பிக்பாஸிலிருந்து வெளியேறிய மீரா இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? செமையாய் கலாய்த்த சாண்டியின் முன்னாள் மனைவி!!

வெளியேறிய மீரா மிதுன்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் குறித்து சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என கூறினார் மீரா.

ஆனால் கமல்ஹாசன் காட்டிய குறும்படத்தில் அவர் முகத்திரை கிழிந்தது. இந்நிலையில் நேற்று மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் சேரனுக்கு எதிராக பொய் புகார் கூறியதால் மீராவுக்கு எதிராக மக்கள் ஓட்டு போட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ரகசிய அறைக்குள் மீரா செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல், சீக்ரட் அறையை ஆரம்பத்திலேயே காட்டிவிட்டதால் அந்த ஆப்ஷனை இந்த வாரம் காட்ட மாட்டங்கன்னு நினைக்கிறேன் என கூறினார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ஆனால் நீங்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூற அதற்கு காஜல், பொருத்திருந்து பார்ப்போம், மீரா நாம் இப்போது போடும் டுவீட்களை கூட பார்த்து கொண்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி தன்னை பற்றி மக்கள் என்ன பேசி கொள்கிறார்கள் என டுவிட்டரில் பார்த்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

லாஸ்லியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய கவீன் : செம காண்டான ஷாக்சி!!

லாஸ்லியா- கவீன்

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைத்து பெண்களிடமும் பழகி காதல் மன்னனாக வலம் வந்த கவீன், அதன் பின் ஷாக்சியிடம் நெருங்கி பழகியதால், அந்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானார்.

பாத்ரூமுக்குள் சென்று கதறி அழுதார். ஆனால் ஷாக்சியோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். இருப்பினும் கவீன் ஷாக்சியிடம் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் மறந்து லாஸ்லியாவிடம் ஜாலியாக பேசி வருகிறார். இதைக் கூட ரேஷ்மா சமீபத்தில் எபிசோடில் ஷாக்சியிடம் கூறினார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிறைக்குள் இருக்கும் அபிராமி பிக்பாஸிடம் நாங்கள் செய்தது தவறு தான் என்று கூறிக் கொண்டிருக்க, அப்போது அருகில் இருந்த லாஸ்லியாவிடம் கவீன், கையை பிடிப்பது கன்னத்தை பிடித்து கொஞ்சுவது போன்று இருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஷாக்சி கவீன் மற்றும் லாஸ்லியாவை செம கோபத்தில் பார்க்கிறார். இதனால் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் அது எப்படியோ கவீனுக்கு ஷாக்சி இல்லைனா? லாஸ்லியா? என்று ஜாலியாக இருக்கிறான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே அப்பார்ட்மெண்டில் 8 பேருடன் : வாய்ப்புக்காக பாகுபலி நடிகை அனுபவித்த கொடுமை!!

பாகுபலி நடிகை

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகை பல்வேறு வகையில் கொ டுமைகளை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக பா லியல் ரீதியான சீ ண்டல்களுக்கு அதிகம் ஆளாவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்திய சினிமாவில் நடிப்பதற்கு வரும் பெண்கள் இதைவிட அதிகமான கொடுமைகளை அனுபவித்து வருவதாக நடிகை நோரா பதேகி கூறியிருக்கிறார்.

கனடாவை சேர்ந்த நடிகை நோரா பதேகி, கார்த்தியின் ‘தோழா’ மற்றும் ‘பாகுபலி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தம் ஆட்டம் ஆடியிருக்கிறார். பெரும்பாலான படங்களில் சிறு வேடங்களிலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வரும் இவர், தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகும் ‘ஸ்ட்ரீட் டான்ஸர்’ இந்தி படத்ஹ்டில் நடித்து வருகிறார்.

தனது திரையுலக வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், பட வாய்ப்புகளுக்காக தான் அனுபவித்த கொ டுமைகளை நோரா பதேகி, பகிர்ந்துக் கொண்டது பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ”இந்தியாவில் வெளிநாட்டவர்கல் வாழ்வது எளிதானதல்ல. நாங்கள் நிறைய கஷ்ட்டப்படுகிறோம். அது யாருக்கும் தெரியாது. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். என்னிடம் இருந்து பணம் பறித்திருக்கிறார்கள்.

