகே படத்தில் சந்தானத்துடன் நடித்திறுப்பார். ஜாங்கிரி மதுமிதா 83-ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளார்.
மதுமிதாவிற்க்கு சிறு வயதிலேயே காமெடி மற்றும் நடிப்பில் நாட்டம் உள்ளதால் 2004-ல் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்சியில் கலந்துக்கொண்டார். பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான மாமா மாப்பிள்ளையில் அனுஷ்கா என்னும் கதாபாத்திர்த்திலும், பின் பொண்டாட்டி தேவை என்னும் சிரிப்பு மெகாத் தொடரில் நந்தினி என்னும் கதாபாத்திர்த்தில் நடித்துள்ளார்.
அதன் பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான அத்திப்பூக்கள் என்னும் மெகாத் தொடரில் பானு என்னும் கதாப்பாத்திரத்திலும் சித்ரா என்னும் கதாப்பாத்திரத்தில் அழகியிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சிரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2012-ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்னும் செல்ல பெயரில் சந்தானத்திற்கு ஜோடி யாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பின் 2012-ல் ஜீ தமிழில் மை நேம் ஸ் மங்கம்மா என்னும் சீரியலில் சீதா என்னும் கதாப்பாத்திரத்திலும், பின் 2013-ல் கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனில் கௌசல்யா என்னும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
2014-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா-3 ல் பப்பு வாக நடித்திருக்கிறார். சமிபத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருடன் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்க்கு சொந்தக் காரியாக நடித்திருப்பார்.
இதற்கிடையில் பட வாய்ப்புகள் வர வர அதிலும் காமெடி ரோலில் வெளுத்துக் கட்டி வருகிறார் ஜாங்கிரி மதுமிதா. சமிபத்தில் தான் நம் மதுவிற்க்கு தன் தாய்மாமாவின் மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயல் என்பவருடன் இந்த வருடம் பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணமான 4 மாதத்திற்க்குள் விஜய் டிவியில் ஒளிப்பரபாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் ரியலிட்டி ஷோ வில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டு வருகிறார்.
பிக்பாஸில் தர்ஷன் கவின் குறித்து பேசிய நிலையில் அவர் சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளனர் கவின் ரசிகர்கள். பிக்பாஸில் நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் நள்ளிரவில் நீ லாஸ்லியாவிடம் எப்படி பேசலாம் என தர்ஷன், கவினை பார்த்து கேட்டார்.
இது கவின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அதாவது பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நீ முதலில் ஒழுங்கா என அவர்கள் கேள்வி கேட்டதும் மட்டுமில்லாமல் தர்ஷன் செய்த செயலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நள்ளிரவு 1.30 மணிக்கு தர்ஷன் ஷெரீனுடன் பேசி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதோடு நீ முதலில் சரியாக இல்லாமல் யோக்கியன் மாதிரி மற்றவர்களுக்காக குரல் கொடுக்காதே என பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த புதிதில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த லாஸ்லியா. தற்போது ஓவர் ஆட்டிட்யூடை காட்டி வருகிறார்.
அவரிடம் பேசவே மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அஞ்சுகின்றனர். கமல் வரும்போது தனக்கு கைத்தட்டல்கள் அதிகமாக இருப்பதால் லாஸ்லியா ஓவர் திமிரில் ஆடி வருவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
செம கடுப்பு என்ன கேட்டாலும் பேசினாலும் எனக்கு அவஷியம் இல்லை அவஷியம் இல்லை என்றே கூறி வருகிறார் லாஸ்லியா. இதனால் அவர் மீது செம கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்.
மேலும் லாஸ்லியா ஓவியாவை போல் நடிப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. கூடவே கவினுடனும் லாஸ்லியா வழிந்து வருகிறார் லாஸ்லியா. அது சுத்தமாக மக்களுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அவரை மிக்ஸர் திண்பதாக கிண்டலடித்து வருகின்றனர். மேலும் லாஸ்லியாவை லூஸ்லியா என்றும் அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்நிலையில் இன்றைய புரமோவில் வெளியான லாஸ்லியாவின் படத்தை போட்டு லூசுலியா திங்கிங்:- ‘ஐயோ இந்த சிட்டுவேஷன்ல ஓவியா என்ன பண்ணுவானு தெரியலையே’ என பதிவிட்டுள்ளனர். லூசுலியா ஆர்மி என்ற பெயரில் இந்தபடம் பதிவிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் மொட்ட கடிதாசி டாஸ்க்கில், சாண்டிக்கு வந்த கடிதத்தில், நீங்கள் நடனம், காமெடி என்று இருக்கிறீர்கள், உங்களுக்கு அன்பு, காதல் எதுவும் இல்லையா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு சாண்டி இப்படி ஒரு கேள்வி வந்ததால், என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பகிர்கிறேன், எனக்கு எல்லாம் இப்போது என் மனைவி என் குழந்தை என்று நான் கூறுகிறேன், ஆனால் முன்பெல்லாம் நான் இப்படி கிடையாது.
என் மனைவியை கண்டால் நான் கண்டு கொள்ளமாட்டேன், வீட்டில் எங்கள் அப்பா-அம்மாவிற்கு சண்டை நடந்தால் கூட, கொஞ்சம் தள்ளி போய் சண்ட போடுங்க என்று தான் சொல்வேன், என்னை பொறுத்தவரை நான் பிரியாக இருக்க மட்டுமே நினைப்பேன்.
