ஆமா நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன் : காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா!!

காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே நிகழ்ச்சியில் சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.

இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா – கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ் : கைதாகும் முக்கிய போட்டியாளர்?

மீரா மிதுன்

பிக் பாஸ் 3ல் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனிடம் விசாரணை நடத்த போலீஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பிக்பாஸ் செட் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் தமிழ்நாடு 2019 நடத்துவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் வந்த நிலையில் அது பற்றிய விசாரணை தான் போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

மீரா மிதுன் கைத்தவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

Actress Meera Mithun Hot Photoshoot HD Wallpapers

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன் : இவ்வளவு சோகமா?

வாழ்க்கையையே இழந்த சேரன்

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி.

இதில் இளைய மகள் தாமினி சேரனின் பேச்சை கேட்காமல் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனையினால் சேரன் முழுவதுமாக மனம் உடைந்துவிட்டராம்.

இதிலிருந்து மீளவே அவருக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கே பல வருடங்கள் ஆகியுள்ளது. இதனால் தான் அவரால் முன்பு கொடுக்கப்பட்ட ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தற்போது கொடுக்க முடியவில்லையாம். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருமணம் படமும் அவ்வளவாக ஒடவில்லை.

இதையெல்லாம் மறக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். இதையே அவரது நண்பர் இயக்குனர் சமுத்திரகனியும் கடந்த மாதம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மீராவின் இடுப்பை பிடித்து தூக்கிய சேரன் : புதிய சர்ச்சை!!

புதிய சர்ச்சை

பிக்பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் இல்லாத போது போட்டியாளர்களான் சேரன், லாஸ்லியா, மதுமிதா மற்றும் சிலர் விளையாட்டுத்தனமாக ஓடி விளையாடினர்,

அப்போது லாஸ்லியா, மீரா ஆகியோர் ஓடிய போது, சேரன் மீராவின் இடுப்பை பிடித்து தூக்கியுள்ளார். இந்த விளையாட்டு டாஸ்க் முடிந்த பின்னர் மீரா, சேரன் என்னுடைய இடுப்பை பிடித்து தூக்கினார்.

இதனால் எனக்கு ஒரு மாதிரி இருந்தது என்று அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சேரன் நான் அப்படி செய்திருந்தால், என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

அதற்கு மீராவோ நீங்கள் வேண்டுமென்றே பண்ணீனார் என்று கூறினார். இதனால் மிகுந்த வேதனையடைந்த சேரன் எனக்கு மகள்கள் இருக்கிறாள். ஒரு டைரக்டராக நல்ல பெயர் உண்டு, மகள்கள் இருக்கிறாள் என்று கதறி அழுதார்.

மெர்சல் நடிகை நித்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நடிகை நித்யா மேனன்

விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை விதித்த நாடு : கடும் வருத்தத்தில் ரசிகர்கள்!!

கடாரம் கொண்டான்

நடிகர் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

மலேசியாவில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாகவில்லை.

Film Censorship Board of Malaysia இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது என படத்தை விநியோகிக்கும் லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு உள்ள ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!!

பிரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் அடுத்தடுத்து பல பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

அந்த வகையில் இவர் சினிமாவில் நடிக்க வந்த போதிலிருந்து தற்போது வரை ஹோம்லியான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகின்றார்.

ஆனால், தன் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் போஸ் தான் செம்ம ஹாட் தான், அப்படி ஒரு புகைப்படம் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ..

சிம்பு வசம் சென்ற பிக் பாஸ் காதலி : வைரலாகும் நெருக்கமான புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் நேற்று முன்தினத்துடன் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், புதிய போட்டியாளர்களை களம் இறக்க பிக் பாஸ் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலிப்பதாக கூறி நடிகை சனம் ஷெட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, தர்ஷனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சனம் ஷெட்டியின் இந்த பேட்டியால் தர்ஷன் மீது ரசிகர்களின் பார்வையும் பட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், சிம்புவை சமீபத்தில் சந்தித்த சனம் ஷெட்டி, பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் பேசியதோடு, சிம்புவுடன் நெருக்கமாக புகைப்படம் எத்துக் கொண்டு அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்க்தை பார்த்து கலாய்க்க தொடங்கியிருக்கும் நெட்டிசன்கள், “தர்ஷனை காதலிப்பதாக அறிவித்த சனம் ஷெட்டி, அதற்குள்ளே சிம்பு வசம் சென்றுவிட்டாரே” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். வைராகி வரும் அந்த புகைப்படம் இதோ,

பிக் பாஸில் புது போட்டியாளராக களம் இறங்கும் பிரபல நடன இயக்குநர்!!

பிரபல நடன இயக்குநர்

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

கடந்தவார எலிமினேஷன் ரவுண்டில் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து புதிய போட்டியாளர்களாக யார் களங்க இறப்போகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். விரைவில் புதிய போட்டியாளர்களை களம் இறக்கும் முணைப்பில் நிகழ்ச்சி குழுவும் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 நேற்று தொடங்கியது. நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் இதில் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக உள்ள பாபா பாஸ்கரும் இடம் பிடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் பாபா பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா இடத்தை பிடிக்க அமலா பால் கொடுத்த விலை!!

அமலா பால்

விவாகரத்துக்குப் பிறகு நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் பேரார்வமாக இருக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையோடு வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அமலா பால், சம்பள விஷயத்திலும் சில சலுகைகளை வழங்க ரெடியாக இருக்கிறாராம். அவரது இத்தகைய கனவை நினைவாக்குவது போல அவருக்கு கிடைத்த படம் தான் ‘ஆடை’.

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பால், அப்படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அனைத்தும் தன்னையே தேடி வரும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததோடு,

தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பதோடு, ஹீரோயின் சப்ஜக்ட் படங்களில் அதிகமாக நடிக்கும் நயன்தாராவின் இடத்தையும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு ஆடை கொடுத்திருந்தது.

இதற்கிடையே, 19 ஆம் தேதி வெளியாக இருந்த ஆடை படம், தயாரிப்பாளரின் கடன் பிரச்சினையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பதறிய அமலா பால், படம் வெளியானால் தான் தனது கனவு நினைவாகும் என்று படத்தின் மீதான பிரச்சினை தீரும் வரை படக்குழுவினருடனே பயணித்தவர் ஒரு கட்டத்தில்,

பணம் தான் பிரச்சினை என்பதை அறிந்தவர், தனது சொந்த பணம் சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் வழங்கி பிரச்சினையை தீர்த்து படம் வெளியாக உதவி செய்ததாக கூறப்படுகிறது. அமலா பால் நம்பியிருந்த ‘ஆடை’ அவரை நயன்தாரா இடத்திற்கு கொண்டு செல்கிறதா இல்லையா, என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.