என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி என்னை மிக மோசமாக நடத்தினார்கள். அதனால், அந்த ஏஜென்சியில் இருந்து நான் வெளியேற நினைத்த போது, எனது ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மாட்டோம், என்று மி ரட்டினார்கள்.

அடுத்து 8 பெண்களுடன் ஒரே அப்பார்ட்மெண்டில் தங்க வைத்தனர். அந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்த போது அ திர்ச்சியடைந்தேன். எனது பார்போர்ட்டை அங்கிருந்தவர்கள் திருடி விட்டனர். அதனால், என்னால் கனடாவுக்கு செல்ல முடியவில்லை. அங்கு நான் வசித்தது எல்லாம் பெரிய கொ டுமை.

நான் மனதளவில் தயாராகாததால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். பட வாய்ப்புகளுக்காக நான் அனுபவித்த கொடுமைகளை எண்ணி தூங்காமல் தவித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம் தெரியுமா? பழைய அந்த பிரச்சனை தான் காரணம்!!

சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி அங்கிருக்கும் அனைவரிடமும் சகஜமாக பழகி வருகிறார். ஆனால் சேரனிடம் மட்டும் அவர் சகஜமாக பழக முடியாமல், அவரைப் பற்றி பேசினாலே அந்த இடத்தில் இருந்து காணமல் போய்விடுகிறார்.

குறிப்பாக ஷாக்சி, லாஸியா பிரச்சனையின் போது கவீனிடம் சேரன் பேசினார். அப்போது அவர் போன பின்பு சாண்டி என்ன சாத்தான் வேதம் ஓதுச்சா என்று கேட்டார்.

இதை கமல் அப்படியே சேரனிடம் எபிசோடில் போட்டுக் கொடுத்தார், இப்போது வரையும் கூட சாண்டியால் அவரிடம் சகஜமாக பழக முடியவில்லை.

இதனால் இதற்கு என்ன காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சேரனின் இளைய மகளான தாமினி சந்துரூ என்பவரை காதலித்து வந்தார். இதனால் தாமினி அவருடன் செல்ல முடிவெடித்தார்.

ஆனால் இறுதியில் தாமினி மனம் மாறி சேரனுடனே சேர்ந்துவிட்டார். ஆனால் அந்த சந்துரு சூளமேட்டைச் சேர்ந்தவர், அவர் ஒரு நடன இயக்குனர், அதுமட்டுமின்றி சாண்டியின் நெருங்கிய நண்பர்.

தாமினி மற்றும் சந்துருவின் காதலுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். இது போன்ற சமயத்தில் சேரன் ஏதோ கூறிவிட்டு தாமினியை தன்னுடன் வைத்துக் கொண்டதால் அப்போதிருந்தே சேரனை சாண்டிக்கு பிடிக்காதாம், சும்மா தான் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸில் லாஸ்லியாவின் இரட்டை வேடம் : ஆதாரத்துடன் வெளிகொண்டு வந்த நடிகை சுஜா வருணி!!

லாஸ்லியாவின் இரட்டை வேடம்

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3-யில் மக்களால் அதிகம் விரும்பப்பபடும் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடினர். அதன் பின் நாட்கள் செல்ல, செல்ல லாஸ்லியாவிற்கு எதிராகவும்மக்கள் கருத்துகள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பாக டபுள் கேம் விளையாடி வருவதாக பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சுஜா வருநீயுடன் ரசிகர் ஒருவர் லாஸ்லியா குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் டபுள் கேம் விளையாடுவதாக கூறியுள்ளார். மேலும் கிராமத்து டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசி கொண்டிருந்ததாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

குத்து பாடல் நடன நடிகைக்கு நேர்ந்த கொடுமை : வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!!

நோரா பதேகி

பாகுபலி படத்தில் நடித்தவர் இளம் நடிகை நோரா பதேகி. கார்த்தி நடித்த தோழா படத்திலும் குத்துபாடல்களுக்கு நடமாடியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவுரவ வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் கலந்துகொண்டார். கனடாவில் இருந்து சினிமாவில் நடிக்க இந்தியா வந்தவர் மிக மோசமான அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாழ்வது எளிது கிடையாது. கஷ்டங்களை நிறைய அனுபவத்திருக்கிறோம். எங்களிடமிருந்து நிறைய பணம் பறிக்கிறார்கள்.