அதே போன்று தான் என் மனைவி சின்ன சின்னதாக யாரிடமும் சண்டை போட்டால், அவள் என்னிடம் வந்து சொல்வாள், நான் அவளிட நீ சண்டை போட்ட, நீ போ என்கிட்ட வராதே என்று கூறுவேன்.
அவள் அழுதால் என்றால் மூக்கில் இரத்தம் வழியும், இந்த பிரச்சனை இருப்பது எனக்கு தெரியும், ஒரு முறை அப்படி தான் அவளை ஏதோ கோபத்தில் திட்டிவிட்டேன், இதனால் அவளுக்கு மூக்கில் இரத்தம் அதிகம் வந்துள்ளது.
அதைக் கூட நான் கவனிக்காமல் இருந்தேன், அப்போது அவள் அம்மா வந்து என்னை அழைத்து கொண்டே இருந்தார். எதுவா இருந்தாலும் இப்போ சொல்லுங்க, இங்கே சொல்லுங்க என்று கூறினேன்.
அதன் பின் தன் உண்மை தெரிந்து அங்கே போகிறேன் அவள் வைத்திருந்த டவளில் அவ்ளோ இரத்தம். அதை கண்டவுடன் மனம் மாறினேன், அவளுக்காக வாழவேண்டும் நினைத்தேன்.
ஆனால் அவள் அப்போதும் என்னை நம்பவில்லை, பல முயற்சிகள் எடுத்தேன் எல்லாம் தோல்வியில் முடிந்தது. அப்போது அவள் என்னிடம் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும் என்றெல்லாம் சத்தியம் கேட்டாள், அதை செய்து கொடுத்தேன் அதன் பின் தான் சகஜமானோம் என்று கண்கலங்கினார்.
அப்படி இருந்த சாண்டி இப்படி மாறுவதற்கு முக்கிய காரணம் என் மனைவி தான் அவளுக்கு ஐ லவ் யூ, அதுமட்டுமின்றி, வீட்டிற்கு சென்றவுடன் நானே இனி எல்லா வேலையும் செய்வேன், பிக்பாஸில் அவ்ளோ கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று வெறும் கண்ணீராகவே இருந்தது என்று கூறலாம், விளையாட்டு வினையாகி போனது என்பது தான் உண்மை. கவீன் விளையாட்டுத்தனமாக அனைத்து பெண்களிடமும் பழக, அதன் பின் அது வேறு மாதிரி சென்று இப்போது, ஷாக்சி,கவீன், லாஸ்லியா என்று ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது.
அந்த வகையில் லாஸ்லியா எனக்கும், கவீனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி யாரிடமும் விளக்க வேண்டிய அவசியமில்ல, ஷாக்சி இப்படி துன்புறுவதற்கு நான் தான் காரணம் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பாத்ருமீற்குள் சென்று அழுதார்.
அப்போது அங்கு வந்த சேரன், ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்ட போது, லாஸ்லியா நீங்கள் என்னிடம் பேச வேண்டாம், நீங்கள் என் பக்கம் நிற்கவில்லை என்று கூறினார்.
உடனே சேரன் நான் அப்படியெல்லாம் கிடையாது, உன் பக்கம் இருக்கும் நியாத்தை நீ சொல், உன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக நீ பேசு என்று தான் கூறினேன் தவறாக நினைத்துவிட்டாய்.
ஒன்றே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறேன், என் உயிரே போனாலும் நான் உன் பக்கம் தான் நிற்பேன தவிர வேறு யாரு பக்கமும் நிற்கமாட்டேன் என்று கூறினார்.
நடிகை காஜல் அகர்வால் மீதான மோகத்தால் 75 லட்சத்தை தமிழக இளைஞர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கணனியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது.
விளம்பரத்தில், நடிகைகளின் ஆ பாச படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கண்டதும் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார். மேலும், தனது தகவல்களையும் அதில் பதிவு செய்துள்ளார். அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த இளைஞர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய 50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.
அதன்படி அந்த இளைஞன் மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.
இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்று இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இது பற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த இளைஞர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த இளைஞர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த இளைஞர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.
அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த இளைஞனின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆ பாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.
உடனே அந்த இளைஞன் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆ பாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக 75 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் பொன்முட்டையிடும் வாத்து என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த இளைஞன் தொடர்ந்து மன அ ழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.
பின்னர் அவர் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று த ற்கொலை க்கு முயன்றார். இதனை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் தனிப்படை கொல்கத்தா சென்று தொழிலதிபரின் மகனை மீட்டுள்ளனர்.
பின்னர் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் பட தயாரிப்பிற்காக சில நபர்கள் பணம் தருவார்கள் என்று சொல்லி எனது கணக்கில் பணத்தை பெற்று சென்றார் என கூறியுள்ளார்.
அதன் பேரில் சென்னையில் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில் நடிகை மோகம் காட்டி ராமநாதபுரம் தொழிவதிபர் மகனிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூ தாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.
எஞ்சிய தொகை சரவணக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. இதனை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார், மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.