நானும் அதை இழந்திருக்கிறேன். என்னை இங்கு அழைத்து வந்த ஏஜென்சி மிக மோசமாக என்னிடம் நடந்துகொண்டது. இதனால் இதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஆனால் ஏஜென்சி என்னை என்னுடைய பணம் ரூ 20 லட்சத்தை திருப்பிதர மாட்டேன் என மிரட்டியது.

இதனால் விளம்பரத்தில் நடித்த பணம் ரூ 20 லட்சத்தை இழந்தேன். 8 பெண்களுடன் ஒரு அபார்ட்மெண்டில் இருந்தேன். அங்கு இருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடிக்கொண்டார்கள். அதனால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. பின் ஹிந்தி கற்றேன். ஆடிசன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கோமாளி போல என்னை கேலி செய்தார்கள்.

சீண்டினார்கள். வீட்டிற்கு அழுதுகொண்டே வந்தேன் நீ வேண்டாம் திரும்பி போய்விடு என காஸ்டிங் ஏஜென்ட் கூறினார்கள். நான் இந்த சம்பவத்தை வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என நோரா கூறியுள்ளார்.

மீரா ஒரு சைக்கோ : அன்று எனக்கு நடந்த அநியாயம் : ஒட்டுமொத்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!!

மீரா மிதுன்

பிக்பாஸில் தற்போது மக்கள் அதிகமாக வெறுக்கப்படும் போட்டியாளர் என்றால் மீரா மிதுன் என்றே கூறலாம். இந்த வாரம் இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது மீரா மிதுனைக் குறித்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவருடன் நடனமாடிய சைப் அலி கான் பல உண்மைகளை கூறியுள்ளார். மீரா மிதுன் ஒரு சைக்கோ என்று கூறியுள்ள அவர், தற்போது சேரன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை என் மீது வைத்ததை ஜோடி ப்ரொமோ காட்சியில் அவதானித்திருப்பீர்கள்.

அதுமட்டுமின்றி அத்தருணத்தில் நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றும் அளவிற்கு அவரது குற்றச்சாட்டு இருந்தது. மீரா இன்னும் இரண்டு வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் கமல் சாரே இந்நிகழ்ச்சியை விட்டு கட்டாயம் வெளியே வந்துவிடுவார் என்றும் அவ்வாறு வந்ததும் எனது வீட்டிற்கு வந்து எப்படிடா அந்த பெண்ணுடன் நடனமாடின என்று கட்டாயம் கேட்பார்.

மேலும் 15 பேர் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை சமாளிக்க முடியாமல் தவிக்கும் இத்தருணத்தில் நான் ஒற்றை ஆளாக இருந்து சமாளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சேரனைக் குறித்து பேசுகையில், இப்படியொரு நபரை குற்றம் சொல்வதற்கு எப்படி மனது வருகின்றது. அவருடன் வேலை செய்வதற்கு பல பிரபலங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்வி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவருக்கு கொடுக்கப்படும் செக் கூட அந்த பெயரிலேயே தான் செல்லும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

சின்னத்தம்பி சீரியல் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?

பாவனி ரெட்டி

சின்ன தம்பி சீரியலில் நந்தினியாக நடித்து வளம் வந்தவர் பாவனி ரெட்டி அவர்க்கு கூடிய விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது இவர் விஜய் டிவி தொடரில் வெளிவந்த ரெட்டை வாள் குருவி, சின்ன தம்பி மற்றும் தெலுங்கு சீரியல்கள் போன்ற தொடர்கலில் நடித்திருக்கிரார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி ப்ரதீப் என்றவருடன் திருமணம் நடந்தது. பாவனி ரெட்டி மற்றும் ப்ரதீப் இருவரும் சன் டிவி தொடர் பாசமலர் என்னும் சீரியலில் (2013-2016) ஜோடியாக நடித்தார்கள்.

அதன் பின் அந்த தொடரிலேயே இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு காதலித்து வந்தார்கள். அதன் பின் பெற்றோர்கள் சம்மத்துடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி அன்று பாவனியின் கணவர் த ற்கொ லை செய்துக்கொண்ட செய்தி பாவனிக்கும் அவர்களது ரசிககளுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் அ திர்ச்சியையும் வேதனையை தந்தது.

அச்சம்பவத்திலிருந்து வெளிவந்த பாவனி விஜய் டிவி தொடர் சின்ன தம்பி என்னும் சீரியலில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் பாவனி ரெட்டி சமீபத்தில் தனக்கு இரண்டாம் திருமணம் நடக்க போவதாக தெறிவித்துள்ளார்.

இவருக்கு மாப்பிள்ளையாக வர இருப்பவர் பாவனி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் பியூ ஆனந்த் ஆவர். இவர்கள் திருமண தேதியும் உறுதியாகி உள்ளது. இந்த செய்தி பாவனியின் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

மீராவிற்கு செம ஆப்பு அடித்த மக்கள் : இந்த வாரம் வெளியேறுவது யார்?

மீராவிற்கு செம ஆப்பு

பிக்பாஸ் வீட்டில் நடந்த நாட்டாமை டாஸ்க்கின் போது, சேரன் என்னுடைய இடுப்பை இழுத்துவிட்டார் என்று கூறி மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கினார்.

இதனால் ஒன்னும் இல்லாத விஷயத்தை இந்தளவிற்கு ஊதி பெரிதாக்கியிருக்க வேண்டாம், அல்லது அவரை தனியாகவாக அழைத்தாவது பேசியிருக்கலாம், ஏன் இப்படி இந்த மீரா டிராமா செய்கிறாள் என்று மக்கள் திட்டம் ஆரம்பித்துவிட்டனர்.

திட்டியதோடு மட்டுமின்றி, அந்த கோபத்தை ஓட்டு போடுவதிலும் காண்பித்துள்ளனர். நேற்று முன் தினம் வரை ஷாக்சி தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் இன்று அதை பார்த்தால்,

அப்படியே ஷாக்சி ஒரு இடம் முன்னேறியும், அந்த இடத்தில் இருந்த மீரா தற்போது கீழே இறங்கியுள்ளார். இதனால் ஷாக்சி இந்த வாரம் காப்பாற்றப்பட்டு, மீரா வெளியேற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரிகிறது.

அடிச்சு சாவடிச்சுருவேன் டி…. ஷாக்சியை அடிக்கப்போன கவீன் : ஏன் தெரியுமா?

கவீன்

பிக்பாஸ் விட்டில் நேற்று நாட்டாமை டாஸ்க்கில் யார் நன்றாக செய்தார்கள் என்று 2 பேரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், அப்படி தேர்வு செய்யப்படும் 2 பேர் தலைவர் பதவிக்கும் நிற்கப்படுவர் என்றும், நன்றாக டாஸ்க் செய்யாத 2 பேர் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் பிக்பாஸ் கூறினார்.


அதன் படி நாட்டாமை டாஸ்க் நன்றாக செய்தவர்கள் மீரா, ஷெரீன் தான் என்று சிலர் கூற, உடனே அங்கிருந்த மதுமிதா, சேரன், ஷாக்சி போன்றோர் அப்போ நாங்கள் எல்லாம் சரியாக பண்ணவில்லையா என்று கோபப்பட்டனர்.

அதில் ஒரு கட்டத்தில் கவீன், ஷாக்சியிடம் மொழிப்பிரச்சனை இருந்தது என்று கூறியதால், அவரிடம் வந்து ஷாக்சி நான் என்ன சுவாரஸ்யமாக டாஸ்க்கை செய்யவில்லை என்று திரும்ப… திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் கவீனோ நான் சுவாரஸ்யத்தைப் பற்றி பேசவில்லை, மொழிப்பிரச்சனையை பற்றி அதாவது கிராமத்து மொழி போன்று பேசவில்லை என்று விளக்கினார்.

ஆனால் ஷாக்சி மீண்டும்…மீண்டும் அதைப் பற்றியே கேட்டதால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த கவீன், அடிச்சு சாவடிச்சுருவேன் டி என்று கை நீட்ட ஷாகி அழுது கொண்டே அங்கு பலர் இருக்கும் போது இவன் ஏன் இப்படி கூறினான் என்று கதறி அழுதார்.